Posts

Showing posts with the label சினிமா வியாபாரம் பாகம் -2

சினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாகம்

கடந்த சில வருடங்களுக்கு முன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த, குற்றம் சாட்டிக் கொண்டிருந்த விஷயம் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களையும் முதல்வரின் குடும்பமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றார்கள். ஆனாலும் அன்றைய காலத்திலும் வாரத்திற்கு எட்டு படங்கள் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டுதானிருக்கிறது.  சரி அதுதான் ஆட்சி மாறிவிட்டதே சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கிடைக்கிறது சென்ற ஆட்சியில் கிடைத்தது போலவே பெரிய படங்களுக்கு நடுவில் இரண்டு காட்சிகளோ, ஒரு காட்சியோ, அல்லது மொத்தமாய் ஒரு நாளோ ஓடுகிறார்ப் போல கிடைக்கிறது. சென்ற ஆட்சியில் ஒரு குடும்பமே ஆக்கிரமித்திருந்தது என்று சொன்னவர்கள் இன்று யாரைச் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்

தமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.

சினிமா என்பதே கேளிக்கைதானே? தனியாக என்ன தமிழ் சினிமா கேளிக்கைகள் என்று சிலர் கேட்கலாம். சினிமாவை பார்பவர்களாகிய நமக்கு வேண்டுமானல் சினிமா கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அதை தயாரிப்பவர்களுக்கு, இயக்குபவர்களுக்கு, அதையே தன் வாழ்வாதாரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது வெறும் கேளிக்கையல்ல வாழ்க்கை.

தமிழ் சினிமா வாழ்கிறதா? - சினிமா வியாபாரம்.

தமிழ் சினிமா உலகின் பெரிய குற்றச்சாட்டே கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிகளின் ஆக்கிரமிப்பினாலும், சன்னின் ஆதிக்கத்தினாலும் ஒடுங்கிவிட்ட்தாக புலம்பிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு காரணத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆம் தமிழ் சினிமா இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வாழ்கிறதா? என்ற கேள்வியை முன் வைத்தால் இன்றைய நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நிச்சயம் இது சார்புடய கருத்து என்று நினைக்காதீர்கள். நிச்சயம் இல்லை. மற்றவர்கள் எல்லாரும் சொன்னது போல நிச்சயம் ஏதேனும் மாறுதல் வரும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்த்துப் போய்விடப் போகிறது என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதற்கான காரணங்களும் நிறைய இருக்கவேத்தான் இப்படிச் சொல்கிறேன்.

மங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.

Image
எந்த நேரத்தில் மங்காத்தா என்று சூதாட்டப் பெயரை வைத்தார்களோ? ஒரே ஆட்டமாய்தான் இருக்கிறது. மங்காத்தாவை ஆளாளுக்கு கை மாற்றி விட்ட குழப்பம் ஒரு வழியாய் முடிந்து மீண்டும் சன்னிடமே வந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் விஷயமே வேறு. முதலில் மங்காத்தா படத்தை துரை தயாநிதியே வெளியிட நினைத்து தியேட்டர்களை புக் செய்ய முனைந்த போது துரை தயாநிதியின் முந்தைய படங்களான, வா குவாட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களினால் அடைந்த நஷ்டத்தை சரிகட்டினால்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.

சினிமா வியாபாரம் – கதை திருட்டு.

இன்றைய இணைய உலகம் முழுவதும் எல்லோராலும் விவாதிக்கப்பட்டு, வசைபாடப்பட்டு, கற்பனை வறட்சி, கருத்து திருட்டு, என்றெல்லாம் காரி உமிழ்ந்தும்.. அதனால் என்ன? நீங்கள் எல்லாம் ஒலக அறிவாளிகள். நாங்க லோக்கல் எங்களுக்குத்தான் இம்மாதிரியான விஷயங்கள். நல்லாருந்தா ஓகேன்னு ஒரு கோஷ்டியும், அவன் இதை திருடினான். இவன் இதை திருடினான்னு ஆளாளுக்கு புலம்பிட்டிருக்கிற நேரத்தில ஒலகத்தில எத்தன இடங்களில் இது பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை? ஆனால் ஒரு வெற்றி அதன் ரிஷிமூலத்தை, நதிமூலத்தை ஆராய சொல்கிறது. இதே ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தை ஒரு தோல்வி கொடுத்திருக்குமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இன்றைய தெய்வதிருமகள் பட விஷயமும்.

சினிமா வியாபாரம்-2- டி.டி.எஸ்

Image
பகுதி 13 டால்பி டிஜிட்டல் தன் இருப்பை அமெரிக்க திரையரங்குகள், மற்றும் ஹோம் வீடியோ செக்டர் எனப்படும், டிவிடி, லேசர் டிஸ்குகளிலும் சப்போர்ட் செய்ய.. அப்போதுதான் டால்பிக்கு போட்டியாய் டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டம்ஸ் என்கிற கம்பெனி உருவானது. மேற்ச் சொன்ன பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கம்பெனி பின்னாளில் டிஜிட்டல் இன்கார்பரேஷன் என்றானது.

சினிமா வியாபாரம்-2-12- Dolby Digital

Image
பகுதி12     அந்த பெரிய படம் என்ன என்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். தமிழின் முதல் டால்பி டிஜிட்டல் படம் கமலின் “குருதிப்புனல்” தான் என்பதில் ஐயமே வேண்டாம். டால்பி டிஜிட்டலுக்கும், டி.டி.எஸ்சுக்கும் வித்யாசம் தெரியாத அறிவிலிகளுக்கும், முட்டாள்தனமான மூர்கர்களுக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றாலும் தகவல் பிழை என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு தகவலில் பிழை சொல்ல வேண்டுமென்றால் அதைப் பற்றி அடிப்படை அறிவாவது வேண்டும். சரி விடுங்கள் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்.

சினிமா வியாபாரம்-2-11

பகுதி 11 ஆம் தமிழ் சினிமா தொலைக்காட்சியின் பின்னே அமிழ்ந்து போயிருக்கக் கூடிய அபாயத்தை காப்பாற்றிய பெருமையில் நிச்சயம் கமலுக்கு பெயர் உண்டுதான்.

சினிமா வியாபாரம்-2-9

ஆம் ஒரு பெரிய கூட்டமேதானிருந்தது. என்பதுகளில் நடுவிலிருந்து, தொண்ணூறுகள் வரை, கே.ஆர் என்றழைக்கப்படும், கோதண்டராமன், டி.ஆர்.பாலுவின் சில்வர் ஸ்கீரீன்ஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கோவை போன்ற ஏரியாக்களில் சக்தி பிலிம்ஸ் என்று ஒவ்வொரு ஏரியாக்களுக்கும் ஒரு பெரிய விநியோகஸ்தர்கள் இருந்தார்கள்

சினிமா வியாபாரம்-2-8

பகுதி-8 ஒரு திரையரங்கு வெற்றிகரமாய் நடத்த தொடர்ந்து வெற்றிப்படங்களை, பெரிய நடிகர்கள் நடித்த படங்களை வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும் போது அந்த தியேட்டருக்கென்று ஒரு தனி மரியாதை மக்களிடையே ஏற்படும். தொடர்ந்து வெற்றிப் படங்களை போட்டால்தான் தியேட்டருக்கும் லாபம்.

சினிமா வியாபாரம்-2-7

பகுதி 7 புதிய திரைப்படங்கள் வரும் போதுதான் இம்மாதிரியான கட்சிகள், கட்சி ஆட்கள் இருக்கிறார்கள் என்பதே தெரியும். பெரிய கட்சிக்காரர்கள் எல்லாம் முடிந்தவரை டிக்கெட் வாங்கிவிடுவார்கள். ஆனால் அவர்களின் அல்லக்கைகள் தான் பிரச்சனை. லெட்டர் பேட் கட்சிக்காரர்கள் காசு கொடுக்காமல் படம் பார்க்க விரும்புவார்கள். முதலிலேயே அவர்களை எதிர்கொள்ள  பழகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால். தியேட்டர் அதோகதிதான். தினமும் இருபது பேராவது ஓசியில் படம் பார்க்க வருவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தியதால் சில பல லோக்கல் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். உதாரணமாய் டிக்கெட் கொடுக்க நேரமாகிறதென்று அங்கிருக்கும் கதவுகளை அடிப்பது, எதாவது கலாட்டா செய்வது, தியேட்டரில் வந்து சேரின் மீது ஏறி குதிப்பது, குடித்துவிட்டு வந்து வாந்தியெடுப்பது என்று பல இம்சைகள் வரும். அப்போது நம் நடவடிக்கைகளையும் கொஞ்சம் கடுமையாய் காட்ட வேண்டியிருக்கும். நம்மிடம் உள்ள விசுவாசிகளை அதற்கு பயன் படுத்த வேண்டும். அவர்களை விட்டு பிரச்சனை செய்பவர்களை கையாள சொல்லிவிடுவோம். பின்பு அது லோக்கல் ஸ்டேஷன் வரைக் கூட போகும் அப்போது அங்கு வைத்து பஞ்சாயத்து செய்ய, வந...

சினிமா வியாபாரம்-2

பகுதி-5 அறுபது டூ ஷீட், நாற்பது ஃபோர் ஷீட், தியேட்டர் வாசல் மற்றும் முக்கிய ஜங்க்‌ஷனில் 20 சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் இல்லாமல் 20 சிங்கிள் ஷீட் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் இல்லாமல் போய்விட்டதா? எப்படி என்றே எங்களுக்கு புரியவில்லை. அதற்கு முன் உங்களுக்கு ஒன்று புரியவைக்க வேண்டிய விஷயம் இந்த டூ, சிக்ஸ், ஃபோர் ஷீட் என்றால் என்ன என்பதை பற்றி. ஒன்றுமில்லை முப்பதுக்கு நாற்பது என்கிற அளவில் டிசைன் செய்து போடப்படும் போஸ்டருக்கு பெயர் தான் சிங்கிள் ஷீட் போஸ்டர். சிங்கிள் ஷீட் தான் அடிப்படையான அளவு. அதை விட பெரிதாக அடிக்க, இரண்டு, நான்கு, ஆறு என்று இரட்டைப்படையாய் அடித்து ஒட்டுவோம். போஸ்டர் பெரிதாக பெரிதாக படத்தை பற்றிய விளம்பரம் மக்களிடம் போய் சேரும். அதில் முக்கியம் அதன் மேல் ஒட்டப்படும் சிலிப் எனப்படும் செவ்வக பிட் நோட்டீஸ். அது ஒரு ஸ்டாண்டர்ட் சைஸ்தான். போஸ்டரில் படத்தை பற்றி மட்டுமே இருக்கும். அதன் மேல் எந்த தியேட்டரில், எத்தனை காட்சிகள் என்று ஒரு அறிவிப்பு இருக்கும் அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் பெயர்தான் சிலிப். பப்ளிசிட்டிக்கு மிக முக்கியம் போஸ்டர். பேப்பர் விளம்பரத்துக்கு பி...

சினிமா வியாபாரம்-2-4

Image
பகுதி-4 ஆமாம் நண்பர் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் சந்தோஷம் கொடுக்கத்தான் செய்தது. ஒரு புதிய பட நிறுவனம் தயாரித்த படமொன்றை நண்பர் ஒருவர் வாங்கியிருப்பதாகவும், சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் அலைவதாகவும் சொன்னார். அது முரளி நடித்த மனுநீதி என்கிற படம். இன்றைய பிரபல நடிகராய் இருக்கும் தம்பி ராமையா இயக்கிய படம். மறைந்த நடிகை பிரதிக்யுஷா அறிமுக மான படம் என்றும் நினைக்கிறேன். உடனடியாய் அந்த விநியோக கம்பெனிக்கு போனவுடன், எங்களை வரவேற்றவர், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் சுரத்து குறைந்துவிட்டார். அவர் சொன்னதும் கடைசி காலங்களில் பிட்டு படங்கள் வெளியிட்டதால் முகம் சுளித்தார். அதனால் தான் யோசிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவர் கொஞ்சம் பிகு செய்வதாய் தான் தெரிந்தது. என் நண்பரிடமும், வாத்தியாரிடமும் லேசாக சைகை காட்டிவிட்டு.. சரி விடுங்க சார்... என்று கிளம்ப எத்தனித்த போது.. அவர் வாத்தியாரை பார்த்து.. என்ன சார் கோச்சிட்டு போறாரு.. இப்படி கோவப்பட்டா நம்ம தொழிலுக்கு ஆவுமா? உட்காருங்க.. என்றார்.. எனக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் கூத்தாடியது. நான் போட்ட கணக்கு ஒர்க்கவு...

சினிமா வியாபாரம்-2

பகுதி-3 பழைய தியேட்டரை புதுசாக்கி, பளபளவென மாற்றியாகிவிட்டது. புது படம் போட்டால் தானே ஒரு கவுரதையாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டரே.. செகண்ட் ரிலீஸ் செண்டர் என்று பெயர் பெற்று, கடைசியாய் பிட்டு படம் போடும் நிலைக்கு வந்திருக்கும் போது நாங்கள் பொறுப்பெடுத்துள்ளதால், அதை எப்படியாவது அந்த இழிப் பெயரிலிருந்து வெளி கொணர்ந்தே ஆக வேண்டும் என்ற சூளுரையை எங்களுக்குள் இட்டுத்தான் தியேட்டரை எடுக்கும் ஆட்டத்தில் இறங்கினோம். அது மட்டுமில்லாமல், பக்கத்தில் இருந்த காசி, உதயம், போன்ற தியேட்டர்களுக்கு போட்டியாக ஒரு செண்டரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் ஆழ இருந்ததால் புதுப் படம் தான் போட்டாக வேண்டும் என்று ஒரு பெரிய படத்துக்கு முயற்சி செய்தோம். ஆனால் ரிசல்ட் பூஜ்யம்தான். எங்களின் ஆலோசகர், காட்பாதர் தான் எங்கள் தியேட்டரின் கன்பர்மேஷன் செய்யும் பணியில் அமர்த்தியிருந்தோம். ஒரு தியேட்டரை திறம்பட நிர்வகிக்க, முக்கிய ஆட்களில் இந்த கன்பர்மேஷன் செய்யும் ஆளும் ஒருவர். அவர் தான் நம் தியேட்டருக்கும், விநியோகஸ்தர்களுக்குமான பாலம். அதென்ன கன்பர்மேஷன்? அது வேறொன்றுமில்லை இந்த வார...

சினிமா வியாபாரம்-2

பகுதி-1 சினிமா தியேட்டரை வெளியிலிருந்து பார்க்கும் போது எப்போதும் பிரம்மிப்பாகத்தான் இருக்கும். ஜே..ஜே என கூட்டமிருக்கும் இடமாகவும், ஸ்டாலில் விற்கும் பண்டங்களின் விலையை பார்த்து, தீபாவளி அன்று சாப்பிட்டுவிட்டு தியேட்டருக்கு போனாலும், இடைவேளையில் பாப்கார்ன் சாப்பிடவில்லையென்றால் கலாச்சாரக் கேடு என்பது போன்ற எண்ணத்தில் அவர்கள் கொடுக்கும் டகால்டி கூம்பில் போலியாய் வழியும் கார்ன்களை திட்டிக் கொண்டே சாப்பிட்டுவிட்டு, அள்ளுறான்யா.. தலைவர் படம் போட்டு வசூலேயும் அள்ளுறான். ஸ்டாலேயும் ஒரு அள்ளு என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அந்த கூட்டம், நெருக்கடி எல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நிச்சயம் நம்ப மாட்டீர்கள். ஏன் நானே தியேட்டர் நடத்தும் குழுமத்தில் ஒருவனாக போகும் வரையில் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஒரு வெற்றிகரமான திரைப்படத்தை கொடுப்பதற்கு என்ன கஷ்டங்கள் இருக்கிறதோ.. அதற்கு ஈடான கஷ்டம் ஒரு நல்ல திரையரங்கை நிர்வகிப்பதில் இருக்கிறது. ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் தான் தமிழகத்தில் ஏன் இந்தியாவெங்க...

சினிமா வியாபாரம்-பாகம் 2

Image
மீண்டுமொரு முறை குறுகிய காலத்தில் ஐம்பதாயிரம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய வாசகர்கள்.. பதிவுல நண்பர்களுக்கு நன்றி..நன்றி..நன்றி..கேபிள் சங்கர். எந்திரன் படம் வெளிவரப் போகிறது என்பதற்காக அவசரப்பட்டு தங்கள் படங்களை ரிலீஸ் செய்த படத் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.. இப்படத்துடன் நாம் மோதினால் தாக்கு பிடிக்க முடியாது என்று தங்கள் ரிலீஸை தள்ளிப் போட்ட தயாரிப்பாளர்களும் உண்டு. எது வந்தால் என்ன நல்ல படம் ஓடும். நம்ம படம் சூப்பர் படம் நிச்சயம் ஓடும் ஆனா தியேட்டர் தான் கிடைக்க மாட்டேனென்கிறது. என்று புலம்பித்தள்ளிய தயாரிப்பாளர்களின் புலம்பல் தான் பெரிய பிரச்சனையாய் தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது. அதான் ஊர்பட்ட தியேட்டர்கள் இருக்கிறதே? புதிது புதிதாய் மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படுகிறதே? ஒவ்வொன்றிலும் ஐந்து, பத்தென தியேட்டர்கள் ஆரம்பிக்கப்படுகின்றதே? பின்பு எப்படி தியேட்டர் கிடைக்க மாட்டேனென்கிறார்கள்? என்று ஒரு பக்கம் சில பேர் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் மல்ட்டிப்ளெக்ஸுகளால் புதிய திரையரங்குகள் திறக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனித் திரையரங்குகளாய் இயங்க...