Thottal Thodarum

Oct 19, 2011

தமிழ் சினிமாவின் கேளிக்கைகள் - சினிமா வியாபாரம்.


சினிமா என்பதே கேளிக்கைதானே? தனியாக என்ன தமிழ் சினிமா கேளிக்கைகள் என்று சிலர் கேட்கலாம். சினிமாவை பார்பவர்களாகிய நமக்கு வேண்டுமானல் சினிமா கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் அதை தயாரிப்பவர்களுக்கு, இயக்குபவர்களுக்கு, அதையே தன் வாழ்வாதாரமாய் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது வெறும் கேளிக்கையல்ல வாழ்க்கை.
நிறைய பேருக்கு வாழ்க்கையாய் இருக்கும் இந்த சினிமாவை வாழ வைக்கும் முயற்சியாய் கடந்த ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் எல்லா படங்களுக்கும் வரிவிலக்கு என்று அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமா சமுதாயமே தலைவரை தலையில் தூக்கி வைத்து ஆடியது. விழா எடுத்தது. கொண்டாடி குதூகலித்தது. ஆனால் படம் பார்க்கும் ரசிகனுக்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை. இந்த வரி விலக்கால் நமக்கென்ன நன்மை என்று யோசித்தபடியே அந்த பாராட்டுவிழாவை தொலைக்காட்சியில் வேடிக்கைப் பார்த்தபடி அவர்கள் மேலும் சம்பாதிக்க வழி வகுத்தான்.

முந்தைய காலத்தில் எல்லாம் ஒரு சினிமாவிற்கு வரி விலக்கு கொடுக்கிறார்கள் என்றால் அன்றைய டிக்கெட் விலையில் வரி போக மீதம் மட்டுமே மக்களிடம் வசூலிப்பார்கள். குறைந்த விலையில் அனுமதிக் கட்டணம் இருப்பதால் பெரும்பான்மையான மக்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்க வைக்க செய்யப்பட்ட முயற்சி. உதாரணத்திற்கு காந்தி திரைப்படம் வெளியான போது நம் தேசத் தலைவர்களைப் பற்றிய படம் ஆதலால் அதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. வரிவிலக்கு என்பதால் பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு வரியில்லாமல் ஏழுரை ரூபாய்க்கு விற்றார்கள். ஆனால் இன்றைய வரி விலக்கென்பது யாருக்கு? படம் பார்க்கும் ரசிகனுக்கா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்பேன்.

ஆனால் சென்ற ஆட்சியில் கொடுக்கப்பட்ட வரிவிலக்கு தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்கார்ர்களுக்கும் தான் லாபம். அவர்களுக்குத்தான் வரி விலக்கு. படம் பார்க்கும் மக்களுக்கு பத்து பைசா பிரயோஜனமில்லை. விலை குறைவதற்கு பதிலாய் தியேட்டர்களில் விலை அதிகமாக்கப் பட்ட்து. அரசு என்னவோ விலை குறைப்பு செய்வதாய் அறிக்கை விட்டு அரசாணை பிறப்பித்திருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. ஆளாளுக்கு ஒரு ரேட் என்று வைத்துக் கொண்டார்கள். அதிலும் தன் குடும்ப வாரிசுகளின் படங்கள் தான் பெரிய படங்களாய் வெளிவந்து வசூலை அள்ளிக் கொண்டிருந்த நேரத்தில் யார் அதிகவிலைக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளைப் பற்றி கவலைப் படுவார்கள்?.

என்னதான் அரசு ஒன்றை திரை உள்ள அரங்கில் ஐம்பது ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்க்கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை கேட்க வேண்டிய துறை நம் அரசின் வணிக வரி துறை. ஆனால் அவர்களோ வாரம் இவ்வளவு என்று ஃபிக்ஸ் செய்யப்பட்ட தொகையை தொடர்ந்து நீ வரி கட்டும் படம் போட்டாலும் சரி.. போடாவிட்டாலும் சரி எனக்கு கொடுத்தாக வேண்டும் என்று வாங்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் எப்படி நடை முறை படுத்துவார்கள்?. இந்த வார வசூலை தவிர ஸ்பெஷல் ஸ்குவாடுக்கென்று  கண் துடைப்புக்காக நாலு மாசத்திற்கு ஒரு முறை கேஸ் ஒன்றை போட்டுவிட்டு, மாதா மாதம் வழக்கமாய் வாங்கும் கப்பத்தை வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். அரசின் வரி விலக்கினால் மக்களுக்கு எந்த விதமான பிரயோஜனமும் இல்லாத நேரத்தில் இந்த வரி விலக்கெதற்கு? அட்லீஸ்ட் ஏதோ ஒரு கணக்கு காட்டி ஒவ்வொரு தியேட்டர் அதிபர்கள் கட்டும் வரியாவது அரசிற்கு மிஞ்சுமே என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இந்த வரி விலக்கின் மூலம் ஒரு சில நன்மைகளும் இருக்க்த்தான் செய்த்து. குறிப்பாக சிறு முதலீட்டு படங்கள். சிறு முதலீட்டு படங்களுக்கு இந்த வரி விலக்கின் மூலம் ஏற்பட்ட நன்மை என்னவென்றால் கிடைக்கும் கொஞ்சம் நஞ்ச வசூலை வரி பிடித்தமில்லாமல் தயாரிப்பாளர்க்ளுக்கு சென்றடைவது என்பது மட்டுமே தான்.
மற்றபடி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எந்தவிதமான உபயோகமும் இல்லாத இந்த வரி விலக்கு எதற்கு என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டுதானிருந்தது.

புதிய ஆட்சி மலர்ந்தவுடன் தமிழ் திரையுலகமே மாறிவிடும் என்ற ஒரு மாய எதிர்பார்ப்பு திரையுலக மக்களிடம் மட்டுமில்லாமல் மக்களிடமும் இருந்த்து. ஆனால் அதெல்லாம் ஏதுவும் நடக்காது என்கிற வகையில் சென்ற ஆட்சியில் இருந்த்தை விட பத்து பத்து ரூபாயை அதிகப்படுத்தினார்கள் தியேட்டர் அதிபர்கள். அதை இந்த அரசு யாரைக் கேட்டு ஏற்றினீர்கள் என்று கேட்கவுமில்லை, கண்டு கொள்ளவுமில்லை.  ஆனால் தியேட்டர் அதிபர்கள் மட்டும் அரசின் அனுமதியோடு அனுமதிக் கட்டணத்தை குறைக்க் வேண்டும் என்ற கோரிக்கையை வைப்போம் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. குறைக்கிறேன் பேர்விழி என்று தியேட்டர்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாய் ஐந்து காட்சிகள் மட்டுமே நட்த்திக் கொள்ள முடியும் என்கிற சட்ட்த்தை எடுத்துவிட்டு, எவ்வள்வு காட்சிகள் வேண்டுமோ அத்துனை காட்சிகள் நட்த்திக் கொள்ள அனுமதியும், ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு விலை என்று வைத்துக் கொள்ளும் வழிமுறையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டி வைத்த கோரிக்கைதான்.

ஆட்சி மலர்ந்து தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்கிற சட்ட்த்தை அமல் படுத்தாமல் இருந்த அரசு. தீடீரென ஒரு அறிவிப்பை செய்த்து. அதாவது வெறும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே போதாது. அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பார்க்கும் “யு
சர்டிபிகேட் படமாக இருக்க வேண்டும். தமிழ் கலாச்சாரத்தை குறிப்பிடும் படமாய் இருக்க வேண்டும். மிகுந்த தேவையை தவிர ஆங்கில வார்த்தையை கலந்து பேசாத படமாய் இருத்தல் வேண்டும் என்பது போன்ற வேலைக்காகாத சட்டங்களைப் போட்டு இவையனைத்தும் இருந்தால் தான் வரிவிலக்கு என்றது. இதே இம்மாதிரியான சட்டங்களை சென்ற் ஆட்சி போட்டிருந்தால் எல்லாரும் ஆளுக்கு ஒர் அறிக்கையை விட்டிருப்பார்கள். ஆனால் ஏனோ யாரும் குரல் கொடுக்கவில்லை.

ஆட்சி மாற்றத்தின் காரணமாய் சன், மற்றும் நிதி குடும்ப படங்கள் தயாரிப்பதிலிருந்து விலகி விடுவார்கள் என்ற கணிப்பை, மங்காத்தாவின் மூலம் சன் கல்லா கட்டியதிலிருந்து அது இனி நடக்காத காரியம் என்று அரசுக்கு தெரிந்துவிட்டது. தன் பட விநியோகத்தை புத்திசாலித்தனமாய் தற்போதைய அரசு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் ராதிகாவின் ராடன் நிறுவனம் மூலம் விநியோகித்திருப்பதால் ஏதும் செய்ய முடியவில்லை.

எப்படியிருந்தாலும் அவர்களின் தொழிலை முடக்க முடியாது என்கிற போது எந்தவித்த்திலும் தங்களுக்கோ, அரசுக்கோ உதவாத சினிமா துறையின் மேல் எதற்கு கரிசனம் என்று யோசித்த்து. அதற்கான பலன் தான் நூறு சதவிகித வரி ஏற்றம். அதாவது இதற்கு முன்னால் தமிழில் பெயர் வைத்த படங்களுக்கு வரி விலக்கு என்பதால் வரி கிடையாது. அதே நேரத்தில் மற்ற மொழி, மற்றும் டப்பிங் படங்களுக்கு 15 சதவிகித வரி வசூலித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இப்போது தமிழக அரசின் வரி விலக்கு கொள்கைகளுக்கு உட்பட்ட படங்களைத்தவிர மற்ற படங்களுக்கு ஏற்கனவே அரசின் விதிகளுக்கு உட்பட்ட விலையில் முப்பது சதவிகிதம் வரி செலுத்த வேண்டுமென்று சட்டம் இயற்றிவிட்ட்து அரசு. சாதாரணமாய் இம்மாதிரியான வரி விதிப்பு ஏற்பட்டால் உடனடியாய் மக்களின் தலையில் விலையேற்றி விடுவார்கள் தியேட்டர்கார்ர்களும் விநியோகஸ்தர்களூம். ஆனால் அரசு இவர்களுக்கு அதிக பட்ச விலை என்ற் ஒன்றிக்கு மேல் விலை ஏற்றக் கூடாது என்ற கட்டாயத்தோடு சட்டம் இயற்றிவிட்ட்தால் வேறு வழியேயில்லாமல் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கின்றனர் தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களூம்.

ஏற்கனவே இவர்கள் வரி கட்டும் லடசணம் எப்ப்டி என்பதை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு பெரிய புத்தகமே எழுத வேண்டும் அவ்வளவு விதமாய் வரி ஏய்ப்பு செய்வார்கள். அப்படியிருக்க இவர்கள் இப்போது மட்டும் வரியை சரியாய் கட்டிவிடுவார்கள் என்று கேட்டீர்களானால் மாட்டார்கள் என்றுதான் சொல்வேன். இன்னும் அதிக பணம் வணிகவரி அதிகாரிகளுக்கு லஞ்சமாய் போகப் போகிறது. ஏற்கனவே தமிழ் நாட்டில் சென்னையை தவிர டூபாக்கூர் தியேட்ட்ர்கள் எல்லாம் அதிக பட்ச டிக்கெட்டே ஐம்பது ரூபாய் தான் இருக்க வேண்டும் என்கிற அரசாணையை மீறி நூறுக்கும் இருநூற்றி ஐம்பதுக்கு இண்டர்நெட்டில் டிக்கெட் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க அரசு இதை கண்டுக் கொள்ளாமல் இருந்தால் விரைவில் சின்ன படங்களூக்கான வாய்ப்பே இல்லாமல் தமிழ் சினிமா அதள பாதாளத்தை நோக்கி போகும் என்பது சந்தேகமே இல்லை.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
காட்சிப்பிழை இதழுக்காக.

Post a Comment

18 comments:

CS. Mohan Kumar said...

விரைவில் எதிர்பாருங்கள் கேபிளின் கேளிக்கைகள் ..

CS. Mohan Kumar said...

என்னா சார் அது விளம்பரம் கேபிள் சங்கருக்கு வலை வீசும் இயக்குனர்கள்- அப்படின்னு? ஆபிசில் இருந்து அந்த சைட்டுக்கு போக முடியலை.

CS. Mohan Kumar said...

இந்த பகுதி சினிமா வியாபாரத்தில் வந்திருக்கணுமோ?

//இவையனைத்தும் இருந்தால் தான் வரி என்றது. //

வரி விலக்கு என இருந்திருக்க வேண்டும் யுவர் ஆனர்

நம்பிக்கைபாண்டியன் said...

திரையரங்குகளின் கொள்ளை குறித்து பலரும் ஆதங்கப்படும் நிலையில் நல்ல பதிவு , புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான், அங்கு விற்கப்ப்டும் திண்பண்டங்களின் விலையும் பல மடங்காக இருப்பது கண்டிக்கதக்கது!

Astrologer sathishkumar Erode said...

தமிழ் சினிமா சம்பந்தமா கட் ரைட்டா அரசும் சினிமா தயாரிப்பாளர்களும் உட்கார்ந்து பேசினாத்தான் உண்டு..பொறுப்பான ஆட்கள் சினிமாவுல எங்க..?

'பரிவை' சே.குமார் said...

அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க...
எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படபோவது தியேட்டரில் படம் பார்க்கும் ஒரு சாமானியனே என்பதுதானே நிதர்சனம்.

IlayaDhasan said...

நல்ல பதிவு.


ஒரு பதிவரின் பாழாப் போன கத!

Ramesh said...

very tough to read because lot of spelling mistakes even it is a good article.

விஜய் said...

சுந்தர் C படத்திற்கு வசனகர்தாவாமே? வாழ்த்துக்கள்.

இந்த topicஐ பற்றி நிறைய எழுதியாச்சு நீங்களும் நாங்களும். ஆகவே மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பாண்டியன் said...

can't you do something for people sir?

ஒரு வாசகன் said...

//ஒரு நாளைக்கு அதிகபட்சமாய் ஐந்து காட்சிகள் மட்டுமே நட்த்திக் கொள்ள முடியும் என்கிற சட்ட்த்தை எடுத்துவிட்டு, ....//
ஏன் ஐந்து காட்சிகளுக்கு மேல் காட்டக்கூடாது/ இதனால் யாருக்கு நஷ்டம்? பார்ப்பவர்கள் இருந்தால் பார்த்துவிட்டு போகட்டுமே...

Anonymous said...

என்னா சார் சொல்றீங்க? உண்மைலேயே மசாலா கபே படத்துக்கு வசனம் எழுதுறீங்களா? வாழ்த்துக்கள்ண்ணா... சந்தானம்+மிர்ச்சி சிவா கேபிள் அண்ணன்வசனத்தில் செம ஜோரா இருக்கும்...

மு.சரவணக்குமார் said...

உச்ச நடிகன் துவங்கி சாப்பாடு பரிமாறும் கேட்டரிங் பையன் வரைக்கும் அதி நியாயமானவர்களாய் இருப்பதைப் போலவும், பாழாய் போன இந்த திரையரங்கத்தார் கொள்ளை அடித்து குவித்துக் கொண்டிருப்பதைப் போலவுமான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முனைகிறது இந்த கட்டுரை.

நீங்கள் சொல்கிறாற் போல திரையரங்கத்தார் படம் பார்க்க வருகிற ரசிகனை கொள்ளையடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து கொழித்திருந்தால் தமிழகத்தில் திரயரங்களுகளின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்திருக்க வேண்டும்.ஆனால் நிதர்சனம் என்னவென்பது சினிமாவோடு தொடர்பில்லாதவரும் சொல்லி விடுவார்.

அரசாங்கத்துக்கு கட்டுகிற வரிக்கு இனையாக பணத்தினை மாதாமாதாம் திரையரங்க உரிமையாளர்கள் அரசின் பல்வேறு துறையினருக்கும் லஞ்சமாக கொடுத்தாக வேண்டிய அவலம் இருப்பது உங்களுக்கு ஓரளவாவது தெரிந்திருக்கும்.

பத்துபடங்கள் வெளியானால் ஒன்றோ,இரண்டோதான் கரையேறுகிறது. பத்துக்கு எட்டு குப்பைகளை பணம் கொடுத்து போட்டாக வேண்டிய ரிஸ்க் ஃபேக்டர் திரையரங்க உரிமையாளர்களுக்குத்தான்...உங்கள் சம்பளத்தில் ஒரு பைசா குறைந்தாலும் கூட ஒரு லெட்டர் கொடுப்பதன் மூலம் அந்த படத்தின் ரிலீசையே தள்ளி வைக்க உங்களுக்கு வலுவான சங்கங்கள் இருக்கிறது.

ஆனால் திரையரங்கத்தான் கொடுக்கிற எஃப்ஹெச் , எம்ஜியோ கவர் ஆகாவிட்டால் திரையரங்கத்துக்காரன் நிலமை என்ன என்பதை யாரும் யோசிப்பதே இல்லை.

அந்த உரிமை, இந்த உரிமை என இருக்கிற உரிமை எல்லாம் விற்று காசாக்கி விடுகிற நீங்கள்தான் திருட்டு விசிடி க்கு மறைமுக ஊற்றுக் கண், ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள் திரையரங்கத்துக்காரன் வரி கட்டுவதே இல்லை என...இவற்றால் நேரடியாக பாதிக்கப் படுகிறவன் யார்...திரையரங்கத்துக்காரந்தான்.

ஒரு காலத்தில் திரையரங்கில் ஓடினால்தான் போட்ட முதல் வரும் என்ற காலம் இருந்தது. ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சியில் குறுகிய முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டிருக்கிற திரையரங்க உரிமையாளர்களின் வலியான பக்கங்கள் நிறைய பேருக்குத் தெரியாது.

Anonymous said...

கடைசி வரில சொல்லி இருக்கீங்களே அண்ணா, //விரைவில் சின்ன படங்களூக்கான வாய்ப்பே இல்லாமல் தமிழ் சினிமா அதள பாதாளத்தை நோக்கி போகும் //// ஆனா சில சின்ன படங்கள பார்க்கும்போது செம காண்டா இருக்கு... அவை போன்ற படங்கள் வராமல் தடுபதற்க்கு வேறு ஏதேனும் வழி இருக்கா?

Cable சங்கர் said...

mu. saravanakumar
நீங்கள் என் சினிமா வியாபாரம் படித்தால் புரியும்

aotspr said...

மிக அருமையான பகிர்வு.......
தொடர்ந்து எழுதுங்கள்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

மு.சரவணக்குமார் said...

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சென்னையின் புற நகரில் திரையரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கும் குடும்ப பிண்னனியைச் சேர்ந்தவன் நேரடியாக பதினைந்து வருடங்களாய் திரையரங்க நிர்வாகத்தில் இருப்பவன்...புத்தகம் படித்துத்தான் திரையுலகத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன!! :))

இந்த கட்டுரையை விமர்சிப்பதோ அல்லது குற்றம் சொல்வதோ என் நோக்கமில்லை....எங்கள் தரப்பினை சொல்லக் கிடைத்த வாய்ப்பாகவே பயன் படுத்தினேன்.

No hard feelings...ok

வவ்வால் said...

//நீங்கள் சொல்கிறாற் போல திரையரங்கத்தார் படம் பார்க்க வருகிற ரசிகனை கொள்ளையடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து கொழித்திருந்தால் தமிழகத்தில் திரயரங்களுகளின் எண்ணிக்கை வருடத்துக்கு வருடம் அதிகரித்திருக்க வேண்டும்.//

சரவணகுமார் நீங்கள் சொல்வது சரிதான்...பல அரங்குகள் காணாமல் போய் விட்டன. ஆனால் சென்னைல இப்போ புதிய அரங்குகள் மல்டி பிளக்ஸ் ஆகா வந்த இருப்பது வைத்து கேபிள் சொல்லி இருப்பார்,

நாதமுனி ஏஜிஎஸ் ராயல் ஆகவும், நேஷனல் ரிலையன்ஸ் பிக் ஆகவும், பீவீஆர், அப்புறம் ஒஎமாரில் இன்னொறு ஏஜிஎஸ் என புதியவை வந்த போதிலும், அலங்கார்,ஆனந்த், கெயிட்டி, பாரகன் போன்ற தியேட்டகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.ஏன் கே.கே நகரில் இருந்த இந்திரா எல்லாம் என்ன ஆச்சுனு கேபிளுக்கே தெரியும்.

இது பெரிய தியேட்டர்களுக்கான காலம் , முட்டு சந்து, ஓரமாக இருக்கும் தியேட்டர்கள் எல்லாம் காத்தாடுது.
சைதை, நூர்ஜஹான்(ராஜ்), ஜெயராஜ் மூடியாச்சு போல,ஜி.பி.ரோட் ஜெயபிரதா, ராஜ், உட்லண்ஸ்,பைலட்,கேசினோ எல்லாம் சிட்டில இருந்தும் டல்லாவே இருக்கு.

கேபிள் சொல்லும் சினிமா வியாபாரம் ரொம்ப ஜெனிரிக்கா இருக்கு. இப்போ பெரும்பாலும் சரவணகுமார் சொல்வது போல எம்.ஜி.,எப்;எச் போன்ற ரிஸ்க்கான வழியில் தான் கொடுக்கிறாங்க.

திரையரங்குகள் காத்தாட காரணம் தொலைக்காட்சிகளே, எப்படியும் 1 மாதத்தில் உலக தொலைக்காட்சிகளில்னு கூவி போட்டுராங்க, இதனால் சுமாரான தியேட்டர்களிக் செகண்ட் ரிலீஸ் என்ற ஒன்றே இன்று இல்லை.புதிய படங்களும் கிடைக்காது, பலான படம், டப்பிங் படம் தான் போட்டு பிழைக்கணும். பலான படம் கூட டிவிடி,, நெட் ஆதிக்கத்தால் ஓட மாட்டேன்கிறது.

பழைய எம்ஜீஆர், சிவாஜி படத்தை எல்லாம் நூர்ஜஹான், ஶ்ரீனிவாசா இந்திரா போன்ற அரங்குகள் போட்டு ஜீவிக்கும், கே டீவி போன்றவற்றில் 24 மணி நேரமும் போட்டுத்தள்ளுவதால் மக்கள் பழையப்படம் பார்க்க கூட வருவதில்லை. பெண்களுக்கு இருக்கவே இருக்கு சீரியல்.

நடைபாதை வாசிகள் தான் மழைப்பெஞ்சா ,மழை ஓயும் வரை ஒதுங்க டிக்கெட் வாங்கிக்கிட்டு வராங்க, அதுக்காகவே தியேட்டர் நடத்த முடியுமா?