பெங்களூரில் தன்னுடய முதல் இசையமைப்பு வாய்ப்புக்காக இயக்குனரை சந்தித்துவிட்டு திரும்பும் சேரனின் வண்டி சில ராஷ் ட்ரைவிங் ஓட்டுனர்களால் ஒதுக்கப்பட்டு, ரிப்பேராகிவிட, ப்ரசன்னாவின் காரில் லிப்ட் கேட்டு வருகிறார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு வருவதற்குள் பல விதமான அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். தன் மனைவி தனக்கு செய்யும் கொடுமைகளை, பழிவாங்கலை கூட பொறுமையாய் கையாளும் சேரன் கேரக்டர், இன்னொரு பக்கம் த்ரில்லுக்காக எதையும் செய்ய தயாராய் இருக்கும் ப்ரசன்னா கேரக்டர். இவர்கள் இருவரும் தங்கள் பயணத்தின் போது ஒரு முரண்பட்ட ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். அதாவது உன் மனைவியை நான் கொல்கிறேன். என் அப்பாவை நீ கொல் என்பதுதான். இதை கேட்ட மாத்திரத்தில் அதிலிருந்து விலகிப் போகும் சேரனின் மனைவி கொல்லப் படுகிறார். ப்ரசன்னாவின் அப்பாவை சேரன் கொன்றாரா இல்லையா?.
படத்தில் வரும் இரண்டு பாத்திரங்களும் முக்கியமானது என்றாலும் ஸ்கோர் செய்பவர் ப்ரசன்னாதான். கண்களில் தெரியும் கிண்டல் தொனித்த பார்வை, பயமில்லாத பார்வை, வன்மமான பார்வை என்று பல இடங்களில் பார்வையாலேயே நம்மை கவர்கிறார். பணக்கார ஸ்பாயில் ப்ராட் கேரக்டர் இவருக்கு அநியாயமாய் பொருந்துகிறது. அதுவும் ரெண்டாம் பாதி வந்ததும் இவரது கேரக்டர் மாற்றம் இன்னும் சூப்பர். வாழ்த்துகள் ப்ரசன்னா.
சேரன் தான் இப்படத்தின் ஓபனிங்கிற்கு முதல் எதிரி. ஏனென்றால் பெரும்பாலான மக்களின் எண்ணம் இவர் நடித்தால் அழுது வடியுமே என்ற பயத்தினாலேயே தியேட்டருக்கு வர யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தின் வரும் நந்தா கேரக்டருக்கு மிக சரியாக பொருந்தியிருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் லேசாக பயமுறுத்தினாலும், மெல்ல, மெல்ல கேரக்டராக தென்பட ஆரம்பித்து விடுகிறார். அதுவும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவர் படும் பதட்டம் படு நிஜம். ஜெயப்ப்ரகாஷ் மீண்டும் தான் ஒரு ஸீசண்டு ப்ளேயர் என்பதை நிருபித்திருக்கிறார்.
படத்தில் வரும் மூன்று பெண் கேரக்டர்களும் தங்கள் பங்கை நன்றாக செய்திருக்கிறார்கள். முக்கியமாய் ஹரிபிரியா. அந்த ஸாப்டான அநாதை பெண் கேரக்டருக்கு பாந்தமாயிருக்கிறார்.
பத்மேஷின் ஒளிப்பதிவு இம்மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாக கொடுத்திருக்கிறது. பெங்களூர் ஹைவேயில் வரும் ஜிம்மி ஜிப் ஷாட்கள் அருமை. டிஜிட்டலில் எடுத்திருப்பதால் சில காட்சிகளில் க்ரெயின்ஸ் அதிகமிருக்கிறது. சஜன் மாதவின் இசையில் பாடல்கள் இருந்தாலும் நம்மை தொந்தரவு செய்யவில்லை. க்ளைமாக்ஸுக்கு முந்தைய பாடலைத் தவிர. பின்னணியிசையில் தன் திற்மையை சரியாக கொணர்ந்திருக்கிறார். முக்கியமாய் சேரன் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர் கிடாரை பயன்படுத்தியிருப்பது அருமை.
எழுதி இயக்கியவர் ராஜன் மாதவ். இவரும் இசையமைப்பாளர் சஜன் மாதவும் சகோதரர்கள். மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் வாரிசுகள். என்னதான் ஹிட்ச்காக்கின் இன்ஸ்பரேஷன் என்றாலும் அந்த படத்தின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருக்கிறார். முக்கியமாய் வசனங்கள். ஷார்ப் அண்ட் இண்டலிஜெண்ட். நிறைய இடங்களில் சிரிப்பையும், கைத்தட்டலையும் பெருகிறது. முதல் பத்து நிமிடங்கள் அவர் கதையில் செட்டிலாக எடுத்துக் கொள்ளும் நேரம் கொஞ்சமே கொஞ்சம் போரடித்தாலும் அதன் பின்னால் தன் கண்ட்ரோலில் படத்தை கொண்டு வந்து விடுகிறார். முக்கியமாய் ப்ரசன்னாவின் கேரக்டர் எஸ்டாபிஷ் செய்யும் காட்சிகளில். சேரனுக்கும், அவர் மனைவிக்கும் உள்ள ப்ரச்சனை, சேரனுக்கும் ஹரிபிரியாவுக்குமிடையே இருக்கும் எக்ஸ்ட்ரா மாரிட்டல் ரிலேஷன்ஷிப் என்று அழுத்தமாய் கதை சொன்னவர், ப்ரசன்னாவின் மரியா பெண் கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க தவறிவிட்டார். அதே போல் ஹரிபிரியாவின் அநாதை, செண்டிமெண்ட் போன்ற காட்சிகளில் கொஞ்சம் யோசித்திருக்கலாம். பரபரப்பான திரைக்கதை, சுவாரஸ்யப்படுத்தும் ட்விஸ்டுகள் என்று மெனக்கெட்டிருந்தாலும், க்ளைமாக்ஸ் நெருங்கும் போது கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாம். அடுத்து நடக்கப் போகும் காட்சிகளை கொஞ்சம் ஷார்ப்பாக உள்ளவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள் அதே போல சேரனின் வீட்டிற்கு ஹரிபிரியா சோப்பு விற்க வரும் காட்சி. போன்ற சில க்ளிஷே காட்சிகளை தவிர்த்தால் இன்னும் நன்றாயிருந்திருக்கும். மொத்ததில் நல்லதொரு சுவரஸ்யமான முரண் கொண்ட த்ரில்லரை வழங்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
முரண்- Interesting Thriller.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அண்மையில் சேரன் தான் இனிமேல் சென்டிமெண்ட படங்கள் எடுப்பதில்லை என்றும் அறிவித்திருந“தார்.. மிகவும் திறமை வாய்ந்த கலைஞன்.. கட்டாயம் அவர் மறுமுகத்தையும் ரசிக்கனும்.
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்
inga release aagala...
இன்று என் வலையில்
கருத்துரைகளை சுருக்க விரிக்க
இந்த கமெண்ட் படிக்கும் அனைத்து வாசக நண்பர்களே ,என் கன்னி முயற்ச்சி இது:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
நம்ம சைட்டுக்கு வாங்க!!
ஈஸியா தமிழ் கத்துக்கற மாதிரி
பாட்டு எழுதியிருக்கேன்!
கருத்து சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!!
oruvar ivarai pukalkirar...
Natula sombukal thollai thankala...
விமர்சனம்.............
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com