Posts

Showing posts with the label கல்விக் கட்டணம்.

கல்வியா? செல்வமா? தெய்வமா?

எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு உடனே ஏற்படுவதில்லை. முக்கியமாய் மக்களுக்கு பயன்படும் விஷயஙக்ளுக்கான முடிவுகள் எப்போதும் உடனே நடந்துவிடுவதில்லை. ரேஷன் கடையில் ரேஷன் சாமான்கள் கிடைப்பதிலிருந்து, தினசரி மின்சார வெட்டு, டாஸ்மாக் எம்.ஆர்.பிக்கு மேல் வாங்கு கொள்ளை, விலைவாசி, அடிப்படை வசதிகள் என்று லிஸ்ட் போட்டுக் கொண்டே போனால் அது நீண்டு கொண்டேயிருக்கும். ஆனால் ரொம்ப நாளாய் மக்கள் தங்கள் மனதில் மட்டுமே பொங்கியெழுந்துக் கொண்டிருந்த விஷயம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின், கல்விக் கட்டணம். அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டி பரிந்துரைத்த தொகையை எல்லா மெட்டிரிகுலேஷன் பள்ளிகளும் எதிர்த்தது.  மீண்டும் அவர்கள் பரிந்துரை செய்த தொகையை ஏற்க முடியாது. அதை மீண்டும் நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும் என்று எல்லா பள்ளிகளும் கோரிக்கை வைத்தனர். இதனால் பள்ளி முதலாளிகள். ஆம்.. முதலாளிகள் தான்.. கல்வியை வியாபாரமாய் நடத்தும் இவர்களை பின் எப்படி அழைப்பது?.. பெரும்பாலான பள்ளிகள் அரசின் பிரஷரின் காரணமாய்  தங்கள் அமெளண்ட்டை குறைத்தும் கொண்டது. சில பள்ளிகளோ.. இப்போது கட்டணத்தை கட்டுங்கள் நாங்கள் கேஸ் போட்டிரு...