Posts

Showing posts with the label மீண்டும் ஒரு காதல்கதை

மீண்டும் ஒரு காதல் கதை -2

Image
  “ஹவ்..டேர் யூ டச் மை ஹேர்..?” என்று கோபத்துடன் கத்தினேன். சிரித்து கொண்டிருந்த மீராவும், ஷ்ரத்தாவும் ஒரு கணம் அதிர்ந்து நின்றார்கள். ஷ்ரத்தாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை சில நொடிகள் ரசித்து, ஹா..ஹா.. ஹா.. என்று சிரித்தேன். என் சிரிப்பை பார்த்து, ஒரு மாதிரி சமாளித்து சிரித்தார்கள். “பின்னே எவ்வளவு நேரம்தான் ஒரு யூத்தை ஓட்டுவீர்கள்?” என்றதுதான் தாமதம். கையில் இருந்த பாதி ஸாண்ட்விச்சை என் மேல் வீசி, “இடியட்.. இப்படித்தான் கத்துவாயா..? உனக்கு மேனர்ஸ் கிடையாது. பெண்களிடம் எப்படி பேசுவது என்று தெரியாது? பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சொல்ல தெரியாது?. உன்னை எவன் மார்கெட்டிங்கில் சேர்த்தது? நீயெல்லாம் என்ன கிழிக்க போகிறாய்?” என்று படபடவென பொரிந்துவிட்டு, மீராவிடம் “சாரி..” என்றபடி வேகமாய் காண்டீனை விட்டு வெளியேறினாள்.