எந்திரன் ஃபீவர்
தமிழ்நாடெங்கும்.. அல்ல.. உலகமெங்கும் எந்திரன் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. சாதரணமாகவே ரஜினியின் படங்களுக்கு வெளிவருவதற்கு முன் ஏகப்பட்ட ஹைப் இருக்கும் அதை விட ஏகப்பட்ட ஹைப்பை சன் டிவியின் தயாரிப்பு என்பதால் மேலும் எகிறிக் கொண்டிருக்கிறது. எந்திரன் போஸ்டர் ஒட்டினால் கூட அதற்கு ஒரு நிகழ்ச்சி தயாரித்து விளம்பரப்படுத்துகிறது. இதெல்லாம் இப்படியிருக்க, சென்னை மற்றும் அதன் சப்பர்ப்ஸ் எனப்படும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்களில் மட்டும் சுமார் என்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. (அது என்ன செங்கல்பட்டு ஏரியா என்று கேட்பவர்களுக்கு உடனே சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி படியுங்கள்.. சும்மா ஒரு விளம்பரம்தான்.. ஹி..ஹி..) சுற்றிச் சுற்றிப் பார்த்தால் ஒரு வாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எல்லோரும் படம் பார்த்துவிடுவார்கள். சுமார் இருநூறு கோடியளவில் இந்தியாவிலேயே அதிக செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, உலகமெங்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவி தன் கோட்டையான தெற்கில் முக்கியமாய் ...