Thottal Thodarum

Sep 26, 2010

எந்திரன் ஃபீவர்

en22 தமிழ்நாடெங்கும்.. அல்ல.. உலகமெங்கும் எந்திரன் ஜுரம் ஆரம்பித்துவிட்டது. சாதரணமாகவே ரஜினியின் படங்களுக்கு வெளிவருவதற்கு முன் ஏகப்பட்ட ஹைப் இருக்கும் அதை விட ஏகப்பட்ட ஹைப்பை சன் டிவியின் தயாரிப்பு என்பதால் மேலும் எகிறிக் கொண்டிருக்கிறது. எந்திரன் போஸ்டர் ஒட்டினால் கூட அதற்கு ஒரு நிகழ்ச்சி தயாரித்து விளம்பரப்படுத்துகிறது.

இதெல்லாம் இப்படியிருக்க, சென்னை மற்றும் அதன் சப்பர்ப்ஸ் எனப்படும் செங்கல்பட்டு மாவட்ட ஏரியாக்களில் மட்டும் சுமார் என்பதுக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. (அது என்ன செங்கல்பட்டு ஏரியா என்று கேட்பவர்களுக்கு உடனே சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி படியுங்கள்.. சும்மா ஒரு விளம்பரம்தான்.. ஹி..ஹி..) சுற்றிச் சுற்றிப் பார்த்தால் ஒரு வாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எல்லோரும் படம் பார்த்துவிடுவார்கள்.

சுமார் இருநூறு கோடியளவில் இந்தியாவிலேயே அதிக செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் படம் என்பதால் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமல்ல, உலகமெங்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவி தன் கோட்டையான தெற்கில் முக்கியமாய் தமிழ்நாட்டில் இப்படத்தின் வியாபாரத்தை பற்றி பெரிதாக அலடிக் கொள்ள வில்லை. ஆந்திராவில் இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஒரு நேரடிப்படத்துக்கு என்ன விலை கிடைக்குமோ அதை விட அதிகமாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். வடநாட்டில் வெளியிட பிரபல விநியோகஸ்தர்களான ஷிங்கார் பிலிம்ஸ் மூலமாய் வெளியிடுகிறார்கள். அமெரிக்காவில் தெலுங்கு வர்ஷனான ‘ரோபோ” வுக்கு இப்போதே இரண்டு வாரங்களுக்கு புல்லாம். நிச்சயம் முதல்  மூன்று நாட்களுக்கு எல்லா தியேட்டர்களில் ஃபுல்லாகத்தான் ஓடும்.

இவ்வளவு செலவு செய்தால் எப்படி சம்பாதிக்க முடியும்? அதற்கான மார்கெட் இருக்கிறதா என்று பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படி சிவாஜி, தசாவதாரம் காலத்தில் அந்த படங்களை பார்த்தாச்சா? என்று யாரை பார்த்தாலும் கேட்டார்களோ.? அதைவிட மூன்று மடங்கு எதிர்பார்ப்பு இருக்கும் பட்சத்தில், சிவாஜியை விட தசாவதாரத்தை விட அதிக தியேட்டர்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படப் போகும் படமாய் எந்திரன் அமையப் போகிறது.

ஒரு கணக்குக்காக : சுமார் 2500 திரையரங்குகளில் எந்திரன் உலகமெங்கும் வெளியாகப் போகிறது. ஒவ்வொரு தியேட்டரிலும் சிறப்பு காட்சிகளை கணக்கில் கொள்ளாமல் நான்கு காட்சிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு திரையரங்கிலும் சுமார் 500 சீட்டிங்க் கெப்பாசிட்டி என்று வைத்துக் கொள்வோம். தமிழகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகளில் 700-800 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அரங்குகள் தான் அதிகம் என்றாலும் ஆவரேஜாக 500க்கு குறைந்த பட்சம் ரூ நூறுக்கு ஒர் டிக்கெட் விற்றால் வரக்கூடிய கணக்கு

ஒரு நாளைக்கு 2500 தியேட்டர்கள் X டிக்கெட் விலை 100 X இருக்கைகள் 500 = 12,50,00,000  ஒரு காட்சிக்கு என்று கணக்கிட்டால் ஒரு நாளைக்கு எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். நிச்சயம் சன் டிவியை பொறுத்தவரை இது ஒரு வெற்றிப் படம் தான். இதைத்தவிர, இவர்கள் ஆடியோ, வீடியோ, சாட்டிலைட், வெளிநாட்டு உரிமை என்று பல விதங்களில் கல்லா கட்டியிருப்பார்கள். படத்தை தங்கள் திரையரங்குகளில் வெளியிட பெரிய எம்.ஜி கொடுத்து போட்டிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் லாபமடைந்தார்களா? என்பதை பொறுத்திருத்துதான் பார்க்க வேண்டும். அதுதான் ஒரு நாளில் இவ்வளவு வசூல் ஆகிறதே என்று கேட்பவர்களுக்கு ( மீண்டும் ஒரு சின்ன விளமப்ரம்: சினிமா வியாபாரம் படியுங்கள் புரியும்.)
 சிவாஜி மிகப் பெரிய வெற்றிப் படம்தான் ஆனாலும் கை கடித்துக் கொண்ட சில திரையரங்கு உரிமையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹி..ஹி.. நானும் ஒரு குட்டி சன் டிவி தான்..
டிஸ்கி: நேற்றிரவு டபங் பார்க்கும் போது எந்திரன் டிரைலர் பார்த்தேன். ….
கேபிள் சங்கர்
Post a Comment

34 comments:

dheva said...

ஏற்கனவே எகிறிப் போயிருந்த பி.பி.. இப்போ டபுள் மடங்கு ஆகிடுச்சு அண்ணா...! சினிமா வியாபாரம் கண்டிப்பாய் படிக்கணும் அண்ணா.. இந்த தடவை ஊருகு வரும்போது... நிச்சயம் என் கூட பயணிக்க போகும் புத்தகம் அது...!

தனுசுராசி said...

வியாழக்கிழமை நைட் எந்திரன் விமர்சனம் எதிர்பார்க்கலாமா ?

விந்தைமனிதன் said...

//குறைந்த பட்சம் ரூ நூறுக்கு ஒர் டிக்கெட் விற்றால் வரக்கூடிய கணக்கு //

சாமீஈஈஈஈஈஈ... இந்த அக்குருமம் உங்களுக்கே அடுக்குமா? எந்திரன் டிக்கெட்டு 100 நூறு ரூவா?! அதுவும் மொத பத்து நாள்ல?!

siva said...

:)

D.R.Ashok said...

தலைவரே...அபிராமி மால்ல ஒரு டிக்கெட் விலை ரூ500 (with food)

ஜோதியில ரூ.200...

எந்திரன் வசூல் மழைதான்... ஆனால் ஒரு சில தியட்டர்காரர்களின் நிலை ????

bandhu said...

Tamil Nadu Population : 6 crore, 70 lakhs approximately (thanks to Google)
2500 theater X 500 seats X 4 shows X 10 days = 5 Crores. அதாவது 75% மக்கள் இந்த படத்தை பத்து நாட்களுக்குள் பார்த்துவிடுவார்கள் என்கிறீர்களா? (Repeat audience , Outside Tamilnadu audience may contribute to around 5% i guess)
தமிழ் நாடு தவிர மற்ற இடங்களில் கூட்டம் என்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கும் (தமிழ் நாட்டை கம்பேர் பண்ணினால்) . அதே போல், உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு என்பது வெறும் கற்பனை. உலகம் உள்ள தமிழர்களிடையே எதிர்பார்ப்பு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.
இந்த Marketing Hype -க்கு நீங்களும் ஆளாக வேண்டாம் !

சே.குமார் said...

எந்திரனால் சாதிக்க முடியுதோ இல்லையோ சன் சடி இன்னும் சில நாளைக்கு மக்களை கொன்னு எடுக்கப் போவது நிச்சயம்....
பாடல் வெளியீட்டில் ஆரம்பித்து... டிரைலர்... முன்பதிவு என எல்லாவற்றையும் போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடப்பது என்னவென்பது நாலு நாளில் தெரியும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கேபிள்,

உங்கள் கணக்கில் ஓட்டை இருக்கிறது..

பெருநகரங்கள் தவிர மற்ற ஊர்களில் இன்றும் டிக்கட் விலை இன்றும் 30 -40 ரூபாயே. முதல் சில நாட்களுக்கு வேண்டுமானால் 100 ரூபாய்க்கு விற்கலாம்.

படத்தைப் பார்க்க வேண்டும் நினைப்பவர்களுள் கண்டிப்பாக 40 வயதிற்குக் குறைவானவர்களே அதிகம் இருப்பர்.

இன்னும் இன்னும் புள்ளியியல் கணக்கைப் பார்த்தால் படம் வெற்றியடைய பெருநகர ஓட்டத்தையே நம்பியிருக்க வேண்டியதிருக்கும்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உலகம் முழுவதும் என்று கூறுவது கொஞ்சம் அதிகம்.

முதலில் DABANGGன் வசூலைத் தொடுமா என்று பார்ப்போம்.

இங்கே ஷார்ஜாவில் ரிசர்வேஷன் ஆரம்பித்திருப்பது உண்மை.

KANA VARO said...

எந்திரனுக்கு waiting..

Cable Sankar said...

செந்தில் நிச்சயம் இப்படத்துக்கு 30-40 ரூபாய்க்கெல்லாம் முதல் மூன்று நாட்களுக்கு பார்கவே முடியாது.. அது நிச்சயம். அது தொடர்வதும், வீழ்வதும் படத்தின் ரிசல்ட்டை பொறுத்தது..

சி.பி.செந்தில்குமார் said...

எந்திரனை வெச்சு நீங்களும் கல்லா கட்டியாச்சா ?ஓக்கே.படம் எப்போ போறீங்க?டிக்கட் ரூ 250, ரூ 300 ஈரோட்ல.கேபிள் சார்

ஆகாயமனிதன்.. said...

//நிச்சயம் சன் டிவியை பொறுத்தவரை இது ஒரு வெற்றிப் படம் தான்.//
simple 5lakh peoples for 20days is 10cr people spending @ 100 is 1000cr, mattha,lottu losuku sales all...total @
already posted in august see the blog...
http://onely1.blogspot.com/2010/08/s.html
சன் பிச்சர்ஸ்க்கு வெற்றி...
ரசிகர்களுக்கு வெறி...
படத்தை வாங்கியவர்கள் ?
பார்க்கப் பிடிக்காதவர்களுக்கு நன்றி...
கேபிள் அண்ணாவ தெரியாம நிறைய பேர் இருக்காங்க...
அதுபோல சினிமா பார்க்காதவங்களும்....
கணிப்பு, கருத்து சொல்றவங்களும் நிறைய இருக்காங்க

"ராஜா" said...

தியேட்டர்காரனுக்கு எந்திரனை விட பருத்திவீரன் சுப்ரமணியபுரம் போன்ற படங்களின் மூலமே அதிக வருமானம் வரும் என்று நினைக்கிறேன்

calci said...

movie budget max 30 crore irkum..moeny is being laundered here..America la $30 ticket..tickets are available in all theatres ...

Prasanna Rajan said...

சாப்பாட்டுக் கடை??

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அடக் கடவுளே .. இண்டர்நெட் புக்கிங்கில் 4 டிக்கட் 800 ரூபாய்க்கு வாங்கி இருக்கேனே கேபிள் ஜி.. 400 ரூபாய்தானா..??

ஆதிமூலகிருஷ்ணன் said...

அடேங்கப்பா.!

Satya said...

US லே டிக்கெட்டுக்கு 20$ ...தலைவர் படமாச்சே... டிக்கெட் விற்க ஆரம்பிச்சு 10 நிமிஷத்துல முதல் வாரதிற்க்கான டிக்கெட் வித்து தீந்துடுச்சு....பசங்களோட பொண்ணுங்க கூட்டம் தான் பட்டைய கெளப்பும்...சிவாஜி படத்துக்கு இங்கே வேலைப் பார்கற நம்ம ஒரு பொண்ணுங்களோட ரவ்சு இருக்கே...அய்யய்ய ...தாங்க முடியல டா சாமி... எந்திரனை பார்த்துட்டு வந்து சொல்றேன் அவங்களோட அலப்பரைய

SurveySan said...

எக்ஸாமுக்குகூட எந்த பயலும் இப்படி ப்ளான் பண்ணியிருக்கமாட்டான். எல்லா பயலும், ரூம்போட்டு யோசிச்சு எந்திரன் படத்தை பாக்க திட்டம் போடறாங்க.

இங்க மீட் பண்ணி, இங்க டின்னர் சாப்பிட்டு, இத்தன் மணிக்கு படத்தை பாத்து, இந்த கலர் ட்ரெஸ் போட்டு, அப்படி இப்படீன்னு, ஒரு பெரிய திருவிழாவுக்கு தயார் ஆகுது அமெரிக்காவே ;)

Cable Sankar said...

எந்திரன் பற்றி நான் ஹைப் செய்யவில்லை.. இன்னும் ரெண்டொரு நாளில் தெரிய வரும் அப்போது சொல்கிறேன். நண்பர்களே..:)

Rafeek said...

எந்திரன் ப்ரோமோ தொடர்பான இடத்தில் பணிபுரிவதால்.. படம் பார்க்கும் வாய்ப்பு நேற்று இரவு கிடைத்தது.எந்திரன் ரசிகன் செலவளிக்கும் தொகைக்கும் மேல் திருப்திபடுத்தும் ஒரு எண்டர்ட்ரையினர் திரைப்படமே. வழக்கம் போல் ஷங்கர் முதல் பாதியில் மெயின் கதைக்குள் போகாமல் நிறைய காமெடி மற்றும் ரொமான்ஸில் ஜல்லி அடித்திருக்கிறார்..(நன்றி சுஜாதா சார்) பிற்பாதியில் தான்.. ரஜினி..ஷங்கர்.. மீண்டும் ரஜினின்னு பட்டய கெழப்பி இருக்காங்க..கடைசி 30 நிமிடங்கள் பர பர பெர்ஃபாமன்ஸ். ரஜினி மாறி மாறி ஐஸ்வர்யாவுடன் ஆடும் நடனம்..(பரதம்,வெஸ்டர்ன்,கதக்..etc) பிரமிப்பு. காதல் அணுக்கள் மற்றும் கிளிமாஞ்சாரோ கிராபிக்ஸ் இல்லாத கலக்கல்!!

Satya said...

கேபிள் சங்கர் ....

நானும் என் நண்பர்களும், இறந்து போன என் உயிர் நண்பன் 'ஷ்யாம்' நினைவாக ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறோம்.. பிரியாவின் காது அறுவை சிகிச்சைக்கு எங்களுடைய டிரஸ்ட் மூலம் உதவ முடியும் என நினைக்கிறேன். நான் தனிச்சையாய் முடிவெடுக்க முடியாது...உரிய மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தால் கண்டிப்பாக என்னால் ஒரு லட்சமாவது ஏற்பாடு செய்ய முடியும்....sathishk77@gmail.com என்ற எனது மின்னஞ்சலுக்கு ப்ரியாவின் மெடிக்கல் ரிப்போர்ட் அனுப்பி வைக்க முடியுமா?

balaji said...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//முதலில் DABANGGன் வசூலைத் தொடுமா என்று பார்ப்போம்//

boss, Dabaang ellam oru padam.... Wait and see..Enthiran will rock...

first 3 days advance booking lae yae 300 c vandachu... ithula Dabangg vasula thoduma...hee..hee..


-Rajini Veriyan

கதிர்கா said...

சிவாஜியை வெற்றிப்படமாக 'ஆக்கியது' போல் கண்டிப்பாக எந்திரனும் வெற்றிப்படம் 'ஆகும்'

எந்திரன் பீவர் பற்றி என்னுடைய சிறுகதை -
http://kathirka.blogspot.com/2010/09/blog-post_24.html

- கதிர்கா

ஆண்டவன் கட்டளை ! said...

//முதலில் DABANGGன் வசூலைத் தொடுமா என்று பார்ப்போம்//

boss, Dabaang ellam oru padam.... Wait and see..Enthiran will rock...

first 3 days advance booking lae yae 300 c vandachu... ithula Dabangg vasula thoduma...hee..hee..//

என்னது 300 பேருக்கு காதுல 'C' வந்திருச்சா ?

தஞ்சாவூரான் said...

சினிமாப் பெர்சுங்களாம் விமர்சனம் சொன்ன பிறகுதான் இந்தப் படத்தைப் பார்க்குறது பத்தி யோசிக்கணும்.

ஏற்கனவே, பாபா, சிவாஜி, சந்திரமுகி, ஆளவந்தான், கந்சாமி, கில்லின்னு காது கண்ணெல்லாம் புண்ணாகிடுச்சு!!

Dhaya... said...

//சினிமாப் பெர்சுங்களாம் விமர்சனம் சொன்ன பிறகுதான் இந்தப் படத்தைப் பார்க்குறது பத்தி யோசிக்கணும்.
//
dai thanjavooran ni enthiran film paakalaina film flop aayidathu, rajini always rockz... ni yelam enthiran filmku poidatha serupala adi vangiduva.... ini enthiran film pathi yevanathu comment kodutha munji mugarai ellam udaika padum...

with love,
dhaya....

balaji said...

என்னது 300 பேருக்கு காதுல 'C' வந்திருச்சா ?//

aamma, ippa "c" vanduchu..adukappram "D","E" varum

சந்தோஷ் = Santhosh said...

//Dhaya... said...

//சினிமாப் பெர்சுங்களாம் விமர்சனம் சொன்ன பிறகுதான் இந்தப் படத்தைப் பார்க்குறது பத்தி யோசிக்கணும்.
//
dai thanjavooran ni enthiran film paakalaina film flop aayidathu, rajini always rockz... ni yelam enthiran filmku poidatha serupala adi vangiduva.... ini enthiran film pathi yevanathu comment kodutha munji mugarai ellam udaika padum...

with love,
dhaya.... //

படிக்கிற பையன் மாதிரி இருக்கு நாவை அடக்கி பேசப்பழகு.. யார் கிட்ட பேசுறோம் என்ன பேசுறோமுன்னு தெரிந்து பேசு..

தஞ்சாவூரான் said...

விடுப்பா, சந்தோஷ். ஏதோ ஆசப்படறான். பேசிட்டுப் போகட்டும்:)

தயா தம்பி, உன் கமென்ட்டப் படிச்சாலே உன் மூளை எந்த அளவுக்கு வளர்ந்து இருக்குன்னு தெரியுது.

ரொம்ப மெரட்டாதேப்பா. பயந்து வருது!!!

balaji said...

Sample Box office prediction for(Endhiran) 3days.
2258 prints * 4 shows * 500 seats * 150rs = 67,50,00,000 = 67.5Crore per day. So Rs 67.5*3days= 202.5 crore. :) Kanna idhu verum sample dha pa :)

Dhaya... said...

@santhosh,@thanjaavooran
avlo peria aala irukuravanga velaiya parunga yethuku intha vetti thanama comment panitu irukinga rendu perum... ponga poi urupadiana velaiya parunga, enaku velai, moozhai ila nan comment pandren ninga velaiya parunga arivaligala....

Tech Shankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TSடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்