Posts

Showing posts with the label சைதாப்பேட்டை

சாப்பாட்டுக்கடை - குழம்புக்கடை

Image
குழம்புக்கடை என்று பெயர் பார்த்ததும், சேலத்தில் ஒரு தெருவெங்கும் இம்மாதிரியான குழம்புகள் விற்கும் கடை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போலா? என்று யோசனையுடன் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். ஆம். அது போலத்தான். கறிகுழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, எறா குழம்பு, சிக்கன் மசாலா, கறி சாப்ஸ், சிக்கன் கைமா, கறி தோசை, சிக்கன் கறி தோசை, தலைக்கறி, போட்டி,  இட்லி, பரோட்டா, இடியாப்பம், வடைகறி, சாம்பார், வத்தக்குழம்பு என இரவு நேரங்களில் வரிசைக்கட்டுகிறார்கள் என்றால், பகலில் வெஜ் மற்றும் நான் வெஜ் சாப்பாடும் போடப்படுகிறதாம் சிக்கன் கறி தோசை அட்டகாசம். முட்டையோடு அடித்து ஊற்றப்பட்ட சிக்கன் கைமா நல்ல எண்ணையில் முறுகலாய் எடுக்கப்பட்டு, உடன் தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது மட்டன் கிரேவியோடு ஒரு விள்ளல் வைத்தால் அட அட அட.. நிஜமாகவே டிவைன் தான்.  முட்டை லாபா நன்கு சாப்டான பரோட்டா மாவில் செய்யப்படுகிறது சூடாக சாப்பிடும் போது அபாரமான சுவை. உடன் மட்டன்குழம்பு ஆசம். ஞாயிறுகளில் ஸ்பெஷல் அயிட்டங்களாய், நண்டு, எறால், சுறா என நான் வெஜ் குழம்பு வகைகள் வரிசைக் கட்டுகிறது. எந்த...

சாப்பாட்டுக்கடை - முத்து மெஸ்

Image
ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடை எழுதி. வழக்கமாய் காலை உணவு மட்டுமே என் வீட்டில் என்பது வழக்கம். மதியம் அலுவலகத்திலும், இரவும் வீட்டிற்கு சீக்கிரம் வருவதைப் பொறுத்தே என்பதால் காலை உணவை வீட்டில் ஸ்கிப் செய்ய மாட்டேன். அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை குடும்பத்துடன் இருப்பது என் வழக்கம். சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், லோக்கல் ஓட்டல்களில் சாப்பிட்டுவிடுவது உண்டு. அப்படி ஒரு நாள் தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ். சைதாப்பேட்டை கவரைத் தெருவில் ஒர் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. அது கால மாற்றத்தில் இண்டோர் கிரிக்கெட் செண்டராகக்கூட மாறி தற்போது முத்து மெஸ் என்றாகியிருப்பது தெரிந்தது.

சாப்பாட்டுக்கடை

Image
”ஜாம்பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு” என்கிற பாடலில் சைதாப்பேட்டை வடகறி என்று எழுதும் அளவிற்கு பிரபலம் வடகறி எனும் ஒரு சைட் டிஷ். சின்ன வயதில் நான் என் மாமனும் ஓட்டலுக்குப் போய் வடகறி என்பது ஒரு மெயின் டிஷ் என்று நினைத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வடகறி கேட்க, சர்வ் செய்பவன் எங்களை ஏற இறங்க பார்த்தவனை “அது சரி.. அதுக்கு சைட் டிஷ் என்ன தருவீங்கன்னு” கேட்டு விழிக்க வைத்தவர்கள் நாங்கள். அப்படிபட்ட வடகறி என்கிற பிரபல அயிட்டத்துக்கு பேர் போன கடை தான் சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் இருக்கும் மாரி ஓட்டல். ஒரு காலத்தில் சின்ன டீக்கடை ஓட்டு வீடாய் இருந்த ஹோட்டல் இப்போது கட்டிடமாய் மாறியிருக்கிறது. இவர்களின் ஸ்பெஷாலிட்டி வடகறி, காலையிலிருந்து இரவு வரை வடகறி மட்டும் சின்ன டம்ளர்களிலும், தூக்கு சட்டியிலும், ப்ளாஸ்டிக்கவர்களிலும், இப்போது ஹோட்டல் காரர்களே  ப்ளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து  தர, போய் கொண்டேயிருக்கும், அவ்வளவு சுவை. இது இட்லி, தோசை, பரோட்டா, செட் தோசை என்று எல்லா விதமான அயிட்டங்களுக்கும் சேரும். வடகறி என்கிற அயிட்டம் மீந்து போன வடை வகைகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சை...