சாப்பாட்டுக்கடை - முத்து மெஸ்
ரொம்ப நாளாகிவிட்டது சாப்பாட்டுக்கடை எழுதி. வழக்கமாய் காலை உணவு மட்டுமே என் வீட்டில் என்பது வழக்கம். மதியம் அலுவலகத்திலும், இரவும் வீட்டிற்கு சீக்கிரம் வருவதைப் பொறுத்தே என்பதால் காலை உணவை வீட்டில் ஸ்கிப் செய்ய மாட்டேன். அதே போல ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முடிந்த வரை குடும்பத்துடன் இருப்பது என் வழக்கம். சமயங்களில் ஏதேனும் ஒரு நாள் காலை வேளையில் கூட வீட்டில் இருப்பவர்கள் திருமணத்திற்கோ, அல்லது வேறு நிகழ்வுகளுக்கோ சொன்றுவிடும் சமயம், லோக்கல் ஓட்டல்களில் சாப்பிட்டுவிடுவது உண்டு. அப்படி ஒரு நாள் தேடும் போதுதான் தெரிந்தது இந்த மெஸ். சைதாப்பேட்டை கவரைத் தெருவில் ஒர் பழைய கல்யாண மண்டபம் இருந்தது. அது கால மாற்றத்தில் இண்டோர் கிரிக்கெட் செண்டராகக்கூட மாறி தற்போது முத்து மெஸ் என்றாகியிருப்பது தெரிந்தது.
வழக்கம் போல நாம போய்த்தான் பார்ப்போமே என்று அன்றைய காலையை ஆரம்பித்தேன். ஓப்பன் கிச்சன். உள்ளே விசாலமான இடம். சின்னச் சின்ன டேபிள்களோடு சுத்தமாய் இருந்தது. இட்லி வடை, ஆர்டர் செய்தேன். இட்லிக்கு ரெண்டு சட்னி, சாம்பார் என சைட் டிஷ். வடகறி கேட்டேன் காலியாகிவிட்டது என்றார்கள். இட்லி மிக மிருதுவாக இருந்தது. வடை சைசில் சின்னதாய் இருந்தாலும் கிரிஸ்பி. அடுத்ததாய் என்ன சாப்பிடலாம் என்று யோசித்த போது உப்பலான பூரியை பக்கத்திலிருந்தவர் ஆர்டர் செய்திருக்க, நானும் பூரியென்றேன். கெட்டியான கிழங்காய் இல்லாமல், வெங்காயம் அதிகம் போட்டு கிழங்கோடு, கொஞ்சம் தளர இருக்கும் கிழங்கு, காந்தல் இல்லாத எண்ணையில் பொரிக்கப்பட்டு கிழங்கோடு சாப்பிடும்போது.. வழக்கம் போல டிவைன்
மற்றொரு நாள் இரவு தோசையும், தோசை மாவு புளிக்காமல், நல்ல நைஸாக போட்டுக் கொடுத்தார்கள். சப்பாத்தி, சென்னா சாப்பிட்டேன். சப்பாத்தி கொஞ்சம் ட்ரையாக இருந்தது. சென்னா பரவாயில்லை. மதிய நேரத்தில் சாப்பாடு இருக்கிறது ஒரு நாள் ட்ரை செய்து பார்க்க வேண்டும். மிக முக்கியமான விஷயம். நல்ல விசாலமான இடம், குவாலிட்டியான உணவு. அத்தனையும் சேர்த்து விலை ஓரளவுக்கு டீசண்டே. சைதைப் பக்கம் வருகிறவர்கள் ஒர் ட்ரை செய்து பார்க்கலாம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
iamramnadboy.blogspot.in
Why someone posting like this that too for your blog?
http://mokkaiblog.blogspot.com/2014/08/blog-post.html