Posts

Showing posts with the label SMS

சிவா மனசில சக்தி - திரை விமர்சனம்

Image
ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. ஆணுக்கும்,பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்து அன்பேவா, தில்லானா மோகனாம்பாள், குஷி, திருடா திருடி என்று பல படஙகள் வந்திருந்தாலும், இந்த கருவை வைத்து இண்ட்ரஸ்டாக திரைக்கதை அமைத்தால் நிச்சயமாய் வெற்றியடையும். அதே நேரம் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் ஆங்காங்கே இழுவையாய் போகும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி இரண்டாம் வகை. ரெயிலில் நடக்கும் முதல் சந்திப்பிலேயே சிவாவுக்கு காதல் வந்துவிடுகிறது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களை பற்றி பொய் சொல்ல, அது தெரியும் போது, தாஙகள் ஏமாற்றபட்டதால் காண்டாகி போய் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இருவரின் ஈகோவும் உடைந்து தங்கள் காதலை சொன்னார்களா இல்லையா? அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா..? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். ஜீவாவுக்கு ஏற்ற வேடம்.. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவரும், சந்தானமும், சில சமயம் கிச்சு,கிச்சும், சில சமயம் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு ...