Thottal Thodarum

Feb 13, 2009

சிவா மனசில சக்தி - திரை விமர்சனம்

ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி..


ஆணுக்கும்,பெண்ணிற்கும் இடையே நடக்கும் ஈகோவை வைத்து அன்பேவா, தில்லானா மோகனாம்பாள், குஷி, திருடா திருடி என்று பல படஙகள் வந்திருந்தாலும், இந்த கருவை வைத்து இண்ட்ரஸ்டாக திரைக்கதை அமைத்தால் நிச்சயமாய் வெற்றியடையும். அதே நேரம் திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் ஆங்காங்கே இழுவையாய் போகும் வாய்ப்பும் உண்டு. அந்த வகையில் சிவா மனசுல சக்தி இரண்டாம் வகை.

ரெயிலில் நடக்கும் முதல் சந்திப்பிலேயே சிவாவுக்கு காதல் வந்துவிடுகிறது. பரஸ்பரம் இருவரும் மாற்றி மாற்றி தங்களை பற்றி பொய் சொல்ல, அது தெரியும் போது, தாஙகள் ஏமாற்றபட்டதால் காண்டாகி போய் ஒருவரை ஒருவர் மாட்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த இருவரின் ஈகோவும் உடைந்து தங்கள் காதலை சொன்னார்களா இல்லையா? அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா..? என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.ஜீவாவுக்கு ஏற்ற வேடம்.. மிக இயல்பாய் நடித்திருக்கிறார். படம் நெடுகிலும் அவரும், சந்தானமும், சில சமயம் கிச்சு,கிச்சும், சில சமயம் நம்மை மறந்து சிரிக்க வைக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு முறை சந்தானம் புது செல் வாங்கும் போதும், அதை ஜீவா உடைப்பதும் சூப்பர்.. அதில் உச்சம் சந்தானம் புதுசு, புதுசாய் செல் வாங்கி வந்து காட்டினால் அதை வாங்கி சக்தியிடம் பேசி விட்டு கோபத்தில் உடைக்கிறான் என்று லேண்ட்லைன் போன் வைத்திருந்தால் அதையும் மப்பாகி அதன் மேல் விழுந்து உடைக்கும் இடம் சூப்பர்.

கதாநாயகி அனுயா.. வேறு நல்ல முகமே கிடைக்கவில்லையா.. எப்ப பார்த்தாலும் விளக்கெணணைய் குடித்தார் போலிருக்கிறது அவரது முகம். பல இடங்களில் ரியாக்‌ஷன்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கிறது. இவரால் பல இடங்களில் படம் இழுவையாகிறது.

இம்மாதிரியான கதைகளுக்கு ஒரு அழகான, இளமையான, பார்க்கும் நமக்கே லவ் செய்யலாமாங்கிற ஒரு தோற்றம் வேண்டும் அது மிஸ்ஸிங்.. பாவம் அவர் ஒவ்வொரு வார்த்தையையும், ப்ராம்ட் வாங்கி பேசுவது நன்றாய் தெரிகிறது.

ஜீவாவின் அம்மாவாய் ஊர்வசி.. இவரை காமெடியாய் யூஸ் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் அவரை ஒரு லூசு போல காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர். அதே போல் அனுயாவின் அப்பா ஞானசம்பந்தம் கேரக்டரும், அவர் சீரியஸ் அப்பாவா, அல்லது சும்மா வந்திட்டு போற அப்பாவான்னு தெரியல.. அதிலும் க்ளைமாக்ஸில் ஜீவா அவருடய பெண்ணை “மேட்டர்” பண்ணிவிட்டதாய் அவரிடமே சொல்ல.. அதை ஊர்வசியும், ஞானசம்பந்தமும், அதை பற்றி புரியாமல் பேச, அனுயா எந்தவிதமான உணர்வுகளும் இல்லாமல், ஜீவாவை பற்றி பேசுவது காமெடி என்கிற அபத்த கூத்து.

அதே போல் ஜீவா, அனுயா வேலை செய்யும் ஆபீசில் போய் குடித்துவிட்டு நட்ட நடு ஆபீஸில் சட்டையில்லாமல் போய் பிரச்சனை பண்ண, அங்கே வரும் போலீஸ் அவனிடம் என்ன காதல் பிரச்சனையா..? என்று கேட்டுவிட்டு செலவுக்கு காசு கொடுத்துவிட்டு போவது இன்னொரு காமெடி என்கிற அபத்த கூத்து.

சத்யன், அனுயாவின் அண்ணன், இவரும் தன் பங்குக்கு ஆங்காங்கே வந்து நம்மை சிரிக்க வைக்க முயற்சி பண்ணுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். அனுயாவும், ஜீவாவும் சந்திக்க வைப்பதற்காகவே ஏற்பட்ட கேரக்டர்.

அனுயா, ஜீவாவிடம் தன் காதலை டாஸ்மாக் பாரில் வ்ந்து சொல்வது புதிது. ஆனால் அந்த காட்சிக்கு சுற்றுபுறத்தில் உள்ள மற்ற குடிகாரர்கள் எந்த விதமான ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இருப்பது ஆச்சர்யம். மற்ற குடிகாரர்களை வைத்து இன்னும் அருமையாய் செய்திருக்கலாம் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் கதை இங்கயே முடிந்துவிட்டது. அதற்கு அப்புறம், கோயில், கல்யாணம், கல்யாணத்துக்கு முன் செக்ஸ், மறுபடியும், சண்டை, க்ளைமாக்ஸ் என்று இழுத்திருக்கிறார்கள்.

சக்தி சரவணனின் ஓளிப்பதிவு ஒகே. ஒரு சில காட்சிகளில் பேக்ரவுண்ட் ப்ளீச் அடிக்கிறது. முக்கியமாய் ஜீவா, அனுயாவை தேடி தாய் ஏர்வேஸுக்கு வந்து பேசும் காட்சி, பல காட்சிகள் ஹேண்ட் ஹெல்டில் எடுக்கபட்டிருக்கிறது. அதனால் நிறைய காட்சிகள் நீளமாய், கொஞ்சம் ட்ராமா போல் இருக்கிறது. ஒரே சமயத்தில் ப்ரேமில் நான்கு பேர் தொடர்ந்து நின்றபடி, ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டபடி மாற்றி, மாற்றி பேசுவது, ஓவர்லாப்பில் டயலாக் போய்விடுகிறது.

யுவனின் இசையில்.. ஒரு கல், ஒரு கண்ணாடி சூப்பர்.. மற்ற பாடல்க்ளை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லை. டைட்டிலில் வரும் ஆரம்ப பிண்ண்னி இசை துள்ளல்.. ஏனென்றால் அது அவங்க அப்பா மணிரத்னம் படத்துக்கு அடிச்ச பிரபல ரீரிக்காட்டிங்.. பின்னால் அதே டியூனில் அவர் பாட்டு வேறு போட்டிருக்கிறார். பிண்ணனி இசையும் ஒகே.


இயக்குனர் ராஜேஷ், மிகவும் நம்பியிருப்பது டயலாக்குளை என்று தெரிகிறது, பல இடங்களில், இயல்பான நகைச்சுவை நம்மை கட்டி போடுகிறது. சில இடங்களில் ரொம்ப பேசறாங்கப்பா..ன்னு தோணுது. முதல் பாதி ரொம்பவே நீளம். இதோ..இதோ என்று இடைவேளையை எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள்.

கொஞ்சம் கேரக்டரைசேஷனிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால்..??? நிறைய விஷயஙக்ள் பெரிசாய் ஒட்டவில்லை, முக்கியமாய் அந்த பர்த்டே சீன், எவ்வளவோ அருமையாய் வந்திருக்க வேண்டிய சீன் அதை மிஸ் பண்ணிவிட்டீர்கள், அதே போல் அந்த டாஸ்மாகில் காதலை சொல்லும் சீன் அதிலும் நிறைய ஸ்கோர் பண்ண வாய்பிருந்தும் ..?? ஒரு வேளை படம் கலகலவென போனால் போதும் என்று இருந்துவிட்டாரோ..?

அதே போல் பஸ்ஸில் ஜீவா பேசியதை அனுயா காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்காமல் போய்விட்டார் என்பதை அவர் ஹெட்போனை காதிலிருந்து கழட்டி காண்பிக்கும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு மொத்த சீனையும் ப்ளாக் & வொயிட்டில் ரீவைண்ட் ஷாட்ஸ்? அந்த நிமிடத்தில் ஜீவாவின் மேல் கிடைக்க வேண்டிய சிம்பதி இந்த காட்சிகளினால் விரையமாகிறது.

படம் காமெடி படமா, காதல் படமா என்ற குழப்பத்தினால், பல இடங்களில் லாஜிக் மீறின சீரியல் டிராமா காட்சிகளால், இம்மாதிரியான படங்களின் அந்த காதலர்களை பார்க்கும் போது படம் பார்பவர்களின் மனநிலை,அவர்கள் எப்படியாவது சேரவேண்டும், இரண்டு பேரில் யாராவது விட்டு கொடுங்களேன் என்று நம் மனது பதைக்கும், இந்த நடுவாந்திர திரைக்கதை அமைப்பினால் ஒரு அழகான காதல் கதையை மிஸ் செய்துவிட்டார்கள். எதிர்பார்பில்லாமல் போனால் ஜஸ்ட் ரசிக்கலாம்..

சிவா மனசுல சக்தி - ஜஸ்ட் மிஸ்..

டிஸ்கி: விகடன் டாக்கீஸின் லோகோ அனிமேஷன் யாரும் எதிர்பார்காத வகையில் சூப்பர்..Blogger Tips -நிதர்சன கதைகள்-4- நண்டு என்கிற சிறுகதை> பதிவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

62 comments:

sriram said...

ஞாயித்துக்கிழமை தானே சொன்னாங்க சினிமா விமர்சனம் போடவேண்டாம் என்று? அடங்க மாட்டேங்கறீங்க...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston

இராகவன் நைஜிரியா said...

நண்பர் சங்கர் அவர்களே...

பதிவு பாதிதான் வந்திருக்கு...

பாதி இங்க இருக்கு... மீதி எங்க...

(அதுதான் இது என்று ஜோக் அடிக்ககூடாது... ஆமாம் சொல்லிபுட்டேன்)

இராகவன் நைஜிரியா said...

உங்களைப் பார்த்தா கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்குங்க..

ஒரு படம் பார்க்கவே முடியமாட்டேங்குது, இவ்வளவு படம் பார்த்து எல்லாவற்றிற்கும் விமர்சனம் எழுதுவது என்பது மிகப் பெரிய விசயம்.

Hats off to you.

இராகவன் நைஜிரியா said...

Me the first?

பாலா said...

விமர்சனம்.. பாதியோட நிக்குது சங்கர்...!!!

Cable சங்கர் said...

//ஞாயித்துக்கிழமை தானே சொன்னாங்க சினிமா விமர்சனம் போடவேண்டாம் என்று? அடங்க மாட்டேங்கறீங்க...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம், Boston//

முடியலை ஸ்ரீராம்..

Cable சங்கர் said...

//நண்பர் சங்கர் அவர்களே...

பதிவு பாதிதான் வந்திருக்கு...

பாதி இங்க இருக்கு... மீதி எங்க...//

சாரி ராகவன் பாதி எழுதிட்டு இருக்கும் போதே திடீர்னு பப்ளிஷ் ஆயிருச்சு போலருக்கு எனக்கு தெரியல. காலையில பார்த்தா பாதி வந்திருக்கு. இப்ப முழுசா போட்டுட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Shankar manasile soso
SMS

Cable சங்கர் said...

///Shankar manasile soso
SMS//

ஆமாம் சார்.. ஒரு வேளை விகடன்றதுனால ரொம்ப எதிர்பார்த்துட்டனோ..??

Anbu said...

நன்றாக இருந்தது அண்ணா உங்கள் விமர்சனம்

நன்றி.தொடரட்டும் உங்கள் பணி...

அத்திரி said...

மறுபடியும் என்னை காப்பாற்றிய அண்ணா உன்மையிலே நீங்க தெய்வத்தின் தெய்வம்...

ஷண்முகப்ரியன் said...

அட,நேற்று இரவுதான் படம் பார்க்கவில்லை என்று சொன்னீர்கள்.அதற்குள் விமர்சனமா?உங்கள் வேகத்துக்கும், படம் பார்க்கத் தேவையில்லாமல் பல பேரைக் காப்பற்றியதற்கும் நன்றி ஷங்கர்!

கார்க்கிபவா said...

அய்யோ ஜீவாவும் பரத்தும் இளைய தலைமுறையில் என் ஃபேவரிட்.. தொடர் தோல்விகள்.. பாவம்..

Bleachingpowder said...

//பேக்ரவுண்ட் ப்ளீச் அடிக்கிறது.//
//பல காட்சிகள் ஹேண்ட் ஹெல்டில் எடுக்கபட்டிருக்கிறது.//
//ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டபடி மாற்றி, மாற்றி பேசுவது, ஓவர்லாப்பில் டயலாக் போய்விடுகிறது//.

sify,rediff,விகடன்,குமுதம் ஏன் சுஜாதா,சாரு கூட உங்க அளவிற்கு டெக்னிக்கலா படத்த அலசியிருக்க மாட்டாங்க சார். நீங்க பெரிய ஆளுதாங்க. எப்படி இவ்வளவு விசியம் உங்களுக்கு தெரியுது, ஃரேம்னுறீங்க,பேக்கரவுண்ட் ப்ளீச், ஓவர்லாப்பு, ஹேன் ஹெல்டுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு பின்னிட்டீங்க.

முரளிகண்ணன் said...

\\இம்மாதிரியான கதைகளுக்கு ஒரு அழகான, இளமையான, பார்க்கும் நமக்கே லவ் செய்யலாமாங்கிற ஒரு தோற்றம் வேண்டும் அது மிஸ்ஸிங்\\


சரியாக சொன்னீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

ஒரு நல்ல படத்த பார்த்து விமர்சனம் எழுதுவது என்பது நல்ல விசயம். இது மாதிரி மொக்க படத்த பார்த்து விமர்சனம் எழுதுவது என்பது, அய்யோ ரொம்ப கொடுமை.

கொடிது, கொடிது... மொக்கை படத்தை பார்பது..

அதனனிம் கொடிது... அதற்கான விமர்சனத்தை எழுதுவது..

Anonymous said...

சார், விமர்சனம் நல்லா இருக்கு. இந்த அளவுக்கு ஒரு படத்தை ரசிக்கறது பெரிய விஷயம். ஒ.கே. நீங்களும் ஒரு படத்தை கண்டிப்பா இயக்குவிங்க. அந்த படத்திலாவது இது போல குறைகள் இல்லாமல் பார்த்துக்கோங்க. அதை நான் கண்டிப்பா முதல் நாளே பார்ப்பேன். விமர்சனமும் எழுதுவேன் ஒரு சாதாரண ரசிகனா. ஒகேவா.
நன்றி
க. பாலாஜி

Cable சங்கர் said...

//நீங்களும் ஒரு படத்தை கண்டிப்பா இயக்குவிங்க. அந்த படத்திலாவது இது போல குறைகள் இல்லாமல் பார்த்துக்கோங்க. அதை நான் கண்டிப்பா முதல் நாளே பார்ப்பேன். விமர்சனமும் எழுதுவேன் ஒரு சாதாரண ரசிகனா. ஒகேவா./

நிச்சயம் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். பாலாஜி.. முதலில் வாய்ப்பு கிடைக்கட்டும்.. அதற்காகத் தானே காத்திருக்கிறேன்.

RAMASUBRAMANIA SHARMA said...

கேபிள் சங்கர் சார், உங்கள் துறை சார்ந்த டெக்னிகல் விளக்கங்கள் அற்புதம்...முடிந்தவரை இளைங்கர்களை படம் பார்க்கும்படி விமர்சனம் எழுதலாமே...!!! ஏதோ நம்மால் முடிந்தவரை PRODUCER & DIRECTOR...க்கு உதவலாம் என்பது எனது கருத்து....!!!

shabi said...

nalla vela enga vikatan la unga padhiva pottadhunala padam supernu vimarsanam ezhuthuvingannu patthen nalla vimarsanam.vikatan avanga padatthukku enna mark kodutthu vimarsanam potturukkangannu sonna nalla irukkum

வெண்பூ said...

ஊருல இருக்குற எல்லா படத்துக்கும் 40லயிருந்து 45க்குள்ளாற மட்டுமே மார்க் குடுப்பானுங்க.. இந்த படத்துக்கு நீங்களே ஃபெயில் மார்க் போட்டுட்டீங்க.. திரும்ப திரும்ப அவனுங்க படத்தயே போட்டு வெறுப்பேத்தறானுங்கன்னு சன் டிவிய திட்டுனவங்க இந்த வாரம் விகடனை படிக்கலாம்..

Unknown said...

Cable Shankar GAPல கடா வெட்டறார்டோ..................

குமரன் said...

விமர்சனம் ஓகே.

எல்லா பத்திரிக்கைகளும் கவர் வாங்கி கொண்டு, படம் சகிக்கவில்லையென்றாலும், ஆகா! ஓகோ! என எழுதுவார்கள்.

மீடியாக்களும் அப்படித்தான். ஸ்டார் வேல்யூ பார்த்துப் பில்டப்போ செய்வார்கள்.

பதிவர்கள் வந்த பிறகு, அந்த நிலை உடைபட்டிருக்கிறது.

Anonymous said...

மற்றொரு முக்கிய விஷயம் மறந்திருக்கிறீர்கள், சங்கர். விகடன் தயாரிப்பில் வெளிவந்த படம் என்பதால், மதிப்பெண்கள் போட வேண்டும்.

100-க்கு எவ்வளவு தேறும்?

Darmaraj (எ) Darma said...

எல்லாருக்கும் மார்க் போடுற விகடன் தன்னோட இந்தப்படத்திற்க்கு எத்தினை புள்ளி போடுகிறது என பார்ப்போம்

Vidhya Chandrasekaran said...

எனக்குத் தெரியும் தொடர்ந்து ஆவில ஓவர் பில்டப். ஓவர் hype படத்துக்காகாதுன்னு சொல்லிவைக்கனூம்:)

அக்னி பார்வை said...

தல ஆனா தமிழ்ல லேட்டஸ்ட்டா வாந்த (ரொம்ப நாள் கழிச்சு ) ஒரு “Feel Good Movie"... கொஞ்சம் “My Sassy Girl (Korean Movie)" உருவி இருக்காங்க...

அப்புறம் பிகர் பக்க ஒகே, நடிக்க தான் தெரியல. இமேஜ் பாக்காமல் ஜீவா நல்ல நடித்திருக்கிறார்... படம் ஒகே

ச.ஜெ.ரவி said...

அதே போல் பஸ்ஸில் ஜீவா பேசியதை அனுயா காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு கேட்காமல் போய்விட்டார் என்பதை அவர் ஹெட்போனை காதிலிருந்து கழட்டி காண்பிக்கும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு மொத்த சீனையும் ப்ளாக் & வொயிட்டில் ரீவைண்ட் ஷாட்ஸ்?
//////////////////////////////////

ச.ஜெ.ரவி said...

ரீவைன்ட் சாட்ல, ஜீவா ரியாக்ஷன கவனிக்கல. அவர் பேச்சுல இருந்த பீலிங், ரியாக்ஷன்ல இருக்காது. அதை சொல்லத்தான் அந்த ரீவைன்ட் சாட். ரீவைன்ட் சாட் அப்படீன்னதும், கண்ணை மூடீட்டிங்களா. நல்ல கவனிங்கப்ப.
எல்லாம் சரி இந்த மொக்க படத்துக்கு, விகடன் எத்தனை மார்க் கொடுப்பாங்க?

Anonymous said...

நீங்கள் கதாநாயகியை இப்படி வாரி இருக்க, லக்கியோ புகழ்ந்து தள்ளி இருக்கிறார்...யார் பார்வையில் கோளாறு...? :-)

அது மாதிரி, நீங்கள் சினிமாவுடன் சம்பந்தபட்டு இருப்பதால், ஒரு வெகு ஜன ரசிகனின் எல்லைக்கு அப்பாற்பட்டு உங்கள் விமர்சனம் இருக்கிறது (more technical details)..மாற்றி கொள்ளுங்கள், ஷங்கர்...

Cable சங்கர் said...

//நீங்கள் கதாநாயகியை இப்படி வாரி இருக்க, லக்கியோ புகழ்ந்து தள்ளி இருக்கிறார்...யார் பார்வையில் கோளாறு...? :-) //

ஒவ்வொருவருக்கு ஒரு மாதிரியான பிகர் பிடிக்கும். அதுக்காக.. அதை நான் என் பார்வை கோளாறு என்று சொல்ல மாட்டேன். படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் கதாநாயகி.. முடிந்தால் தைரியம் இருந்தால் தியேட்டரில் சென்று பார்த்து சொல்லவும்..

Cable சங்கர் said...

//அது மாதிரி, நீங்கள் சினிமாவுடன் சம்பந்தபட்டு இருப்பதால், ஒரு வெகு ஜன ரசிகனின் எல்லைக்கு அப்பாற்பட்டு உங்கள் விமர்சனம் இருக்கிறது (more technical details)..மாற்றி கொள்ளுங்கள், ஷங்கர்...//

நான் சினிமாவுடன் சம்மந்தபட்டு இருப்பதால் மட்டும்மல்ல.. நான் எப்போதாவ்து எல்லோரும் நல்லாயிருக்குன்னுசொனதுக்கு அப்புறம் படம் பார்பவன் அல்ல. சின்ன பட்ஜெட் படமாயிருந்தாலும், தியேட்டரில் சென்று படம் பார்பவன். அதனால் என் கண்ணோட்டத்தில் எதுவும் தவறிருப்பதாய் தெரியவில்லை சரவணன் அதுமட்டுமில்லாமல்.. டெக்னிகல் டீடைய்ல்ஸை கொடுப்பது என்னை போன்ற சினிமா அறிவுள்ளவர்கள்.. உஙகளை போன்றவர்களுக்கு புரிய வைக்க செய்யும் முயற்சியாகும்.. நன்றி..

Cable சங்கர் said...

//ரீவைன்ட் சாட்ல, ஜீவா ரியாக்ஷன கவனிக்கல. அவர் பேச்சுல இருந்த பீலிங், ரியாக்ஷன்ல இருக்காது. அதை சொல்லத்தான் அந்த ரீவைன்ட் சாட். ரீவைன்ட் சாட் அப்படீன்னதும், கண்ணை மூடீட்டிங்களா.//

தலைவா.. ஜீவா கண்ணை மூடினா என்ன.. மூடாட்டா என்ன.. முக்கியமா அந்த சீன்ல நம்ம மனசுல பதியவேண்டியது அந்த அவ அவன் பேசுனத கவனிக்கல.. அதனால அந்த பையன் பேர்ல ஒரு சாப்ட்கார்னர் வர்றதுக்கான சீன்.. தேவையில்லாம நீங்களே ஒரு விஷயத்தை சொல்லதீங்க.. அந்த ஷாட்ல அவஙக லைவ்ல காட்டாத சீன் கொஞ்சம் காட்டுவாங்க.. அவ்வளவுதான்.. தலைவா. மொத்த்துல அந்த ரீவைண்ட் ஷாட்னால படத்துல அவங்க ஏற்படுத்த நினைச்ச இம்பாக்ட் ஓகயா..?? நன்றி ரவி..

Cable சங்கர் said...

//தல ஆனா தமிழ்ல லேட்டஸ்ட்டா வாந்த (ரொம்ப நாள் கழிச்சு ) ஒரு “Feel Good Movie"... கொஞ்சம் “My Sassy Girl (Korean Movie)" உருவி இருக்காங்க...//

தலைவா.. அப்ப நீஙக் சமிபகாலத்துல ஒரு feel good movie அ பார்கலைன்னு நினைக்கிறேன். நிஜமாவே அதுமாதிரியான படம் கொஞ்சம் இஸ்டம், கொஞ்சம் கஸ்டம்... போய் பாருங்க அக்னி.. இந்த படம் செகண்ட் ஆப்.. ரொம்ப கஷ்டம்..

Cable சங்கர் said...

//எனக்குத் தெரியும் தொடர்ந்து ஆவில ஓவர் பில்டப். ஓவர் hype படத்துக்காகாதுன்னு சொல்லிவைக்கனூம்:)//

வித்யா.. படம் பூராவும் எங்கே பார்த்தாலும் யாராவது ஒருவரோ.. அல்லது பேக்ரவுண்டிலோ.. படம் முழுக்க விகடன் தெரியராப்புல பண்ணியிருக்காங்க.. இவ்வளவு மெனக்கிடற்துக்கு.. பேசாம் கீழே விழுந்தாலும் மண் ஓட்டலைன்னு ஒத்துகிட்டு.. பழைய விகடனை தரலாமில்ல..

Cable சங்கர் said...

//எல்லாருக்கும் மார்க் போடுற விகடன் தன்னோட இந்தப்படத்திற்க்கு எத்தினை புள்ளி போடுகிறது என பார்ப்போம்//

அதானே அவங்களுக்கு வந்த பெரிய ப்ராப்ளம். எனக்கு தெரிஞ்சு விமர்சனம் போடமாட்டாங்கன்னு நினைகிறேன். என்னுடய ம்திப்பெண்.35

Cable சங்கர் said...

//எல்லா பத்திரிக்கைகளும் கவர் வாங்கி கொண்டு, படம் சகிக்கவில்லையென்றாலும், ஆகா! ஓகோ! என எழுதுவார்கள்.

மீடியாக்களும் அப்படித்தான். ஸ்டார் வேல்யூ பார்த்துப் பில்டப்போ செய்வார்கள்.

பதிவர்கள் வந்த பிறகு, அந்த நிலை உடைபட்டிருக்கிறது.//

தலைவா நானெல்லாம் சொந்த காசைபோட்டு படம் பாக்கிறவனாக்கும். அதனால் தான் விமர்சனங்களில் கட்டுப்படுத்தபடாமல் சூடாய் இருப்பதற்கு காரணம்.

Anonymous said...

உங்கள் பதில்கள் எல்லாம் பார்த்தால், விமரிசனங்களை எல்லாம் தாங்கி கொள்பவர் போல் தோன்றவில்லை...

Cable சங்கர் said...

//உங்கள் பதில்கள் எல்லாம் பார்த்தால், விமரிசனங்களை எல்லாம் தாங்கி கொள்பவர் போல் தோன்றவில்லை...//

அப்படியே வச்சுக்க..

Cable சங்கர் said...

//சரியாக சொன்னீர்கள்.//

நன்றி முரளி..

Cable சங்கர் said...

நன்றி சண்முகப்பிரியன், அன்பு, கார்கி..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Cable சங்கர் said...

//sify,rediff,விகடன்,குமுதம் ஏன் சுஜாதா,சாரு கூட உங்க அளவிற்கு டெக்னிக்கலா படத்த அலசியிருக்க மாட்டாங்க சார். நீங்க பெரிய ஆளுதாங்க. எப்படி இவ்வளவு விசியம் உங்களுக்கு தெரியுது, ஃரேம்னுறீங்க,பேக்கரவுண்ட் ப்ளீச், ஓவர்லாப்பு, ஹேன் ஹெல்டுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு பின்னிட்டீங்க.//

ஆனாலும் இப்படி வஞ்சப்புகழ்ச்சி அணியெல்லாம் ஆவாதுங்கண்ணா..

பாலா said...

கலக்கிட்டீங்க சங்கர்..!!!

ஒரு லட்சத்திற்கு... வாழ்த்துகள்!!!!!

பத்து லட்சமாக ரொம்ப நாள் இல்லை!!!!

Congrats.!!!!!

குப்பன்.யாஹூ said...

கேபிள் சங்கர் நீங்க ரொம்ப நல்லவரு.

ஆமா இந்த மாதிரி படத்தையும் பாக்ரிங்க்லே பொறுமையா.

ராகவன் சொல்ற மாத்ரி ஒரு படத்தையே எங்களால் முழுசா பாக்க முடியலை.

இந்த மாத்ரி படங்களை பாக்கிற நேரத்துல நாலு கவிதை, சிறுகதை, கட்டுரை படிச்சாலாவது நன்மை உண்டாகும். இல்லாவிடில் நாலு முதியோர், அனாதை சிறுவர்களுடன் நம் நேரத்தை பகிர்ந்து கொள்ளலாம், இல்லை நாற்பது பின்னோட்டம் இட்டு நம் பொழுதை பார்க்கலாம்.

முன்னெச்சரிகை- தாங்கள் தவிர்க்க வேண்டிய மொக்கை படங்கள்: கந்தசாமி, விண்ணை தாண்டி வருவாயோ...

குப்பன்_யாஹூ

அத்திரி said...

லட்சம் ஹிட்ஸ் வாழ்த்துக்கள் அண்ணே

அத்திரி said...

எப்படித்தான் சளைக்காம பதில் சொல்றீங்களோ

Cable சங்கர் said...

//எப்படித்தான் சளைக்காம பதில் சொல்றீங்களோ//

பின்ன இவ்வளவு கஷ்டப்பட்டு பின்னூட்டம் போடறாஙக்..

Cable சங்கர் said...

//லட்சம் ஹிட்ஸ் வாழ்த்துக்கள் அண்ணே//

நன்றி சார்.. மிக்க நன்றி.. உங்கள் ஆதரவுக்கும் நன்றி..

Cable சங்கர் said...

//இந்த மாத்ரி படங்களை பாக்கிற நேரத்துல நாலு கவிதை, சிறுகதை, கட்டுரை படிச்சாலாவது நன்மை உண்டாகும். இல்லாவிடில் நாலு முதியோர், அனாதை சிறுவர்களுடன் நம் நேரத்தை பகிர்ந்து கொள்ளலாம், இல்லை நாற்பது பின்னோட்டம் இட்டு நம் பொழுதை பார்க்கலாம்.//

:):):):):(:(:(---

Cable சங்கர் said...

//கலக்கிட்டீங்க சங்கர்..!!!

ஒரு லட்சத்திற்கு... வாழ்த்துகள்!!!!!

பத்து லட்சமாக ரொம்ப நாள் இல்லை!!!!

Congrats.!!!!!//

நன்றி பாலா.. உங்கள் ஆதரவுக்கு மிக்க் நன்றி..

வேத்தியன் said...

அப்ப படத்த அடிச்சு புடிச்சு போய் பார்க்கத் தேவையில்ல போலிருக்கே...
ஆறுதலா போய் பாக்கலாம் இல்ல???

Anonymous said...

shame on you, Shankar. You dont even given proper respect for your blog readers..

Appadiye vachukava? ennatha?

Cable சங்கர் said...

//shame on you, Shankar. You dont even given proper respect for your blog readers..

Appadiye vachukava? ennatha?//

பேர் போட்டு பின்னூட்டமிட தைரியமில்லாதவஙகளோட பின்னூட்டத்தை வெளியிடறதே உங்களுக்கு கொடுக்கிற பெரிய மரியாதை.. அதுக்கும் மேல அதுக்கு பதில் போடறது ராஜ மரியாதை.

Today' preach
பெயர் சொல்ல அல்லு இல்லாதவஙக்.. அறிவுரை சொல்ல கூடாது..

Cable சங்கர் said...

//Cable Shankar GAPல கடா வெட்டறார்டோ..................///

ஆகாய மனிதன் தலைவா.. நீஙக் என்ன சொல்றீங்கன்னு சத்தியமா புரியல.. அதென்ன கேப்புல கடா வெட்றதுன்னு சொன்னீங்கன்னா புண்ணீயமா போகும்..

Cable சங்கர் said...

//sify,rediff,விகடன்,குமுதம் ஏன் சுஜாதா,சாரு கூட உங்க அளவிற்கு டெக்னிக்கலா படத்த அலசியிருக்க மாட்டாங்க சார். நீங்க பெரிய ஆளுதாங்க. எப்படி இவ்வளவு விசியம் உங்களுக்கு தெரியுது, ஃரேம்னுறீங்க,பேக்கரவுண்ட் ப்ளீச், ஓவர்லாப்பு, ஹேன் ஹெல்டுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு பின்னிட்டீங்க.//

மிக்க நன்றி பிளீச்சிங்.. படம் நல்லாருந்திச்சுன்னு வச்சிக்கங்க.. இதையெல்லாம் பார்க்கக்கூட முடியாது.. ரொம்ப போர் அடிச்சதுனாலதான் இதையெல்லாம் கவனிக்க முடிஞ்சிச்சி.. அது சரி நீங்க சொன்னது பாராட்டா..? இல்லை உள்குத்தா..?
பாராட்டா இருந்தா நன்றியோ நன்றி..
உள்குத்தா இருந்தா மிக்க நன்றி..

ஹி..ஹி.. நிலைமைய சொல்லிட்டேன்..

Cable சங்கர் said...

//கேபிள் சங்கர் சார், உங்கள் துறை சார்ந்த டெக்னிகல் விளக்கங்கள் அற்புதம்...முடிந்தவரை இளைங்கர்களை படம் பார்க்கும்படி விமர்சனம் எழுதலாமே...!!! ஏதோ நம்மால் முடிந்தவரை PRODUCER & DIRECTOR...க்கு உதவலாம் என்பது எனது கருத்து....!!!//

சார்.. உங்கள் வ்ருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.. எல்லோரும் தியேட்ட்ரில் சென்று படம் பார்க்க வேண்டும் என்பது தான் என் ஆவல் சார். அதுக்காகத்தான் இந்த விமர்சனம் எல்லாமே.. ஒரு வேளை என்னுடய விமர்சனம் ஹார்ஷாக இருந்தால், கொஞ்சம் தன்மையாய் எழுத முயற்சிக்கிறேன். சார்.. மீண்டும் நன்றி.

பாலா said...

//ஒரு வேளை என்னுடய விமர்சனம் ஹார்ஷாக இருந்தால், கொஞ்சம் தன்மையாய் எழுத முயற்சிக்கிறேன். சார்.. மீண்டும் நன்றி//

அப்படியெல்லாம் ‘தன்மை’யா எழுதாதீங்க தல. மனசுக்கு பட்டதை எழுதுங்க. நீங்க வினியோகம் செஞ்ச படத்தையே ‘டார் டாரா’ கிழிச்சவரு நீங்க. அந்த தைரியம் இல்லாத குமுதம், விகடன் மாதிரி பத்திரிக்கைகள் எழுதும் படித்தே பழகிய எங்களுக்கு.. உங்களோட விமர்சனங்கள்தான்.. பெரிய ரிலீஃப்.

என்னை கேட்டா... விமர்சனங்கள் இன்னும் கடுமையா இருக்கனும்.

பாலா said...

//பெயர் சொல்ல அல்லு இல்லாதவஙக்.. அறிவுரை சொல்ல கூடாது..//

சரியா சொன்னீங்க. ஒருவேளை தயாரிப்பு தரப்போட உள்குத்தோ?

பாலா said...

//RAMASUBRAMANIA SHARMA said...
முடிந்தவரை இளைங்கர்களை படம் பார்க்கும்படி விமர்சனம் எழுதலாமே...!!! //

தாராளமா எழுதலாம். முதல்ல அவங்க குறைந்தபட்சம் படம் பார்க்கற மாதிரியாவது எடுக்கட்டும்.

பெங்களுர்காரன் said...

Thanks for the vimarsanam.

You saved me some good time and money :). Thought of seeing the movie in a theatre coz of its production banner and the catchy name.

Sabari
Bangalore

Cable சங்கர் said...

///hanks for the vimarsanam.

You saved me some good time and money :). Thought of seeing the movie in a theatre coz of its production banner and the catchy name.///

நன்றி சபரி..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Unknown said...

Sassy Girls(http://en.wikipedia.org/wiki/My_Sassy_Girl) (http://www.youtube.com/watch?v=nRNgGWpzmp4) இந்த seen ஆர்யாவ வச்சி உல்டா பண்ணிடாங்க