Thottal Thodarum

Feb 19, 2009

வி.த.வ.போ.படம்- Happy Days


ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம்.

தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா..

மேல் தட்டு குடும்பத்திலிருந்து வரும் அழகான மது. (சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை நாயகி மதுவிக்கு சரியான் பொருத்தம்.. அவர் தான் நடிக்கிறார்.)


அதிபுத்திசாலியான ரொபாடிக்ஸில் ஆர்வம் உள்ள அப்பாவியான டைசன்..

ஏழை குடும்பத்திலிருந்து சீட் கிடைத்து எப்படியாவது முதல் மாணவனாக வேண்டும் என்ற வெறியோடு சேரும் செல்ஃபிஷான சங்கர்.

டொனேஷன் சீட்டில் காசு கொடுத்து சேரும் புரத்ட்டூர் எம்.எல்.ஏ. பையன் ராஜேஷ்.

தன் அழகை பற்றி, அவ்வளவாக கவலைபடாடத, ஆண்பிள்ளை போல் நடந்து கொள்ளூம் அப்பு என்கிற அபர்ணா.

கண்களாலேயே பேசும் சீனியர் ஷாரப்ஸ்,


ஸ்ரீகாக்குளத்திலிருந்து, தெலுங்கு மீடியத்திலிருந்து வரும் மாணவன், வெளிவட்டார பழக்கமே இல்லாமல் வீட்டிலிருந்தே படித்து காலேஜிக்கு வரும் பாண்டு, குண்டு சீனியர், ஜூனியர் மதுவை காதலிக்கும் சினியர் கேரக்டர்கள் என்று எல்லா கேரக்டர்களும் நாம் பார்த்து, மகிழ்ந்த நண்பர்கள் போலவே தெரியும்.

இவர்களுக்குள் நடக்கும் அந்த நாலு வருட வாழ்கை அவர்களுக்கு என்ன என்ன கற்று தருகிறது என்பதை அவ்வளவு இயல்பாய் சொல்லியிருக்கிறார். இவர்கள் எல்லோரும் நட்பு எவ்வாறு உருவாகி இருக்கமாகிறார்கள்? சந்துவிக்கும், மதுவிக்கும், அப்புவுக்கும் ராஜேசுக்கு, டைசனுக்கும் சீனியர் ஷாரப்ஸுக்கும், சங்கருக்கும், சங்கீதாவுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதற்கு அப்புறம் நடக்கும் ஊடல், மோதல், அவர்களின் உறவு பலப்படுதல்,அந்த உறவின் காரணமாய் அவர்கள் வாழ்கையில் பெரும் வெற்றி தோல்விகள் என்று படம் முழுவதும் வாழ்ந்த உணர்வு உங்களுக்கு வந்தே தீரும்

சங்கரின் காதலி சங்கீதாவின் வரவால் நன்றாய் படிக்கும் மாணவன் அரியர்ஸ் வைப்பதும், அவள் அவனை ஏமாற்றி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த டைசன், அவனுக்காக தன்னுடய கம்ப்யூட்டர் சயின்ஸ் குருப்பை விட்டு கொடுத்த டைசன், அவளை நம்பாதே என்று சொல்லும் போது அவன் டைசனை அடிக்க, அவன் ஓரு செல்பிஷ் என்று தெரிஞ்சிகிட்டே அவனுக்கு போய் அட்வைஸ் பண்றியே அவனுக்கு பிரண்ட்ஷிப் வேல்யூவே தெரியாது என்று சந்து சொல்ல.. அப்போது டைசன் அவனுக்கு தெரியலைன்னா என்ன நாம அவனுக்கு பிரண்ட்தானே என்று சொல்லும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ராஜேஷ், அவனுக்கு ஹெல்ப் பண்ணும் அப்பு, இடையில் வரும் இங்கிலீஷ் லெக்சரர் கமலினி முகர்ஜி.. என்று கலந்து கட்டிய ஓரு சுகானுபவம்.. படத்தில் அங்காங்கே ஃபாண்டஸியாய் காட்சிகள் வந்தாலும் அந்த வயதில் பாண்டஸியில்லாத வாழ்கை இருந்திருக்குமா?

சந்துவிக்கும், மதுவுக்கும் இடையே காதல் அரும்புவதற்கு முன்பே அவளை கிஸ் கேட்க, அவளின் அப்பா.. அதை கேட்டு விட அதனால் அவமானம் அடையும் மது என் தந்தையிடம் மன்னிப்பு கேட்ட்டல்தான் என்று சொல்ல.. என்னனு மன்னிப்பு கேட்க, உங்க பொண்ணு கிட்ட கிஸ் கேட்டேன் சாரி ன்னா. அது என்னால் முடியாது.. என்பதில் ஆரம்பித்து ஈகோவினால் இருவரும் இரண்டுவருடத்திற்கு பேசாமல் ஓன்றாகவே இருப்பதும், புதிய ஜூனியர் பெண் சந்துவுடன் பேசுவதை பார்த்து பெருமுவதும், அழகான கவிதை..

ஜூனிய்ர் டைசனுக்கும், சீனியர் ஷராப்ஸுக்கும் இடையில் ஏற்படும் காதலை ஏற்றும் ஏற்காமலும் தன்னுடய கோல் வேறு எதிலும் நான் கட்டுபட்விரும்பவிலலை என்றும், டைசன் அவளுக்குகாக் எங்கும் போனாலும் எனக்காக ஓரு சான்ஸ் வரும் வரை காத்திருப்பேன் என்பதும். இந்த காட்சியில் காதலை சொல்லி, அல்லது சொல்லாமல் நாம் காலேஜில் வாழ்ந்த காலங்களை உங்கள் கண் முன் வரவில்லை என்றால் அது மிகப் பெரிய பொய்.

இவர்களின் காலேஜ் வாழ்கையின் முடிவில் கல்லூரி முதல்வர் அவர்களை அழைத்து, இதுநாள் நீங்கள் வாழ்ந்தது உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஹேப்பி டேஸ்.. இத்தோட முடிய போகுது.. இனிமே வரப்போற் நாட்கள் உங்க்ள் வாழ்வில் ஏற்படப்போகும் பர்பஸ்புல் டேஸ். என்பது நிதர்சனமான உண்மை என்பதை நாம் கல்லூரியின் கடைசி நாள் அன்று உணர்ந்திருப்போம்.


அற்புதமான ஓளிப்பதிவு, மைக்கேல்.ஜே.மேயரின் அற்புதமான இசை, நடித்த அனைவரும் புதுமுகங்கள். என்று சத்யம் செய்தால் தான் நம்புவீர்கள்.. கமலினி முகர்ஜி தவிர.. இயல்பான வசனங்கள்.. மனதை வருடும் ரிரிக்கார்டிங்.. அற்புதமான இயக்கம் என்று எதையுமே குறை சொல்ல முடியாத படம்.


படத்தை பார்த்தவர்கள் காலேஜ் என்றால் நட்பு, காதல், இதைதவிர வேறேதும் கிடையாதா.. இதையெல்லாம் பெரிய ப்ராப்ளமா என்று கேட்பவர்களுக்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் படிக்கும் போது எதிர்கால இந்தியா பற்றியா நினைத்து வாழ்ந்திர்கள் என்று.. படத்தை பார்க்கும் போது அவர்களின் வாழ்கையாய் படத்தை பார்த்தால் இழந்த ஹேப்பிடேஸை நமக்கு கொண்டுவரும் படம்.. அட்லீஸ்ட் நிஜத்தை மற்கக...

இயக்குனர் சேகர் கம்மூலாவை பற்றி..

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த இவர் திரை துறையின் மேல் உள்ள் ஆர்வத்தால் வேலையை விட்டு முதல் முதலாய் “டாலர் டிரீம்ஸ்” என்ற படத்தை இயக்கினார். அதில் அவருக்கு ஓரு அடையாளம் தெரிய, அடுத்து, “ஆனந்த்” என்ற் ஓரு இனிமையான படம், அதற்கு அப்புறம் “கோதாவரி’என்ற ஓரு அருமையான் காதல் கதை, இப்போது “ஹேப்பி டேஸ்” அடுத்த படத்துக்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன்..

டிஸ்கி : Happy days படத்தை தமிழில் தயாரிப்பதாய் பிரகாஷ்ராஜ் உரிமை வாங்கி வைத்துள்ளார். ஓளிப்பதிவாளர் குகன் இயக்குகிறார். முழுக்க, முழுக்க,புதியவர்களை கொண்டு தயாரிக்க படும் இப்படத்தில் தெலுங்கில் நடித்த சோனியா மட்டும் தமிழிலும் தொடர்கிறார். எனக்கு கூட அந்த கேரக்டரில் வேற ஓருவரை பார்க்க மனம் இடம் கொடுக்க வில்லை. ஹூம்.. சோனியா..

வி.த.வ.போ. படம்னா.. விரைவில் தமிழில் வரப் போகும் படம்..

படித்ததில் பிடித்தது
"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???

திவ்யா அவர்களின் பதிவிலிருந்து.. மேலும் படிக்க


Blogger Tips -சிவா மனசுல சக்தி- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

31 comments:

வினோத் கெளதம் said...

தல என்ன திடிர்னு மீள்ப்பதிவு..

ஷங்கர் Shankar said...

என்ன சங்கர் திடீரென்று பழைய படத்தை பற்றி விமர்சனம் எழுதியிருக்கீர்கள்

ஷங்கர் Shankar said...

நீங்க சொன்ன மாதிரியே படத்தில் ரொம்ப அழகு சீனியர் ஷாரப்ஸ் தான்

பாலா said...

சங்கர்.. இது ஏற்கனவே எழுதின விமர்சனம்தானே?! ஏன் திரும்பி பப்ளிஷ் பண்ணியிருக்கீங்க.?

தமில்-ல வரப்போறனாலா?

கார்க்கிபவா said...

ஆமாங்க. நான் கூட பஸ்ல பார்த்தேன். அட்டகாசமான படம்..

அபப்டியே உல்லாசங்கா உற்சகாங்கா படத்தையும் பாருங்க..

பாலா said...

இல்ல... இது வேற ஏதாவது ட்ரிக்கா? இப்பல்லாம். தலைவரை சீண்டின பிறகு நீங்க எந்த பதிவு போட்டாலும் உள்குத்து ஏதாவது இருக்குமோன்னு கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு.

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...
This comment has been removed by the author.
அருண் said...

சூப்பர் படம். தமிழில் கெடுக்காம எடுக்கணும். நல்ல விமர்சனம்.

அருண் said...

தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவ overtake பண்ணுமோ?

Vidhya Chandrasekaran said...

உங்க விமர்சனம் பார்த்துட்டு டிவிடி வாங்கி பார்த்தேன் பாஸ். Awesome. அதுவும் "அரெரே அரேரே மனசே" பாட்டு சூப்பரா இருக்கும். இந்த மாதிரி feel good movies ரீமேக் பண்ணா நல்லாருக்கும்.

நையாண்டி நைனா said...

நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் தான் அதனாலே தீட்டிய மரத்திலே கூர் பார்க்காமல் என்னோட வசந்த காலத்தை அசை போடுகிறேன்.

ஸ்ரீ.... said...

எனது முதல் பதிவாக எழுதிய படத்தைப் பற்றிய உங்கள் விரிவான விமர்சனம் மிகவும் அருமை. தமிழில் எப்போது வெளிவருகிறது ?

ஸ்ரீ...

Cable சங்கர் said...

//எனது முதல் பதிவாக எழுதிய படத்தைப் பற்றிய உங்கள் விரிவான விமர்சனம் மிகவும் அருமை. தமிழில் எப்போது வெளிவருகிறது ? //

விரைவில் வருவதாய் விக்டனில் போட்டிருக்கிறார்கள்.

Cable சங்கர் said...

//நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் தான் அதனாலே தீட்டிய மரத்திலே கூர் பார்க்காமல் என்னோட வசந்த காலத்தை அசை போடுகிறேன்.//

என்னாது கத்துகிட்ட படமா.. அப்ப நீங்களும் என்ன மாதிரி ரொம்ப யூத்தா..?

Cable சங்கர் said...

//உங்க விமர்சனம் பார்த்துட்டு டிவிடி வாங்கி பார்த்தேன் பாஸ். Awesome. அதுவும் "அரெரே அரேரே மனசே" பாட்டு சூப்பரா இருக்கும். இந்த மாதிரி feel good movies ரீமேக் பண்ணா நல்லாருக்கும்.//

வித்யா.. எனக்கென்ன் பயம்னா.. சொதப்பாம இருக்கனூமேன்னுதான்.

Cable சங்கர் said...

//தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவ overtake பண்ணுமோ?//

சமீப காலமாய் சும்மா பின்னி எடுக்குறாங்க.. அருண்.

Cable சங்கர் said...

//ஆமாங்க. நான் கூட பஸ்ல பார்த்தேன். அட்டகாசமான படம்..

அபப்டியே உல்லாசங்கா உற்சகாங்கா படத்தையும் பாருங்க//
அதை பத்தி கூட எழுதணும்னு நினைச்சி கிட்டு இருக்கேன் கார்கி.

Cable சங்கர் said...

//சங்கர்.. இது ஏற்கனவே எழுதின விமர்சனம்தானே?! ஏன் திரும்பி பப்ளிஷ் பண்ணியிருக்கீங்க.?

தமில்-ல வரப்போறனாலா//

ஆமாம். நிறைய பேர் அப்ப எழுதன்ப்போ படிக்காததினால். மறு பதிவு.. பாலா இதுல் உள் குத்து ஏதும் இல்லை.

முரளிகண்ணன் said...

தமிழ்ல எப்படி எடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்.

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
//நான் நையாண்டியை கற்று கொண்டதே அந்த ஹாப்பி டேசில் தான் அதனாலே தீட்டிய மரத்திலே கூர் பார்க்காமல் என்னோட வசந்த காலத்தை அசை போடுகிறேன்.//

என்னாது கத்துகிட்ட படமா.. அப்ப நீங்களும் என்ன மாதிரி ரொம்ப யூத்தா..?*/

அண்ணா .... படுத்துறேலே.....
நையாண்டியை கற்று கொண்டதே
இந்த படம் பார்த்து இல்லைண்ணா...

என்னோட ஹாப்பி டேயிஸ் ஆனா என்னோட மாணவ பருவ நாட்களை சொல்கிறேன். அதையும் நான் அசைபோடுகிறேன் என்று வேற சொல்லி விட்டேன்.

அப்புறம் நான் யூத் கிடையாது, நான் சிறுவன். பால் மனம் மாறா பாலகன்.

தப்ப புரிஞ்சிகிறத பார்த்தா நீங்க யூத் மாதிரி தெரியலையே!!!??? ;)

Anonymous said...

Cable Shankar: your reviews are very good.
Can you start posting reviews of Kannada movies of last 3-4 years also. Possibly you can view it in DVD. there are some good Kannada movies also these days (like the refreshing ones in Telegu). You can easily understand Kannada even if you do not know till now.

For starters - look for box office hit movies in last 3 years.

thanks
Sukumar

ஊர்சுற்றி said...

நானும் இந்த படத்தை பார்க்கணும்னு என்னோட லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன்.

Cable சங்கர் said...

//Cable Shankar: your reviews are very good.
Can you start posting reviews of Kannada movies of last 3-4 years also. Possibly you can view it in DVD. there are some good Kannada movies also these days (like the refreshing ones in Telegu). You can easily understand Kannada even if you do not know till now.

For starters - look for box office hit movies in last 3 years.//

சுகுமார்.. நான் சமீபத்தில் பார்த்த ஒரே கன்னட படம் “முங்காரு மலே”தான். அதை தவிர வேறு படங்களை பார்க்க வாய்பில்லை. முடிந்தவரை முயற்சி செய்கிறேன். சினிமாவுக்கு மொழி ஒரு பிரச்சனையில்லை எனக்கு.. கண்டிப்பாய் செய்கிறேன். நன்றி..

Cable சங்கர் said...

//நானும் இந்த படத்தை பார்க்கணும்னு என்னோட லிஸ்ட்டில் வைத்திருக்கிறேன்.//

கண்டிப்பாய் பாருங்கள் ஊர்சுற்றி.. தமிழில் வருவதற்கு முன்னால் பார்க்க வேண்டியபடம். நன்றி.. உங்கள வருகைக்கும், கருத்துக்கும்.

நையாண்டி நைனா said...

/*தப்ப புரிஞ்சிகிறத பார்த்தா நீங்க யூத் மாதிரி தெரியலையே!!!??? ;)*/

இதுக்காகவே என் மேல காண்டாகிருப்பீங்க.... சரிதானே..

Anonymous said...

//சூப்பர் படம். தமிழில் கெடுக்காம எடுக்கணும். நல்ல விமர்சனம்//

U think so after watching Tamil Pokkiri?

Telugu Pokkiri rocks!

Anonymous said...

ஆமாங்க, அப்புவாக நடிச்ச அந்த பொண்ணின் இயல்பான நடிப்பை மறக்க முடியாது, டைசன் மற்றும் எல்லோரும் அசத்தி இருப்பார்கள்.. இது நிச்சயம் டூயட் மூவிசின் வெற்றிப் படைப்பாய் இருக்கும்..

Cable சங்கர் said...

நிச்சயமாய் அப்படியே ஆகவேண்டும் என்று நானும் ஆசை படுகிறேன். பழூர் கார்த்தி.. ந்னறி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்,

Cable சங்கர் said...

//U think so after watching Tamil Pokkiri?

Telugu Pokkiri rocks!//

நிச்சயமாய் தெலுகு போக்கிரி சூப்பர். தமிழைவிட.. நன்றி பெத்தராயுடு..உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்

☀நான் ஆதவன்☀ said...

ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பார்த்த தெலுங்கு படம் இது...பார்த்துவிட்டு கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. தெலுங்கு படம் முற்றிலும் மாறிவருகிறது....ஆனால் தமிழ்படங்கள்????