Thottal Thodarum

Feb 25, 2009

வானமெனும் வீதியிலே..

அஸ்கர் விருதை வாங்கி இந்தியாவுக்கே பெருமை சேர்த்த, ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் நன்றி..நன்றி.. நன்றி

எப்படியாவது பறந்து போகணும்னு எனக்கு ஆசை வந்திருச்சு. அதுவும் என் பையன் ரெண்டு வாட்டி பெங்களூருக்கும், பாம்பேக்கும் என்னோட உறவுக்காரங்களோட போய்ட்டு வந்ததுக்கப்புறம், எனக்கு அந்த ஆசை ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு. எனக்கென்னவோ ப்ளைட்டுல போறதுக்கு பிடிக்கல, ஏன்னு யோசிச்சா..ரொம்ப சீக்கிரமே போகணும்கிறது ஓரு முக்கியமான விஷயம்.

நானெல்லாம் வழக்கமா 9 மணி டிரெயினுக்கு, 8மணிக்கு வீட்டிலேர்ந்து கிளம்பி, சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு, சாவகாசமா கிளம்பி போனோம்னா நம்ம ரயில் தன் பின்பக்கத்து 'X' மார்கை காட்டிகிட்டு போய்ட்டுருக்கும். அதை நம்ம தமிழ்பட ஹீரோ கணக்கா..ஹைஸ்பீடுல ஓடி ஏறியே பழக்கப்பட்ட நமக்கு இப்படி இரண்டு மணி நேரம் முன்னாடி போவது கஷ்டம்தான்.

அவசரமாய் ஹைதைக்கு போக வேண்டியிருந்ததாலும், ரயிலில் டிக்கெட் இல்லாததாலும், இதை சாக்கா வச்சி எப்படியாவது ப்ளைட்டுல போயிறணூங்கற முடிவ எடுத்து, ஹைதராபாதுக்கு போக டிக்கெட் புக் பண்ணலாம்னு நெட்டுல போய் தேடினேன். 6000 ரூபாயிலேர்ந்து டிக்கெட் இருந்துச்சு..கடைசியா ஓரு வழியா “கோ ஏர்” ன்னு ஓரு ஏர்வேஸுல 500 ரூபாய்க்கு டிக்கெட்ன்னு சொன்னதும், அடிச்சு பிடிச்சு புக் பண்ணா..மொத்தமா 2500 ரூபாய் கிட்ட ஆயிடுச்சு.. டிக்கெட் சார்ஜ் 500 ரூபாயாம்.. ஆனா ஏர்போர்ட் டாக்ஸ்,அந்த டாக்ஸ்ன்னு 2000ரூபாயை அமுத்திட்டான். ராத்திரி 10.30 மணி ப்ளைட்டு. ஒண்ணரை மணி நேரம் முன்னாடியே வரணும்னு சொல்லிட்டான். வேற வழி..

ஓரு வழியா கையில லேப்டாப், ஓரு பேக் சகிதமா கிளம்பி, சைதாப்பேட்டையிலேர்ந்து, திருசூலத்துக்கு எலக்டிரிக் ரயில் பிடிச்சி போய் வேர்த்து விறுவிறுத்து போய் சேர்ந்தேன். (செலவ மிச்சம் பிடிக்கிறேனாம்). உள்ளே போனதும் எனக்கு எந்த வித உணர்வும் இல்லை. ஏன்னா எவ்வளவோ தடவ பல பேரை அனுப்பி வைக்கிறதுக்காக, போயிருக்கேன். அதனால எனக்கு எந்த விதமான ஓரு நர்வஸூம் இல்லை. எனக்கென்னவோ உள்ளே நுழைந்ததிலிருந்து ரொம்ப பழக்கப்பட்ட விஷயமாகதான் தெரிந்தது.

ஓரு வழியா செக்-இன் பண்ணதுக்கு அப்புறம் வேற என்ன செய்யறதுன்னே தெரியல.. சும்மாவே உக்காந்திருக்க பிடிக்கல.. மெல்லமா ஓரு ரவுண்ட் அடிக்க ஆரம்பிச்சேன்... டெல்லி ப்ளைட்டுக்காக காத்திருந்த நமது மேயர் தனது சகாக்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் ஓரு சேட்டு பையன் ஓருவன் அங்கே இருந்த பேக்கரியில் ஏதோ வேண்டுமென கேட்டு அழ, அவனின் “மா” “நை.. பேட்டா..நை..” என்று அவனை அந்த பக்கதிலிருந்து இழுத்துபோக முயற்சிக்க, அவன் அவளைவிட பலமாய்.. பிடிங்கிக் கொண்டு ஓடினான். ஓரு முஸ்லிம் குடும்பம் கிட்டத்தட்ட ஓரு 15 பேர் இருப்பார்கள் அந்த கேண்டின் அருகிலேயே இருந்து கொண்டு ஆளுக்கு ஆள் மாற்றி,மாற்றி எதையாவது தின்று கொண்டே இருந்தார்கள்.. அதில் ஓரு புர்கா அணியாத ஓரு அமலா..( ம்ஹூம்.. நமக்கில்ல..), அவசர லேப்டாப் யுவதிகளும்,யுவன்களும், ஓவ்வொரு விமான கிளம்பலுக்கும் முன்னால் ஓரு சிறிய பரபரப்பு அங்கே இருக்க, லேப்டாப் யு.யுக்க்ள் கிளம்புகையில் இறுக அணைத்து முத்தமிட்டு கிளம்பினார்கள்.. அவள் வேறு யாருடனோ.. அவன் வேறு யாருடனோ,, வேறு வேறு விமானங்களில்.

கிட்டதட்ட பத்து மணியாயிருச்சு.. ஏர்போர்ட்டுல கூட்டம் கம்மியாயிடுச்சு.. அப்போ என் பக்கதுல ஓருத்தர் வந்து “சார்.. ஹைதரபாத் ப்ளைட் எங்க வரும்னு?”ன்னு என்னை பார்த்து கேட்க, நானும் மனசுக்குள்ள நாலாம் நம்பர் ப்ளாட்பார்மல் தான்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு.. என்ன பார்த்தா புதுசு மாதிரி தெரியல போலருக்கே..னு மனசுக்குள்ளே ஒரு சந்தோஷம்

“இருங்க.. அவங்க அனொன்ஸ் பண்ணுவாங்க.” ன்னு சொல்லிட்டு போர்டிங் போர்டை காட்டினேன். 10.45க்கு மாடியில இருக்கிற ஓருகேட்டுக்கு வர சொல்லியது போர்ட். பளைட்டுக்குள் முத முதலா காலடியெடுத்து வைச்சேன்.. சும்மா சிலு, சிலுன்னு தான் இருந்துச்சு.. நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது. என் டிக்கெட்டை பார்த்த அவ எகானமி டிக்கட்டுன்னு சொல்லியதில் ஓரு சின்ன எள்ளல் இருந்தது போல் இருந்தது. சே அடுத்த வாட்டி பிஸினெஸ் கிளாஸ் எடுக்கணும்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டு உள்ளே போனா ஆம்னி பஸ் கூட கொஞ்சம் நல்லா இருக்கும் போலருக்கு,, அதவிட் கீக்கிடமா ஓரு சீட்டிங் அரெஞ்மெண்ட்.. இடுக்கிட்டுதான் போகணும்.. எனக்கு நல்ல வேல விண்டோ சீட் கரெக்டா ரெக்கை பக்கத்தில.. எனக்கு பக்கதில என்கிட்ட ப்ளைட் டைம் கேட்ட ஆசாமி, அவருகூட அவருடய மனைவி, ஓரு கைக்குழந்தை பெண், ஓரு பத்து வயது பையன். அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்.

ஓரு வழியாய் ப்ளைட் கிளம்ப ஆயத்தமாக, சற்றே பெறிய சத்தமாய் ” டகா டக்” என்றது. பக்கதிலிருந்த பெரியவர்..கண்ணை மூடி “பெருமாளே” என்று முணுமுணுத்தார். பக்கதிலிருந்த தன் மனைவியிடம் “நன்னா சேவிச்சிக்கோடி”ன்னு சொல்ல அவங்களூம் “பெருமாளே”ன்னாங்க.. இதற்குள் அவரின் பையன் எழுந்து சார் எனக்கு விண்டோ சீட் தரீங்களா சார்..ன்னு கேட்டு அரிக்க ஆரம்பிக்க, பெரியவர்.. “சார் கொடுப்பார்டா.. அவர் என்ன இப்பதான் ப்ளைட்டுல போறாறா என்ன.. கொடுப்பார்.” என்றார். இப்படி ஏத்தி விட்டே ரணகளமாக்கிறாங்களேன்னு மனசுக்குள்ள ஓட, நான் அவரை பார்த்து மையமாய் தலையாட்டிவிட்டு..

“இப்ப மாறகூடாது சார்.. சீட் பெல்ட் போட்டுக்கோங்க..” அட்லீஸ்ட் டேக் ஆப் பாக்கிற வரைக்குமாவது சீட்டை விடக்கூடாதுன்னு முடிவோட சொன்னேன். ப்ளைட் டேக் ஆப் ஆகும் போது அடி வயிற்றில் ஓரு சின்ன அழுத்தம், ஏற்பட்டு காதை அடைத்தது.. என்ன அழகு மேலிருந்து நம் செனனையை பார்பது அதிலும் கீழேயிருந்து தெரியும் மின்விளக்குளுடன் பார்க்கும் போது சிம்பிளி சூப்பர்ப்..

இப்போது ஹோஸ்டஸ் குட்டிகள் விமானம் ஏதாவது ப்ரச்சனைக்குட்பட்டால் எவ்வாறு முதல் உதவி கருவிகளை உபயோக படுத்துவது என்று செய்முறை விளக்கம் சொல்ல.. பக்கத்து பெரிசு.

”சனியன்கள் கிள்ம்பும் போதே அபசகுனமா ஆக்ஸிடெண்ட் ஆறத பத்தி பேசறதுகள் பார்.என்று திட்டிக்கொண்டு இருந்தார். எனக்கு அவர் சொன்னது அவ்வளவாக காதில் ஏற்வில்லை ப்ரியாமணி செய்யும் ஆக்‌ஷனெல்லாம் ஹைஸ்பீடில் என்னை பார்த்தபடி செய்ததாக தெரிந்தது. அப்போது திடீரென ஓரு அழுகுரல் பக்கத்து சீட் ஆளின் பெண்ணின் கைக்குழந்தை.. அப்போது அழ ஆரம்பித்ததுதான் அடுத்த ஹைதராபாத்தில் இறங்கும் வரை அழுது கொண்டே இருந்த்து..அந்த குழந்தையை அந்த பெண் “ஓணாம்மா..ஓணாம்மா.. என்று கொஞ்சி சமாதான படுத்த மொத்த ப்ளைட்டிலும் நடந்த படியே இருந்தாள்.

நடுராத்திரி 12.30 மணிக்கு மேல் புது ஏர்போர்டில் வந்திறங்கியதும், தேவலோகம் போல் இருந்தது.. வெளியே வந்து டாக்ஸி கேட்டால் ப்ளைட் விலை கேட்டான்.. அதனால் ஏர்போர்ட் வோல்வோவில் 90 கொடுத்து ஹைதராபாத் சேரும்போது மணி 2. வோல்வோவில் ஏறுகையில் ப்ளைட்டில் கூட வந்த பெரியவர் என்னை பார்த்து “சாருக்கும் முதவாட்டியா? என்றார். எப்படி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

எனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு ரயிலோ, கேசினேனில ஸ்லீப்பரோ தான் பெஸ்ட்.


Blogger Tips -தந.07.அல.4777- திரைவிமர்சனம்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

47 comments:

பரிசல்காரன் said...

ஓஹோ!

கிளம்புமுன் எழுதிய சில வர்ணனைகளை ரசித்தேன் சங்கர்!

படம் புக் ஆச்சுன்னா, டூயட் சாங் கண்டிப்பா சுவிஸ்லன்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லீடுங்க!

Cable சங்கர் said...

//ஓஹோ!

கிளம்புமுன் எழுதிய சில வர்ணனைகளை ரசித்தேன் சங்கர்!//

அதுவரைக்கும் தான் நல்லாருந்துச்சு பரிசல்.

Cable சங்கர் said...

//படம் புக் ஆச்சுன்னா, டூயட் சாங் கண்டிப்பா சுவிஸ்லன்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லீடுங்க!//

பின்ன கிடைச்சா விடமாட்டோம்ல.

முரளிகண்ணன் said...

கடைசி வரி நச்

Cable சங்கர் said...

நன்றி முரளி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

அத்திரி said...

//எனக்கென்னவோ.. சென்ட்ரல் ஸ்டேசன், கட்டிங், கோலா பாட்டில், ஏறி குடிச்சி முடிச்சதும், ஆடிக்கிட்டே ஓரு அருமையான தூக்கம், நமக்கு ரயிலோ//

உங்களுக்கு எப்படியோ.எனக்கு இதுதான் பெஸ்ட்.............. ஆங்

கார்க்கிபவா said...

/கேசினேனில ஸ்லீப்பரோ தான் பெஸ்//

அபப்டியே புல்லரிச்சுடுச்சு தல.. :)))

அத்திரி said...

//நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது.//

நல்லாவே சைட் அடிச்சிருக்கீங்க.............

அத்திரி said...

//நுழைஞ்சதும் ரெண்டு குட்டிங்க அதில ஓருத்தி பருத்திவீரன் ப்ரியாமணி போல இருந்தா..கலரா.. அவ என்னை மட்டுமே பார்த்து சிரிச்ச மாதிரி இருந்தது
//
நல்லாவே சைட் அடிச்சிருக்கீங்க.............

Cable சங்கர் said...

அன்னைக்கு முழுசும் சைட் அடிச்சே க்ண்ணூ வீங்கிருச்சு அத்திரி

Cable சங்கர் said...

//அபப்டியே புல்லரிச்சுடுச்சு தல.. :)))/

பின்ன அரிக்காம எப்படி.. அனுபவம் பேசுமில்ல.

நையாண்டி நைனா said...

மும்பைக்கும் சென்னைக்கும் நான் இப்படிதான் பறந்துகிட்டு இருக்கேன்.

நையாண்டி நைனா said...

இன்னும் நீங்க சென்னைலே லேன்ட் ஆகிற மாதிரி போநீங்கன்ன, இன்னும் சூப்பரா இருக்கும்.... அப்படியே கடல் மேல ரவுண்டு அடிச்சி இறக்குவாங்க

அத்திரி said...

//Cable Sankar said...
10:25 AM
அன்னைக்கு முழுசும் சைட் அடிச்சே க்ண்ணூ வீங்கிருச்சு அத்திரி//


கண்ணே வீங்கிடுச்சா.......................

நையாண்டி நைனா said...

இன்னிக்கும் கும்மியா?

Cable சங்கர் said...

ரெண்டு கண்ணு பத்தலை..

நையாண்டி நைனா said...

என்னாது.... ரெண்டு கண்ணு பத்தலியா? மேற்படி விஷயத்துக்கு ஆண்டவன் ஒன்னே ஒன்னு தானே கொடுத்திருக்கான்? அப்போ என்ன செய்வீங்க?

ஹக்காங்.... நான் இதயத்தை சொன்னேன் பாசு

Vidhya Chandrasekaran said...

நன்றாக இருந்தது உங்கள் அனுபவம்:)

Anonymous said...

meel pathivaa?

Cable சங்கர் said...

நன்றி வித்யா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Cable சங்கர் said...

ஹ.ஹாங். கொஞ்சம் எடிட்டட். அனானி

நையாண்டி நைனா said...

போய் ஒரு 'தம்' போட்டுட்டு வாறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

//சென்ட்ரல் ஸ்டேஷனில் வாசல்ல ஓரு கட்டிங் அடிச்சிட்டு, மிச்சத்தை கோக் பாட்டில்ல ஊத்திகிட்டு//

அதச் சொல்லுங்க தல :)

எம்.எம்.அப்துல்லா said...

////படம் புக் ஆச்சுன்னா, டூயட் சாங் கண்டிப்பா சுவிஸ்லன்னு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லீடுங்க!//

பின்ன கிடைச்சா விடமாட்டோம்ல.

//

நல்லவேளை நான் ஒரு படம் குடுக்கலாம்னு இருந்தேன்.

நையாண்டி நைனா said...

ஆகா........ இன்னிக்கு கும்மி களைகட்டுதே...!

Cable சங்கர் said...

/./நல்லவேளை நான் ஒரு படம் குடுக்கலாம்னு இருந்தேன்.//

அண்ணே.. சும்மா தமாஷூக்கு சொன்னேண்ணே... லூலூலாகட்டிக்கு. நாம தனியா பேசுவோம்ணணே..

நையாண்டி நைனா said...

/*/./நல்லவேளை நான் ஒரு படம் குடுக்கலாம்னு இருந்தேன்.//

அண்ணே.. சும்மா தமாஷூக்கு சொன்னேண்ணே... லூலூலாகட்டிக்கு. நாம தனியா பேசுவோம்ணணே..*/

பயப்படாதீங்கன்னே, நான் நல்லா விசாரிச்சேன், அவரு அவரோட பாஸ்போர்ட் சைஸ் படத்தை கொடுத்து, உங்க கிட்டே சான்சு கேக்கலாம்னு இருந்தாராம். அவருகிட்டே பாஸ்போர்ட் இல்லாததாலே சுவிசுகேல்லாம் வரமுடியாதா...? அதனாலே ரிவர்சு கியர் போட்டு பின் வாங்கிட்டார்.

நையாண்டி நைனா said...

அண்ணே .... கேபிள் அண்ணே ....
என் மேல காண்டா இருக்கியலோ?
மன்னிச்சுக்கோங்கண்ணே....
இனி இப்படி கும்மி அடிக்க மாட்டேன்.

SK said...

கேபிள் சூப்பர் .................
என்னகென்னவோ நீங்க எழுதுறது ரொம்ப புடிச்சிருக்கு
ஏன்னா அடுத்தவங்க நினைக்கிரத அப்படியே எழுதரதாலோ என்னமோ

shortfilmindia.com said...

//அண்ணே .... கேபிள் அண்ணே ....
என் மேல காண்டா இருக்கியலோ?
மன்னிச்சுக்கோங்கண்ணே....
இனி இப்படி கும்மி அடிக்க மாட்டேன்.//
சே..சே.. உங்களை யார் கும்மியடிக்க வேணாம்னு சொன்னது.. நீங்க அடிங்க..

பாலா said...

31 பின்னூட்டம்.. ஆனா ரெண்டே ஓட்டு..!! இப்பல்லாம் வாசகர்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம் வந்துடுச்சி. இதை.. கடுமையாக கண்டிக்கிறேன்.

சில வர்ணனைகள்... சூப்ப்ப்ப்பர் சங்கர்..!!

Prabhu said...

சங்கர்... நீங்க எழுதுறது பக்கத்துல உட்கார்ந்திருக்கும் ஒரு நண்பன் பேசுறது போல இருக்கு... உங்க பதிவை படிக்கும் போது எனக்கும் எழுதனும் என்ற ஆசை தலை தூக்குது..... கொஞ்சம் கேஷுவலா கொஞ்சம் நக்கலா படிக்கவே நல்லாருக்கு....
மாத்தி மாத்தி sight அடிச்சிருகிங்க....
உங்க ஆளு இதெல்லாம் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா!

Cable சங்கர் said...

//31 பின்னூட்டம்.. ஆனா ரெண்டே ஓட்டு..!! இப்பல்லாம் வாசகர்களுக்கு ரொம்ப சோம்பேறித்தனம் வந்துடுச்சி. இதை.. கடுமையாக கண்டிக்கிறேன்.//

ஆமாம் பாலா.. நானும் வன்மையாய் கண்டிக்கிறேன்.

Cable சங்கர் said...

//சங்கர்... நீங்க எழுதுறது பக்கத்துல உட்கார்ந்திருக்கும் ஒரு நண்பன் பேசுறது போல இருக்கு... உங்க பதிவை படிக்கும் போது எனக்கும் எழுதனும் என்ற ஆசை தலை தூக்குது..... கொஞ்சம் கேஷுவலா கொஞ்சம் நக்கலா படிக்கவே நல்லாருக்கு....
மாத்தி மாத்தி sight அடிச்சிருகிங்க....
உங்க ஆளு இதெல்லாம் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா!//

மிக்க நன்றி பிரபு.. கண்டிப்பாக நீங்களும் எழுதுங்கள். நன்றாக வரும்

Cable சங்கர் said...

//சில வர்ணனைகள்... சூப்ப்ப்ப்பர் சங்கர்..!!//

எந்த எந்த இடங்கள் பாலா.. முடிந்தால் சொல்லுங்கள்.. பாராட்டுக்கு நன்றி..

Cable சங்கர் said...

//இன்னும் நீங்க சென்னைலே லேன்ட் ஆகிற மாதிரி போநீங்கன்ன, இன்னும் சூப்பரா இருக்கும்.... அப்படியே கடல் மேல ரவுண்டு அடிச்சி இறக்குவாங்க//

ஒரு வாட்டி போய் பார்கக்ணும் நைனா..

நவநீதன் said...

உங்க கூட பயணம் செய்தது போலவே இருக்கு...!

Cable சங்கர் said...

//உங்க கூட பயணம் செய்தது போலவே இருக்கு...!//

நன்றி நவநீதன். உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

புருனோ Bruno said...

அருமையான நடை

நல்ல கட்டுரை

Cable சங்கர் said...

//அருமையான நடை

நல்ல கட்டுரை//

நன்றி புருனோ.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Test said...

சென்ற வேலை வெற்றி அடைய வாழ்த்துக்கள் .....

நான் முதல் முறை ப்ளைட் ஏறுவதற்கு முன்னால் இரவு தூக்கமே வரவில்லை :)

//அந்த பெண்ணுக்கும், பையனுகும் நிறைய வயது வித்யாச்மிருக்கும் போலருக்கிறது. ரொமான்சின் மிச்சம்//

நல்ல வார்த்தை சேர்கை, அத எப்படி மிச்சம்'னு நீங்க சொல்ல முடியும்?

டெக்கான் ஏர்லைன்ஸ் சென்றால் ஒரு ஷேர் ஆட்டோவில் சென்ற அனுபவம் கிடைக்கும் :)

Cable சங்கர் said...

//நல்ல வார்த்தை சேர்கை, அத எப்படி மிச்சம்'னு நீங்க சொல்ல முடியும்? //

அந்த பையனின் பெற்றோர்களின் வயதை வைத்து ஒரு அனுமானம் தான்.

பட்டாம்பூச்சி said...

ஹாஹாஹா....இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும்தான் என்றா நினைகிறீர்கள்??!!??சேம் பிளட்.இருப்பினும் உங்கள் விவரிப்பு அருமை.

பரிசலாரின் பதிவில் உங்கள் கமெண்ட்டு பார்த்தேன்..வாழ்த்துக்கள் நண்பரே !!! :-))
சீக்கிரமா சந்தோசமான விஷயம் சொல்லுங்க.

Cable சங்கர் said...

//ஹாஹாஹா....இந்த அனுபவம் உங்களுக்கு மட்டும்தான் என்றா நினைகிறீர்கள்??!!??சேம் பிளட்.இருப்பினும் உங்கள் விவரிப்பு அருமை.
//

நன்றி வண்ணத்துபூச்சியாரே. அத்தோடு உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

ஷண்முகப்ரியன் said...

வானம் இன்னும் உங்களுக்கு வசப் படவில்லை போலிருக்கிறது,ஷங்கர். சீக்கிரமே வசப் பட எனது வாழ்த்துகள்!

Cable சங்கர் said...

//வானம் இன்னும் உங்களுக்கு வசப் படவில்லை போலிருக்கிறது,ஷங்கர். சீக்கிரமே வசப் பட எனது வாழ்த்துகள்!//

மிக்க நன்றிசார்..