அலிபாபா - விமர்சனம்
தமிழ் சினிமாவில் இந்த மாதம் திரில்லர் மாதம் போலிருக்கிறது. மற்றுமொரு திரில்லர் அலிபாபா. திருட்டையே வாழ்க்கையாய் வைத்திருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா, திருடுவதை நியாயப்படுத்தும் அவரது அப்பா பிரகாஷ்ராஜ். ஓரு பெண்ணின் மேல் விருப்பபட்டு தன் திருட்டு தொழிலை விட நினைக்கும் போது, கிருஷ்ணாவின் அக்கவுண்ட்டில் லட்ச கணக்கில் பணம் விழ, அவர் அதை எடுத்து செலவு செய்ய ஆரம்பிக்கிறார். ஓரு கட்டத்தில் அவர் மீது கமிஷனர் கொலை பழி விழுகிறது. அந்த பிரச்சனையில் அவரது அப்பா இறந்து போகிறார். இதையெல்லாம் எப்படி வீழ்த்தி வெளிவருகிறார் என்பது தான் மீது கதை. ஆரம்பம் முதலே கிருஷ்ணாவை ஆக்ஷ்ன் ஹீரோவாக காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினிலால் அவரை திருடனாகவும், புத்திசாலியாகவும் காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் இருப்பதால் அந்த கேரக்ட்ர் பிரச்சனையில் மாட்டும் போது அவர் மீது பரிதாபத்துக்கு பதிலாக ஓரு வெற்று உணர்வே தோண்றுகிறது. கிருஷ்ணா ,ஹீரோயின் ஜனனியின் பைக்கை திருட, அதே பைக்கை தண்ணியடிப்பதற்காக, ஓரு வீட்டின் வாசலில் வைத்துவிட்டு போவதும், அந்த வீடு ஜனனியின் வீடாய் இருப்பது, அவரது வீட்டிலேயே திருடப்ப் போய் மாட்டிக்...