கொத்து பரோட்டா- 27/04/15
என்ன தவம் செய்தேன் பாப்தாவின் ஆரம்ப விழாவில் முதல் முறையாய் இயக்குனர் மகேந்திரனை சந்திக்கும் பாக்யத்தை பெற்றேன். நிறைய இயக்குனர்கள், நடிகர்களுடனேயான சந்திப்புகளுடனேயே இயங்குவதால் என்னால் நிறைய பேரைப் பார்த்து பிரம்மிக்க முடிவதோ, முயல்வதோ இல்லை. அவர்கள் மேலிருக்கும் மரியாதை என்பது தனி. ஆனால் இவர் மீது எனக்கு பிரம்மிப்பும், மரியாதையும் அதிகம். விழாவின் முடிவில் என்னை நான் அறிமுகப்படுத்திக் கொண்ட போது, “அஹா.. மிஸ்டர்.சங்கர். உங்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். உங்க புத்தகம் ஒன்று என்னிடம் இருக்கு. சாப்பாட்டுக்கடை இனி நாம அடிக்கடி சந்திப்போம்” என்று தன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். எனக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை என்பதுதான் உண்மை நிலை.