Posts

Showing posts with the label ஈசன்

ஈசன்

Image
தமிழ் சினிமா ரசிகர்களின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம் சசிகுமாரை. தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட படங்களின் வெற்றி அவருக்கு தந்த மகுடம் அது. அவர் இயக்கும்  இரண்டாவது படம் என்கிற போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது  ஒன்றும் ஆச்சர்யமில்லை.. அது தியேட்டர்களில் கூடியிருந்த கூட்டத்தை வைத்தே சொல்லிவிடலாம். இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, சசிகுமாரோ நடிக்காத படம். கிராமம் சார்ந்த படங்களிலிருந்து  விலகி நகரம் சார்ந்த கதைக்களனை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியே சென்னையின்  டிஸ்கோ பப்பிலிருந்து கிளம்பும் ஒரு பெண்ணை துரத்தி அவள் இறந்து போவதில் ஆரம்பிக்கிறது. முழுக்க, முழுக்க, ஹைஃபை பப் கலாச்சாரம் பழகும் இளைஞர்களை  சுற்றி நடக்கும் கதையாய் ஆரம்பித்து, அரசியல்வாதி, நேர்மையான ஆனால் எதுவும் செய்ய முடியாமல் கையாலாகமல் இருக்கும் போலீஸ், அரசியல்வாதியின் மகன், அரசியல் வாதியின் ஆதிக்க ஆக்ரமிப்புகள், அதற்கான கொலைகள், அரசு அதிகாரியின் அதிகாரம். அரசியல் வாதிகளை உருவாக்கும் பணம் கொழுத்த தொழிலதிபர். அவரின் மகள். அவளுக்கும் அரசியல் வாதி மகனுக்குமான காதல். காதலை அறுக்க த...