Thottal Thodarum

Oct 31, 2014

கோணங்கள்-4

கண்ணீர் கலந்த பிளாக் காமெடி!

“இயக்குநரை விடுங்க… கேமராமேன், எடிட்டர், எல்லாரும் புதுசு. ஸ்டில் கேமராவுல போட்டோ எடுத்துட்டு இருந்தவரெல்லாம் ஒளிப்பதிவாளர். சொந்தமா செலவு பண்ணி ரெக்கார்டிங் ஸ்டூடியோ வச்சிருக்கிறவர் எல்லாம் இசையமைப்பாளர். இவங்களால எவ்வளவு பிரச்சினை தெரியுமா? ஒரு கோடிக்குள்ள நச்சுன்னு படமெடுத்துக் கொடுக்கிறேன்னு ஷார்ட் பிலிம் எடுக்கிற நினைப்பிலேயே தயாரிப்பாளர்கிட்ட சொல்றாங்க. அது எப்படிங்க எடுக்க முடியும்?. யார் கிட்டேயும் பர்மிஷன் வாங்காம, ஒரு 5டி கேமராவை வச்சிட்டு கூட இருக்கிறவங்கள வச்சி ஷார்ட் பிலிம் எடுக்குறது, முழுநீளப் படம் எடுக்குறது மாதிரி சாதாரண விஷயமா? லெஃப்ட் ரைட் பார்க்கத் தெரியுமா? ஷாட் வைக்கத் தெரியுமா..? (மூச்சு விட்டுக்கொள்கிறார்)

Oct 27, 2014

கொத்து பரோட்டா - 27/10/14

பற்பசை விளம்பரம் ஒன்றில் சாம்பல் கலந்திருப்பதாகவும், இன்னொரு பற்பசை விளம்பரத்தில் கிராம்பு இருப்பதாகவும், அது பற்களுக்கு நல்லது என்று கூறினார்கள். காலா காலமா சாம்பலை வச்சி தேச்சிட்டு இருந்தவனை அது தப்பு, அசிங்கம், ஆரோக்கியமில்லைன்னு சொல்லி மூளைய மழுங்கடிச்சிட்டு, இப்போ என்னடான்னா பேஸ்டுல உப்பு இருக்கா? சாம்பல் இருக்கான்னு புதுசா ஏதோ கண்டுபிடிச்சாப் போல விளம்பரப்படுத்துறாங்க.. ம்.. அன்னைக்கே என் தாத்தா சொன்னாரு.. பெல்பாட்டம் போடுறவனெல்லாம் பின்னாடி ஒரு நாள் ஜெய்சங்கர் டைட்ஸ் போட்டுத்தான் ஆகணும்னு.
@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 20, 2014

கொத்து பரோட்டா - 20/10/14

HALF GIRLFRIEND
ஆயிரம் விமர்சனங்கள் சேத்தனின் எழுத்தின் மேல் இருந்தாலும், சுவாரஸ்ய,டெம்ப்ளேட் எழுத்துகள் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், புதிய புத்தகம் வெளியான உடனேயே பிலிப் கார்ட்டில் டிஸ்கவுண்ட் விலையில் வாங்கி படித்துவிட்டேன். நம்மூர் விண்ணைத்தாண்டி வருவாயா, 7ஜி ரெயின்போ, வாரணம் ஆயிரம், என்பதுகளின் இந்தியப்படங்களின் தாங்கத்தோடு, செம்ம சினிமாட்டிங் டிவிஸ்டுகளை வைத்து எழுதியிருக்கிறார் இந்நாவலை. முன்பெல்லாம் அவரது நாவல்கள் எல்லாம் எழுதிய பின் சினிமாவாக்கப்பட்டது. இது எழுதும் போதே சினிமாவாக்க எழுதப்பட்டதாய் தெரிகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Oct 16, 2014

சாப்பாட்டுக்கடை - சார்மினார்- தாம்பரம்

ஏற்கனவே சார்மினாரின் ஹைதராபாத் பிரியாணியைப் பற்றி நம் சாப்பாட்டுக்கடையில் எழுதியிருக்கிறேன். அவர்களது புதிய கிளை தாம்பரம் சானிட்டோரியத்தில் மெப்ஸுக்கு எதிரே ஆரம்பித்திருப்பதாகவும், புதியதாய் டிபிக்கல் ஆந்திர சாப்பாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறோம், சாப்ட்டு பார்த்து உங்கள் கருத்த சொல்லுங்க என்றார் லஷ்மண்.  

Oct 15, 2014

கோணங்கள்-3- குறும்படம் எடுப்பவர்கள் குரங்குகளா?

“நேத்து வந்தவன் படமெடுக்குறான். ஆனா ஊரை விட்டு, உறவை விட்டு வந்து, சினிமால கால் ஊன்றதுக்குள்ள எத்தனை போராட்டம்? எவ்வளவு அவமானம்? கூடவே பசி, பட்டினி, குடும்பம், குழந்தை குட்டினு எவ்வளவு அவஸ்தை? இதையெல்லாம் தாண்டி சினிமாவுக்கு நாங்க நேர்மையா இருக்கோம்; அது நமக்குச் சோறு போடுங்கிற நம்பிக்கைய மட்டுமே சுமந்துகிட்டு அலைஞ்சிட்டிருக்கிறப்ப, எங்கயோ அமெரிக்காவுலேயும், சாஃப்ட்வேர்லேயும் வேலை செஞ்சு சம்பாதிச்சு, அந்தக் காசுல நேரா நாலஞ்சு குறும்படம் பண்ணிட்டு, டைரக்டர் ஆகிடுறாங்க. ஆகட்டும் வேணாங்கல.அதுக்காகப் பத்து வருஷ வாழ்க்கையை அடமானம் வச்சி, அதுவழியா கிடைச்ச அனுபவத்தை அவமானப்படுத்துற மாதிரி ‘நீயும் ஒரு குறும்படம் எடுத்துட்டு வா; அப்போதான் கதை கேப்பேன்கிறது என்ன நியாயம்?’ மூச்சுவிடாமல் சிங்கிள் டெலிவரியில் கொதித்துவிட்டார் ஒரு இணை இயக்குநர் நண்பர்.

Oct 13, 2014

கொத்து பரோட்டா - 13/10/14

வெண்ணிலா வீடு, குபீர், யாவும் வசப்படும், ஆலமரம், குறையொன்றுமில்லை, அப்படின்னு கிட்டத்தட்ட பத்து தமிழ் படங்கள் இந்த வாரம் ரிலீசாயிருக்கு. கேட்கவே பயமாயிருக்கு. மிச்ச படத்தோட பேர் கூட ஞாபகத்துக்கு வராத நிலையில் விளம்பரம், தியேட்டர் கிடைத்தல் என பல ப்ரச்சனைகளுக்கு பிறகு ரிலீஸாகிறது. குறைந்த பட்ச விளம்பரத்தோடு இந்த வாரம் வந்த படத்தில் ஓரளவுக்கு அடையாளம் தெரிகிற படமாய் அமைந்தது வெண்ணிலா வீடு மட்டுமே. அதற்கு காரணம் வைப்ரண்டான  ப்ரோமோஷன். ஆனாலும் வசூல் ரீதியாய் எந்த படமும் சரியாக பண்ணவில்லை என்பதுதான் ரிப்போர்ட். தமிழ் படங்களைத் தவிர மேலும் ஹிந்தியில் ரெண்டு, தெலுங்கில் ரெண்டு, மலையாளத்தில் ஒன்று என படங்கள் வெளியாகியிருக்கிறது. ஒரிரு படங்களுக்கு ரிலீசுக்கு முன் விளம்பரம் செய்தவர்கள் படம் வெளியாகி இரண்டாவது நாளிலிருந்து விளம்பரம் செய்யக்கூட இல்லை. படம் தயாரிக்க ஆசைப்படுகிறவர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். படம் தயாரிக்க ஆகும் செலவோடு, அதனை ப்ரோமோட் செய்து வெளியிட ஆகும் செலவையும் சேர்த்து படம் தயாரிக்க வருவது சால சிறந்த செயல். சமயங்களில் சரியாக ப்ரோமோட் செய்யப்படாத நல்ல படங்கள் மக்களின் கவனத்திற்கே வராமல் போய்விடக்கூடிய ஆபாயம் உள்ளது.
@@@@@@@@@@@@@@@@@@

Oct 10, 2014

குபீர்

கதையேயில்லாம படமெடுக்கிறேன் என்று பார்த்திபன் சார் சொன்னாரு. ஆனா அவரை எல்லாம் தூக்கி சாப்புடறாப்புல வந்திருக்கிறப் படம் குபீர். பேரே அல்லு குல்லா இருக்கில்ல. படம் பார்க்கலாமென்று நண்பர் அழைத்த போது இந்த வார பத்து படங்களில் ஒன்றாய்த்தான் நினைத்துப் போயிருந்தேன். முழுக்க முழுக்க புதுமுகங்கள். ரொம்பவும் சாதரணமான விளம்பரங்கள். இதில் ஏ சர்டிபிகேட் படம் வேறு. அசுவாரஸ்யமாய்தான் போய் உட்கார்ந்தேன்.

Oct 7, 2014

கோணங்கள் 2 - ஒளிப்பதிவு சூப்பர்! எடிட்டிங் சுமார்...

முதல் கட்டுரையைப் பாராட்டி வந்த விமர்சனங்களைப் பார்க்கும்போது “நிஜமாத்தான் சொல்றியா?” என்று கற்றது தமிழ் அஞ்சலி போல் கேட்க ஆரம்பித்துவிட்டேன். விமர்சனங்களைப் பற்றி எழுதிவிட்டு, அதற்கு பாராட்டுகள் கிடைப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

Oct 6, 2014

கொத்து பரோட்டா -06/10/14

GOVINDUDU ANDHARIVADE
நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வேன். நடுத்தர வயதை எட்டும் சூப்பர் ஸ்டார்களை சின்னகவுண்டர் கதையில் மீண்டும் வேறு ஒரு கெட்டப்பில் நடிக்க வைத்தால் எப்போது ஓடுமென்று. அக்கதையில் காதல்,பாசம், வீரம், நட்பு, துரோகம், தியாகம் எல்லாமே இருக்கும். அது போல தெலுங்கு பட உலகிற்கு இது குடும்ப சீசன் படம். சீதம்மா வகுட்லோவில் வெங்கடேஷ்,மகேஷ்பாபுவிற்கு அடித்த லக்கி ப்ரைஸ். அப்படியே நாகார்ஜுன் குடும்பத்தின் மனம் படம் மூலமாய் சூறாவளிக் காற்றாய் அடிக்க, இப்போது அதை அறுவடை செய்ய ராம் சரண் களம் இறங்கியிருக்கிறார். நாகேஸ்வரராவ் காலத்திலிருந்து, வெங்கடேஷ், நாகார்ஜுன், மகேஷ்பாபு என சூப்பர் ஸ்டார் முதல் ஸ்டார்டிங் ஸ்டார் வரை அடித்து துவைத்த பார்முலா கதை தான். கிராமத்தில் பெரிய குடும்பம், குடும்பத்தில் ஹெட் ஒரு வயசான தாத்தா. அவருடய பையனோ, அல்லது பெண்ணோ, காதல் திருமணம் செய்து ஊரை விட்டு, போய்விடுவார். அவர் வெளிநாட்டில் பெரிய ஆளாய் இருக்க, அவருக்கு மகளும், மகனும் இருப்பார்கள்.வெளிநாட்டில் ஹீரோ இண்ட்ரோ சாங் முடிந்ததும், ஒர் சுபயோக சுப தினத்தில் அப்பாவுக்கு ஊர் நியாபகம் வந்து உனக்கு ஒரு தாத்தா இருக்காரு, பாட்டி இருக்காங்கன்னு பீல் செய்து தன் ப்ளாஷ்பேக்கை சொல்லுவார். உங்களையும் தாத்தா குடும்பத்தையும் சேர்க்குறதுதான் என் கடமைன்னு இந்தியா வந்து தாத்தா கிட்ட பேரன்னு சொல்லாமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோட ஒட்டிக்கிட்டு, வீட்டுல இருக்கிற பெரிசுங்க, முக்கியமா பெரியவங்க, சின்னப் பசங்க எல்லார்கிட்டேயும் க்ளோச் ஆகி, அதே வீட்டுல முறை பொண்ணை லவ் பண்ணி மாட்டிப்பாங்க.. அப்போ, அந்த குடும்பத்துக்கு ஒர் எதிரி குடும்பம் அதே ஊர்ல இருக்கும். அவங்களை எதிர்த்துத்தான் ஹீரோவே தாத்தாவுடய குடும்பத்தில் ஒட்டியிருப்பாரு. அப்பா வர்ற நேரத்தில ப்ரச்சனை பெரிசாகி, வில்லன் ஏதாவது ஆக்‌ஷன் பண்ண, கடைசியில ஹீரோ பைட் பண்ணி குடும்பத்த ஒண்ணு சேர்த்துருவாரு. இதான் அந்தரிவாடுகளோட கதை. 

புதுசா ஹீரோ ராம் சரண். தாத்தா பிரகாஷ்ராஜ். குளுகுளு குல்பி காஜல் குத்து பாட்டு, ஸ்டெப்புலு பாட்டு, பளிச் பளிச் ஒளிப்பதிவு. அழுகாச்சி செண்டிமெண்ட். ராம் சரணின் ஓப்பனிங் பாட்டு டான்சும், ரக்பி புட்பால் பைட்டும் சுவாரஸ்யம். கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் பழைய முராரி வாடையை மறைக்க முடியவில்லை. எல்லாத்தையும் போட்டு ஒரு கலகல்க்கு அடிச்சி பழைய கள்ளை பழைய மொந்தையிலேயே கொடுத்திருக்காங்க. படம் அங்க ஹிட்டாம். ம்ஹும். ஒலகம் முழுக்கவும் இப்படித்தான் இருப்பாங்க போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@