கொத்து பரோட்டா -06/10/14
GOVINDUDU ANDHARIVADE நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வேன். நடுத்தர வயதை எட்டும் சூப்பர் ஸ்டார்களை சின்னகவுண்டர் கதையில் மீண்டும் வேறு ஒரு கெட்டப்பில் நடிக்க வைத்தால் எப்போது ஓடுமென்று. அக்கதையில் காதல்,பாசம், வீரம், நட்பு, துரோகம், தியாகம் எல்லாமே இருக்கும். அது போல தெலுங்கு பட உலகிற்கு இது குடும்ப சீசன் படம். சீதம்மா வகுட்லோவில் வெங்கடேஷ்,மகேஷ்பாபுவிற்கு அடித்த லக்கி ப்ரைஸ். அப்படியே நாகார்ஜுன் குடும்பத்தின் மனம் படம் மூலமாய் சூறாவளிக் காற்றாய் அடிக்க, இப்போது அதை அறுவடை செய்ய ராம் சரண் களம் இறங்கியிருக்கிறார். நாகேஸ்வரராவ் காலத்திலிருந்து, வெங்கடேஷ், நாகார்ஜுன், மகேஷ்பாபு என சூப்பர் ஸ்டார் முதல் ஸ்டார்டிங் ஸ்டார் வரை அடித்து துவைத்த பார்முலா கதை தான். கிராமத்தில் பெரிய குடும்பம், குடும்பத்தில் ஹெட் ஒரு வயசான தாத்தா. அவருடய பையனோ, அல்லது பெண்ணோ, காதல் திருமணம் செய்து ஊரை விட்டு, போய்விடுவார். அவர் வெளிநாட்டில் பெரிய ஆளாய் இருக்க, அவருக்கு மகளும், மகனும் இருப்பார்கள்.வெளிநாட்டில் ஹீரோ இண்ட்ரோ சாங் முடிந்ததும், ஒர் சுபயோக சுப தினத்தில் அப்பாவுக்கு ஊர் நியாபகம் வந்து உனக்கு ஒரு தாத்தா...