பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி?
பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை. ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து. பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பத...