Thottal Thodarum

May 7, 2010

மனைவி அகராதி

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்

மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க

மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை

மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்த்மாயிருக்கிறேன்

மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.

மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்

மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்

மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.

மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு

மனைவி : சரி
அர்த்தம்   :  நோ..

மனைவி : நோ
அர்த்தம் : சரி

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க

மனைவி ; ஒண்ணுமில்லை
அர்த்தம :  நிறைய இருக்கு

மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும் 

ஏதோ என்னால முடிஞ்சதை சொல்லியிருக்கேன். உஙக்ளுக்கு தெரிஞ்சதை நீங்களும் சொல்லுங்க.. 

Post a Comment

52 comments:

அப்துல் கபூர் said...

அனுபவம் பேசுதோ?, கவனமா இருங்க தல!

-கபூர்
லாஸ் ஏஞ்சலஸ்

அப்துல் கபூர் said...

மனைவி : எப்ப ஊர் வருவீங்க அத்தான்?
அர்த்தம் : வராதே! அங்கேயே இரு.

(என்னால முடிஞ்சத நானும் சொல்லிட்டேன்)

Vidhoosh said...

ம்ம்.. மனைவி ஒரு அகராதி-ன்னு மட்டும் சொல்லி இருந்தீங்க... நடக்கறதே வேற! :))

மொழிபெயர்ப்பு+அனுபவம் = துக்கம்.

மின்னுது மின்னல் said...

::)

Sukumar said...

மனைவி : இன்னைக்கு ப்ளாக் ரெஸ்பான்ஸ் எப்படிங்க ?
அர்த்தம் : பொழுதன்னிக்கும் கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருக்காம வந்து கொஞ்சம் சமையல் பண்ணுங்க...

Chitra said...

மனைவி: எனக்கு ஒன்றும் வேண்டாம்
அர்த்தம்: நான் இப்போ "நினைத்து" கொண்டு இருக்கும் item வாங்கி கொடுத்து - surprise பண்ணுங்க.

It is a pretty tricky one - a big challenge.

.....ha,ha,ha,ha,ha....

எல் கே said...

தல, இதெல்லாம் நீங்க தப்பு தப்பா புரிஞ்சிகிட்டு பின்னாடி சரி பண்ணதா ???

Sabarinathan Arthanari said...

நல்ல அனுபவ பகிர்வு... எச்சரிக்கை... எடுத்துக்காட்டு ;)

மோனி said...

சரி ..
நோ ...

நோ ..
சரி ...

Indian said...

முதுகலை இல்லறத்தியல் - வகுப்புகள் ஆரம்பம் (1)

பாடம் ஒன்று: ஏன் திருமணம்? (M Sc Wifeology - 1)

பாடம் 2 - தயார் ஆகுங்க மக்களே - wifeology

Wifeology பாடம் 3 - தயார் ஆகுங்க!

பாடம் 4 - வேலை செய்யாதவன் தான் வீரமான வேலைக்காரன் (Wifeology)

5. விளையாட்டுப் பாடம் - சைட் அடிப்பது எப்படி? (Wifeology)

6. How to say NO! (Wifeology)

பாடம் 7: மனைவியின் எதிரில் போன் பேசுவது எப்படி? (Wifeology)

Wifeology - பைனல் எக்ஸாம்!

Athiban said...

ரூம் போடாம உட்காந்து யோசிப்பீங்களோ?

ஆரூரன் விசுவநாதன் said...

சரியாச் சொன்னீங்க.......

Anusha raman said...

hi frd,
advice for men & women : gate of happyness
Advice For Men and For Women
For Men:
Rule.No.1 - Never compare your mamma's cooking with your wife's! There is no faster way to dig your own grave than that! Please understand that your mom's cooking has the backing of 20 odd years of experience....don't expect that from your wife whose hardly into the process! What if she were to compare your earning capacity with her dad's!!! So shshshhhhh....!!!

Rule.No.2: Never go out of your way to please the lady with flowers, chocolates and gifts during your engagement period. If ever you do, please follow it up post-wedding too! When you could cover 20kms in 15 minutes when you are engaged just to spend some time with her, how dare you forget her birthday post - marriage, even after you are given the broadest of hints by her! Remember expectations always double... ever heard of them being halved ???

Rule.No.3: Do compliment her every now and then, verbally or with gifts! What are those lovely Teddies and Archies gift cards for? Don't sit there like the Lord Of The Rings expecting to be waited upon! Of course she will do it but everyone likes to be appreciated and pampered!!!!

Rule.No.4: This is very important! Sulking or complaining about marriage being a big mistake is a strict NO-NO !! You got into it with your eyes wide open, brimming with enthusiasm !! No one ever pushed you into it! So why this drama now!

Rule.No.5: Be Brave and take your own decisions and stand up by them!! Consult your parents for advice but realize that you are grown up enough to lead your life! Respect your partner's views at all times! Remember she has given up a lot more to make a life with you!!
********************************
For Women
1. Don't expect too much from him. Less the expectations lesser the disappointments.

2. Don't ever dare to plan any outing or movie on a day when there is an interesting match going on. REMEMBER SPORTS is more important to him than anything else. U spoil his day n He spoils your life...!

3. Over Emotions, Sentiments... Woha... What are these? Tears are not going to give any results either. It's just a temp. attention tht u get. No one likes Cry Babies m Whining Wifes.

4. Never dare to cross with his mother. Even if he says "My Mom's cooking is the best. U are nothing in front of her." take it easily with a smile. Tell him tht u are learning from his mother and will try to do it better. U are not gonna lose anything!

5. Try to know his friends and understand that they are also part of his world. Allow him to spend few weekends or occasional night out parties with his friends. But at the same time make sure that u get u r due importance! It must not be that he roams around with his friends forgetting that you exist at home
.
6. Don't start fighting for silly things. Forgetting birthdays and Anniversaries is not a big mistake. Men are not blessed with infinite and non-volatile RAM for storing everything in main memory. If you are very particular about present gifts n parties on u r birthdays n anniversaries, make sure u remind them well in advance by some means (I know it sounds stupid. But if u are so particular, Do it for u r own good)

7. Take him for your shopping only if he's interested. If you are going for Window Shopping or for saree purchase, Better go with your friends/go alone. He is better at office/home watching anything.

8. Give him importance always. Show due care and affection. That's the only way to win a guy's mind.
Dear Friends I got this advice from the web.kindly enjoy and useful for both.

யுவகிருஷ்ணா said...

//LABELS: நகைச்சுவை//

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

vasu balaji said...

/T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))
/

சார்! இந்த சிரிப்புக்கு அர்த்தம் இப்பவாவது புரிஞ்சதேன்னா? இல்லை கற்றது கைமண்ணளவுன்னா?

V.RAMACHANDRAN said...

Dear cable sir
This is Athi(Thamira) area.
Ramachandran

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சில நாட்கள் முன்பு இது மின்னஞ்சலில் வந்தது.

இராகவன் நைஜிரியா said...

ஆட்டிவித்தார் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா... :-)

ரவி said...

மெயில்ல வந்ததே ? அதே தானா ? இல்ல உங்க கற்பனையா ?

angel said...

wife - if u cook it will be the best
meaning - today u must cook and not me

malar said...

கணவன்:ப்ளாகில் எதும் எழுதல்ல

மனைவி:ம்னைவி எல்லாம் எழிதிட்டியா ?இன்ன வாரேன் சப்பாதி கம்போட

malar said...

பொம்பலைய கழுவல்லைனா இந்த ஆம்பளைங்கலுக்கு பொழுது போகாதே?

நேசமித்ரன் said...

:)

Repeattaaa ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது எழுதுனதுக்கு அப்புறம் எத்தனை அடி வாங்கினீங்க?

ISR Selvakumar said...

மனைவி - விக்ரம் ஸ்மார்ட்டா இருக்கார்.
அர்த்தம் - தொந்தியும், தொப்பையுமா உன்னை ஏன்தான் எனக்கு கட்டிவச்சாங்களோ?

பனித்துளி சங்கர் said...

ஆஹா ! நண்பரே மனைவியை பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் . வருங்காலத்தில் நமக்கும் தேவைப்படும் இந்த பதிவு பகிர்வுக்கு நன்றி !

அமுதா கிருஷ்ணா said...

நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்க..

க ரா said...

:-)))))
அது எப்படி இப்படி ஒரு துணிச்சல் ஒங்களுக்கு. பாரட்டபட வேண்டிய விசயம்தான்.

Prasanna said...

மனைவி: என்னங்க இன்னிக்கி ரெஸ்டா.?
அர்த்தம்: இன்னிக்கும் வெளில கூட்டிட்டு போகாம, தண்டமா வீட்ல தூங்க போறியா(டா)..?

பி. கு: எனக்கு இன்னும் கல்யாணம் ஆக வில்லை. எப்படி கற்பனை :)

Athisha said...

தஞ்சாவூர் கல்வெட்டு எங்க? எங்க?

selva said...

மின்னஞ்சலில் பல மாதங்களுக்கு முன்பு வந்தது இது...

மூலத்தைச் சொல்லி நன்றி சொல்லுங்கள் நண்பரே...

ஜோசப் பால்ராஜ் said...

//தஞ்சாவூர் கல்வெட்டு எங்க? எங்க //

எதுக்கெடுத்தாலும் எங்க ஊர்ல வந்து கல்வெட்டு வைக்கனும்னு நின்னா எப்டி?

எங்க ராசரசரு எம்புட்டு கஷ்டப்பட்டு கோயில் கட்டுனாரு தெரியுமா? தஞ்சாவூர் மாவட்டத்துல மலை எதுவுமே கிடையாது. புதுக்கோட்டைக்கு பக்கத்துல இருந்து அப்பவே அவ்ளோ கஷ்டப்பட்டு கல்லு கொண்டாந்து கோயில் கட்டுனாரு. அதுனால அந்த கோயில விட்ருங்கப்பா.

Unknown said...

மனைவி: லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு...
அர்த்தம்: சூடா காஃபி போட்டுக் குடுடா முண்டம்.

butterfly Surya said...

மனைவி: போன்ல யாரு.?
அர்த்தம்: வீட்டுக்கு வந்தும் அடங்க மாட்டீங்களா..??

KATHIR = RAY said...

Wife: Enna ippadi thondharavu pannadheenga

Meaning: Unga Silmisitha continue pannunga

ILA (a) இளா said...

Too late Boss, Read Penathal's Wifeology..

அஷீதா said...

மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க//

kalakkal comedy :)))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இது ரெம்ப அநியாயம்... இன்னும் எத்தனை பேரு எங்களை மாதிரி அப்பாவி தங்கமணிகளுக்கு எதிரா கெளம்பி இருக்கீங்க... ? Too bad I say (இருந்தாலும் சிரிக்க வெச்சதுக்கு தேங்க்ஸ்)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கணவன் - எப்படி இப்படி எல்லாம் சூப்பர்ஆ சமைக்கற?
அர்த்தம் - இந்த கொடுமைய எங்க போய் கத்துகிட்ட?
(நீங்களும் (ரங்க்ஸ்க) ஒண்ணும் சும்மா இல்ல... Guys are only very famous for these talks I say....)

ரோஸ்விக் said...

இவ்வளவு லேட்டாவா தலைவரே தெரிஞ்சுகிட்டீங்க?? :-)

ரோஸ்விக் said...

பாதிக்கப்பட்டவங்க ரொம்பப் பேரு இருக்காங்கன்னு பின்னூட்டம் சொல்லுதே!!!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

மனைவி என்பதே ஒரு 'அகராதி' தானே ?!
(சரியான அகராதி புடிச்ச பின்னூட்டமா இருக்கே ?!)

Cable சங்கர் said...

@aஅதிரைவீரன்
இரண்டாவது அதுவும் சேர்த்துக்கலாம்

@விதூஷ்
ரைட்டு

@மின்னுதுமின்னல்
:)

@சுகுமார் சுவாமிநாதன்’
இப்படியெல்லாம்கேட்குறாங்களா என்ன?

@சித்ரா
ஆமாம்

@எல்கே
ஆங்காங்கே சொந்த அனுபவமும் உண்டு

@சபரிநாதன் அர்தநாரி
:)

@மோனி
சரி

@இந்தியன்
நிச்சயம் படிக்கணும்

@தமிழ் மகன்
:)

@ஆரூரன் விசுவநாதன்
:)

@அனுஷாராமன்
பாலோ பண்ணிருவோம்

Cable சங்கர் said...

@யுவகிருஷ்ணா
:)

@டிவிராதாகிருஷ்ணன்
:))

@வானம்பாடிகள்
அதே தான்..:)

@வி.ராமசந்திரன்
அவர் கிட்ட பர்மீஷன் கேட்டுட்டேன்

@ஜ்யோவரம் சுந்தர்
இது ஒரு மறு ஒளிபரப்பு

@இராகவன் நைஜிரியா
:)

@செந்தழல் ரவி
எனக்கு மெயிலில் வரவிலலை

@ஏஞ்சல்
:)

@மலர்
அட்லீஸ்ட் வெளியவாவது தைரியமா எழுதறோமே..

@நேசமித்ரன்
ஆமா தலைவரே.. ரிப்பீட்டுதான். ஹீ.ஹி.. கொஞ்சம் வேலை..

Cable சங்கர் said...

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
ஹி..ஹி.. பர்சனல் கேள்வியெல்லாம்கேட்கபடாது

@ஆர்.செல்வகுமார்
ரைட்டு

@பனித்துளி சங்கர்
முடிஞ்சா யூஸ் பண்ணிக்கங்க


@அமுதாகிருஷ்ணா
:)

@இராமசாமி கண்ணன்
:)

நாங்கெல்லாம் வீரர்ல..

@பிரசன்னா
:)

@அதிஷா
ஏன் அதிஷா..?

@செல்வா
இல்லை.. தலைவா.. எனக்கு மெயிலில் வரவில்லை.

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

எங்கவீட்ல வேற மாதிரி

Raj Chandra said...

>>மனைவி : நோ
>>அர்த்தம் : சரி

- ஐயா, இப்படி நீங்க சொன்னதை நம்பி மனைவி பக்கத்தில் போக (அதாங்க, ஹி..ஹி), கன்னம் பழுத்திருச்சு :(

Anonymous said...

:)
haha..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

ப்ளீஸ் என்னைய விட்ட்ருங்க
கேபிள் ஜி

Thamira said...

செத்து சுண்ணாம்பானதையெல்லாம் பதிவாப் போடுறீரய்யா.. அநியாயம்.!

Kiruthigan said...

தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டுங்க..
அப்டியே இவங்கள சமாளிக ஏதுனா டிப்ஸ் குடுங்க தலீவா..