Thottal Thodarum

May 17, 2010

கொத்து பரோட்டா-17/05/10


பொறுக்கி பதிவர்கள்!!!!!:)
சென்னை ட்ரக்கிங் கிளப் நேற்று மெரினா முதல் ஈஞ்சம்பாக்கம் வரை கடற்கரைகளை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் அருமையான பணியினை 6-9 மணி வரை செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து பதிவர்கள், மயில் ராவணன், தோழி ஆகியோரும் கலந்து கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்கள். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளூர் ஆள் ஒருவர் இவர்கள் செய்வதை பார்த்து அவரும் தன் பங்குக்கு லோக்கல் ஆட்களை வைத்து ஒரு ரோட்டை க்ளீன் செய்தாராம். மாற்றம் இப்படித்தான் ஆரம்பிக்குமோ..? அரசு ஏன் கடற்கரை பகுதிகளில் நிறைய குப்பை தொட்டிகளை நிறுவக்கூடாது?. குப்பை போடாதே என்று சொல்வதை விட, அதை இம்மாதிரி இடங்களில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு சொன்னால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா?. சிங்கப்பூர் சென்று விட்டு வந்த போது பழக்க தோஷத்தில் கையிலிருந்த பிளாஸ்டிக் பேப்பர் குப்பையை போட குப்பை தொட்டியை தேடினேன் விமான நிலையத்திற்கு வெளியே ஒன்று கூட கண்ணில் படவில்லை. பின்பு இந்திய வழக்கபடி செய்துவிட்டு கிளம்பினேன். சுத்தம், சுகாதாரத்தை பேணும் சிங்கையில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடை செய்ய படவில்லை.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குஷ்பு தி.மு.கவில் இணைந்திருக்கிறார். இனி தமிழ் கூறும் நல்லுலகத்தில் கற்பு பற்றிய கேள்விகள் ஏதுமிருக்காது. இருந்தாலும் கேட்கமாட்டார்கள். தலைவரே சொல்லிவிட்டார் குஷ்பு முற்போக்கான பெண் என்று. கோர்ட்டும் சொல்லிவிட்டது. இனிமேல் இவரை வைத்து ஜல்லியடித்துக் கொண்டிருந்த திருமாவளவன், என்ன செய்வார்? கூட்டணி தர்மம்னு ஒன்ணு இருக்கில்ல..?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
லைவனுக்கு விழா எடுத்து நாளாகிவிட்டதாலேயும், அதை பலர் பல விதததில் விமர்சிப்பதனாலேயும், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பாராட்டுவிழா கும்பல் நேற்று வேறு ஒரு விஷாவை நடத்தி முடித்துவிட்டது. செம்மொழி விழாவுக்கு பாட்டு போட்ட, ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டுவிழா என்று ஒன்றை நடத்தி முடித்துவிட்டது. பாசதலைவனுக்கு சந்தோஷம். கலைஞர் டிவிக்கு ஞாயிற்றுக்கிழமைக்கு ஒரு இரண்டு மணி நேர நிகழ்ச்சி தயார். குஷ்புவை தி.மு.கவில் சேர்த்ததற்கு ஏன் கலைதுறையினர் சார்பில் ஒரு விழா நடத்தக்கூடாது..?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிவுலகமும் மற்ற மீடியாக்களும்.
sukumar jpg 
பதிவர்கள் எழுதும் பல விஷயங்கள் பல மீடியா ஆட்களால் படிக்கப்பட்டு வந்து கையாளப்படுகிறதும் உண்டு. என்னுடய விமர்சன வரிகள் பெரும்பாலான பத்திரிக்கைகளில் வருவதை போல. அது போல ஒரு பெட்டிக்கடையில் நின்றபோது அங்கே ஒலித்துக் கொண்டிருந்த எப்.எம்.ரேடியோவில் கிரிக்கெட் பற்றிய ஒரு விஷயம் ஓடிக்கொண்டிருந்தது திடீரென டெண்டுல்கரும் டோனியும் பேசிக் கொள்வதை போல ஒரு டயலாக் மேட்டர் ஓட அது அப்படியே நம் பதிவர் சுகுமார் அவர்களின் பதிவில் போட்ட ஒரு விஷுவல் கமெண்ட் பதிவிலிருந்ததுதான். உடனே நான் அவருக்கு போன் செய்து சொன்னேன் மிகவும் சந்தோசப்பட்டார். மீடியாக்கள் மட்டுமல்ல தற்போது அரசு அதிகாரிகள் கூட தமிழ் பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை நான் சில சமயம் நண்பர்கள் சொல்லியும், நேரில் சொல்லிக் கேட்டும் அறிய நேர்ந்திருக்கிறேன். எனவே நாம் எழுதி என்ன கிழியப்போவுது என்று நினைக்காமல் அடிச்சு தூள் பண்ணுங்க.. நண்பர்களே..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செவிக்கினிமை
புழல் திரைப்பட பாடல்கள் கேட்டேன். “திறந்திடு வானே..” கார்த்திக்கின் குரலில் இனிமையான ஷ்யூர் ஹிட். ஆர்கெஸ்ட்ரேஷன் அரேஞ்மெண்ட்ஸ் நன்றாக இருக்கிறது. மூன்றாவது பாடலான “எம்மனச” கார்த்திக் சுர்மதியின் குரலில் அழகான மெலடி. பத்தவச்சிட்ட, என்கிற தமிழ் சினிமா குல வழக்க குத்துப்பாடலும் உண்டு. இசையமைப்பாளர் நல்லதம்பி. ஏற்கனவே டான்சேரா என்கிற படத்தின் இசையமைப்பாளர். இதைவிட முக்கியமான விஷயம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்2வில் கலக்கிய, மீண்டும் கலக்க போகும் ப்ரியங்காவின்  அப்பா. All the Best Both of Them. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார ஆச்சர்யம்
குரோசியா நாட்டை சேர்ந்த பிரானோ செலக் என்பவருக்கு 81 வயதாகிறது. இவரை போல ஒரு அதிர்ஷ்டசாலி உலகில் யாரும் இருப்பார்களா? என்றே தெரியவில்லை. ஏனென்றால் இவர் இதுவரை 7 முறை மரணத்தை வென்றிருக்கிறார். விமானம், ரெயில், என்று எல்லாவிதமான விபத்திலேயும் தப்பியுள்ளார்.  1962ஆம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் ரயில் தடம்புரண்டு 17 பேர் பலியான விபத்தில் இவர் தப்பியுள்ளார். அந்த விபத்து நடந்து ஒரு வருடத்துக்கு பின் விமானத்தில் பயணம் செய்த போது விமானத்டின் கதவு திறந்து கொண்டதால் 19 பேர் பலியானார்களாம். இவர் வெளியே வீசப்பட்ட போது வைக்கோல்போர் மீது வீசப்பட்டதால் பிழைத்துக் கொண்டாராம்.  அதன் பிறகு இவர் பயணம் செய்த பஸ் ஆற்றில் விழுந்த போதும், இவரது கார் தீப்பிடித்து எரிந்த போதும், நடந்து செல்லும் போது பஸ் இவரை இடித்தபோதும், கடைசியாய் 1996ல் இவர் ஓட்டிச் சென்ற கார் ஒரு மலை மீதிலிருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தது. அதிலும் இவர் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் தப்பியிருக்கிறார். ஒரு வேளை இவர் தான் குரோசியா எமனோ..!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார தத்துவம்
வெற்றிக்காக காத்திருப்பது எல்லோருக்கும் சகஜமானது. ஆனால் அதற்காக உழைப்பது ஒரு சேம்பியனுக்கான செயல் அதான் சேம்பியனாக இருங்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார “ஸ்பெஷல்” தத்துவம்
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள். அனால் ஒவ்வொரு திருப்தியடைந்த பெண்ணிற்கு பின் ஒரு சோர்வடைந்த ஆண் இருப்பான் – நித்யானந்தா..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார விளம்பரம்
இதை நம்பி ஆக்ஸ் வாங்கி ஏழையானதுதான் மிச்சம்.. ம்ஹும்..
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார குறும்படம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜோக்
எல்லா மருந்துகளுக்கும் சைட் எபக்ட் இருக்கிறது. ஆனால் வயாக்ராவுக்கு மட்டுமே ‘ப்ரெண்ட் எபக்ட்” இருக்கிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஏஜோக்
பெண் : பைக்கே இல்லை எதுக்குடா ஹெல்மெட் வாங்குற?
ஆண் : நேத்து நீ ப்ரா வாங்கினயே அதை பத்தி  நான் ஏதாவது கேட்டேனா.?
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கேபிள் சங்கர்

Post a Comment

49 comments:

Paleo God said...

தோழி அவர்களுக்கும், தோழர் மயில் ராவணனுக்கும் வாழ்த்துகள்.

:)

Jerry Eshananda said...

ரசித்தேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//குஷ்புவை தி.மு.கவில் சேர்த்ததற்கு ஏன் கலைதுறையினர் சார்பில் ஒரு விழா நடத்தக்கூடாது..?//

அதானே. அண்ணன் கேபிள் சங்கர் தலைமையில்

//மீடியாக்கள் மட்டுமல்ல தற்போது அரசு அதிகாரிகள் கூட தமிழ் பதிவுகளை படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை நான் சில சமயம் நண்பர்கள் சொல்லியும், நேரில் சொல்லிக் கேட்டும் அறிய நேர்ந்திருக்கிறேன்.//

அப்டின்னா அதுக்கும் வரி வாங்குவான்களோ..

//ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின் ஒரு பெண் இருப்பாள். அனால் ஒவ்வொரு திருப்தியடைந்த பெண்ணிற்கு பின் ஒரு சோர்வடைந்த ஆண் இருப்பான் – நித்யானந்தா.. //

ரொம்ப குசும்புதான்.

creativemani said...

ஹெவி டிபன்.. ;)

செ.சரவணக்குமார் said...

அருமை. நண்பர் மயில்ராவணன், தோழி இருவருக்கும் நன்றிகள்.

மரா said...

ரொம்ப நன்றி தலைவரே 'Chennai Coastal Cleanup' நிகழ்வைப் பதிவு செய்ததற்கு.ஏதோ நம்மால முடிஞ்சது. மற்றபடி அடியேனின் வாசகியும், ஜெர்மனியைச் சேர்ந்த தோழி சூசேன் கூப்பிட்டு போனேங்கிறதெல்லாம் பொய்...நன்றி.

மரா said...

@ ஷங்கர்
@ செ.சரவணக்குமார்
உங்களுக்கும் எனது நன்றிகள்.

Unknown said...

மயில்ராவணன் மற்றும் தோழி இருவருக்கும் நன்றிகள்..

பதிவர் சந்திப்பு நடத்துறப்ப மற்ற பதிவர்களும் இப்பிடிச் செய்யலாமே?

அப்புறம் அந்த வலைமனை ப்ளாகின் லிங்கை இங்கே கொடுத்திருக்கலாம்.. :))

மரா said...

@ முகிலன்
நன்றி நண்பரே. இதோ சுகுமாரின் வலைப்பூ http://valaimanai.blogspot.com

Unknown said...

செமத்தியான குறும்படம்

சாதாரண கிராமத்தான் said...

cable,
If the cricket photo comment created by one of the bloggers the fm station should mention the name of the blogger. We dont have that good culture of appreciating original work.
All other things are good as usual.
Even the Joke is like A joke.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

// பின்பு இந்திய வழக்கபடி செய்துவிட்டு கிளம்பினேன். சுத்தம், சுகாதாரத்தை பேணும் சிங்கையில் ப்ளாஸ்டிக் பயன்பாடு தடை செய்ய படவில்லை.
//

இது நல்ல காரணமாகப் படவில்லை. குப்பையை ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு, குப்பைத் தொட்டையைப் பார்க்கும் பொழுது செய்யலாமே.

நெடுந்தூரம் பயணிக்கும் பொழுது குப்பைத்தொட்டியைத் தேடிக்கொண்டே செல்வீர்களா?

மற்றபடி கொத்துபுரோட்டா சூப்பர்

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் மயில்ராவணன், மற்றும் தோழி.

CS. Mohan Kumar said...

போட்டோ கமெண்ட் பத்தி எழுதிட்டு அதை எழுதிய நண்பர் பெயர் எழுதலையே!! சுகுமார்னு நினைக்கிறேன் சரியா?

வவ்வால் said...

A small doubt Regarding "nithya thathuvam" appo back entry ? :-(

க.பாலாசி said...

மயில்ராவணன், தோழி இருவருக்கும் நன்றிகள்...

யாசவி said...

கேபிள்,

கொத்து கம்மியா கொத்தியிருக்கீங்க :)

Indian said...

//சிங்கப்பூர் சென்று விட்டு வந்த போது பழக்க தோஷத்தில் கையிலிருந்த பிளாஸ்டிக் பேப்பர் குப்பையை போட குப்பை தொட்டியை தேடினேன் விமான நிலையத்திற்கு வெளியே ஒன்று கூட கண்ணில் படவில்லை. பின்பு இந்திய வழக்கபடி செய்துவிட்டு கிளம்பினேன்.//

அப்படியே குப்பையை கையோட எடுத்து வந்து, கண்ணில் படும் குப்பைத் தொட்டியிலோ அல்லது வீட்டிலுள்ள குப்பைத் தொட்டியிலோ போட்டு விடுவேன்.

Indian said...

//சென்னை ட்ரக்கிங் கிளப் நேற்று மெரினா முதல் ஈஞ்சம்பாக்கம் வரை கடற்கரைகளை ஆக்கிரமித்திருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் அருமையான பணியினை 6-9 மணி வரை செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து பதிவர்கள், மயில் ராவணன், தோழி ஆகியோரும் கலந்து கொண்டு சுத்தம் செய்திருக்கிறார்கள். //

பாராட்டுகள்.

butterfly Surya said...

தோழி, மயில்ராவணன் & சுகுமாருக்கு வாழ்த்துகள்.

butterfly Surya said...

அடுத்த வார கொத்து பரோட்டாவையும் சேர்த்து போட்டு விட்டீர்களா..??

Indian said...

//குப்பை போடாதே என்று சொல்வதை விட, அதை இம்மாதிரி இடங்களில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு சொன்னால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா?.//

ஆம். நன்றாகத்தான் இருக்கும்.

//அரசு ஏன் கடற்கரை பகுதிகளில் நிறைய குப்பை தொட்டிகளை நிறுவக்கூடாது?.
//

செய்ய வேண்டும் தான். அதற்கான வசதி வாய்ப்பு, நிதி நிலை மாநகராட்சியிடம் உள்ளதா?

பார்க்க...

http://www.chennaicorporation.gov.in/budget/BudgetList.do?do=budgetList

//மாற்றம் இப்படித்தான் ஆரம்பிக்குமோ..?
//

மாற்றம் நம்மில் இருந்தே தொடங்கட்டும்.

மங்குனி அமைச்சர் said...

//ஏஜோக்
பெண் : பைக்கே இல்லை எதுக்குடா ஹெல்மெட் வாங்குற?
ஆண் : நேத்து நீ ப்ரா வாங்கினயே அதை பத்தி நான் ஏதாவது கேட்டேனா.? ///

இது மட்டும் தான் ஏஜோகா , அப்ப இதெல்லாம்

"இந்த வார “ஸ்பெஷல்” தத்துவம்"
"இந்த வார விளம்பரம்"
"ஜோக் "

ருத்ர வீணை® said...

ஆக்ஸ் வாங்கி சொத்தழிப்பவர்கள் சங்கம்னு ஒன்னு ஆரம்பிங்கப்பா...

எம் அப்துல் காதர் said...

தோழி மற்றும் தோழர் மயில் ராவணனுக்கும் வாழ்த்துகள்.
நல்ல பதிவு:))))

எல் கே said...

akka poorva pathivugal ini athigam podalam, namathu korikaigal sevimadukapadum endru ennugiren

நேசமித்ரன் said...

செம கொத்து தலைவரே
எல்லாம் அளவா இருந்தது

நண்பர் மயில்ராவணன், தோழி இருவருக்கும் நன்றிகள்.

மணிகண்டன் said...

இந்த வார ஆச்சர்யம்

எனக்கு என்னவோ இந்த ஆள் மேல டவுட்டா இருக்கு :)-

Venkat M said...

இவர் தான் குரோசியா எமனோ..!!!!!

Nice joke cable.

Kolipaiyan said...

//நாம் எழுதி என்ன கிழியப்போவுது என்று நினைக்காமல் அடிச்சு தூள் பண்ணுங்க.. நண்பர்களே.. //

Superb Anna...

பித்தன் said...

koththu superb......

Admin said...

சுவைத்தேன்.

sriram said...

தத்துவமும் ஜோக்குகளும் வழக்கம்போல சூப்பர் யூத்து
என்றும அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

என்னுடய விமர்சன வரிகள் பெரும்பாலான பத்திரிக்கைகளில் வருவதை போல. ///////////

Is it true????????

Sukumar said...

நண்பர் மயில்ராவணன், தோழி இருவருக்கும் நன்றிகள்.
நீங்கள் ஊக்கம் கொடுத்து வளரும் பதிவர்களில் நானும் ஒருவன்.. நன்றி தல...

அத்திரி said...

தலைவரை குறை சொல்லலைனா தூக்கம் வராதோ

Thamira said...

எப்பிடியாவது ரெண்டு பதிவுக்கு ஒருக்கா நா சிங்கப்பூர் போனப்போ..ன்னு எழுதிதான் ஆகணுமா? ஹிஹி..

Naadodigal said...

வயாகரா ஜோக்-ம் A-ஜோக் ரகம் மாதிரி தான் இருக்கு தலைவரே. படித்தோம்..ரசித்தோம்.

நிலாரசிகன் said...

குப்பை பொறுக்க நான்,விழியன்,அஷிதா ஆகியோரும் சென்றிருந்தோம் ஜி :)

Cable சங்கர் said...

@shankar
ரிப்பீட்டு

@ஜெரி ஈசானந்தா
நன்றி தலைவரே

@ரமேஷ் ரொமப் நல்லவன்
வேலை வினையே வேண்டாம்

@அன்புடன் மணிகண்டன்
அப்படியா..?

@செ.சரவணக்குமார்
நன்றி

@மயில் ராவண்
ஓகே சூசேனை கேட்டதாய் சொலல்வும்

@

Cable சங்கர் said...

@முகிலன்
நிச்சயம் இது மாதிரி எதாவது ட்ரை பண்ணுவோம்

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி

@சாதாரணகிராமத்தான்
கிராமத்தான் இவ்வளவு இங்கிலிபீஸு பேசுறீங்க..?:)))

@

Cable சங்கர் said...

@ச.செந்தில்வேலன்
ஓகே அடுத்த முறை ட்ரை பண்ணுறேன்


@சைவகொத்துபரோட்டா
நன்றி

@மோகன்குமார்
போட்டாச்சு.. தலைவரே

@வவ்வால்
கிர்ர்ர்ர்ர்ர்..:)

Cable சங்கர் said...

@யாசவி
அடுத்த முறை இன்னும் கொஞ்சம் எழுதிடலாம்

@இந்தியன்
அதுவும் சரியே

@இந்தியன்
நன்றி

Cable சங்கர் said...

@பட்டர்ப்ளை சூரியா
:((

@இந்தியன்
நிச்சய்ம் ஒரு நாள் மாற்றம் வரும்..

@மங்குனி அமைச்சர்
ஓகே..ஓகே..

2ருத்ரவீணை
அது சரி

@எம்.அப்துல் காதர்
நன்றி’

@எல்.கே
நிச்சயம்

Cable சங்கர் said...

@நேசமித்ரன்
நன்றி

@மனிகண்டன்
:0

@வெங்கட்
:)

@கோலிப்பையன்
நன்றி

பித்தன்
ஓகே

@சந்ரு
நன்றி

@ஸ்ரீராம்
நன்றி

@சைந்தவி
நிஜம் தான் படித்து பாருங்கள்

@இராமசாமி கண்னன்
:)

Cable சங்கர் said...

@சுகுமார் சுவாமிநாதன்
என் ஊக்கமெல்லாமில்லை உன் திறமை
வாழ்த்துக்கள்

@அத்திரி
அவரு குறை சொல்றா மாதிரி நடத்துக்காதுன்னு சொல்ல சொல்லு

@ஆதி மூலகிருஷ்ணன்
வரலாறு முக்க்யமில்லையா ஆதி..:)

@நாடோடிகள்
ஓகே ரைட்டு நன்றி

@நிலாஇரசிகன்
அப்படியா முன்பே சொல்லியிருக்க கூடதா?

:((

சாதாரண கிராமத்தான் said...

நாங்களும் எப்போ English Hindi எல்லாம் பேசி MP ஆகறது? நல்லவேளை இன்னும் English க்கு தார் அடிக்கவில்லை.
ஆமா பாஸ் நித்ய இப்போ எங்கே இருக்கார்?
அந்த நித்யதத்துவம் பார்த்தால் உங்கள் A joke எல்லாம் பப்படம்தான்.

ரோஸ்விக் said...

மயில்ராவணன் மற்றும் தோழி இருவருக்கும் நன்றிகள்...

குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே இருந்தாலே பெரும்பாலான படித்தவர்கள் அதில் குப்பை போட்டு பழகிவிடுவார்கள். நல்ல பழக்கத்திற்கு இது உந்துதலாக அமையும்.

அனைத்தையும் ரசித்தேன்.

govinthan said...

லக்கி மனிதர் பற்றி மேல் விவரம் வேண்டுமா ?
சுட்டுங்கள் இதை
http://www.orato.com/self-help/luckiest-man-the-world