Thottal Thodarum

May 27, 2010

சாப்பாட்டுக்கடை

பல நேரங்களில் பசிக்கு நாம் சாப்பிடும் போது ருசி பார்ப்பதில்லை. அப்படி ஒரு அவசரத்தில் பசிக்காக சாப்பிடும் போது அவ்வுணவு ருசியாய் அமைந்துவிட்டால் அத்தருணம் அருமையானதாகிவிடும். மீண்டும் மீண்டும் அவ்வுணவகத்தை தேடிப் போக வைத்துவிடும்.
Photo0056 அப்படி ஒரு பசி வேளையில் போய் இம்பரஸ் ஆன உணவகம் தான் சென்னை செனடாப் ரோடில் உள்ள தாபா எக்ஸ்பிரஸ் என்கிற பஞ்சாபி உணவகம். இவர்கள் மதிய வேளையில் 80 ரூபாய்க்கு அன்லிமிட்டட் வெஜ் பப்பே.. அளிக்கிறார்கள். போனவுடன் நாக்கூறும் சூடான ஜிலேபி. ஜிலேபியை சூடாக சாப்பிட்டிருக்கிறீர்களா?  தேவாம்ரிதமாய் இருக்கும். அதன் பிறகு நான், பட்டர் நான், புல்கா, ரோட்டி என்று கலந்து கட்டி ரோட்டி அயிட்டங்கள், அதற்கு இரண்டு சைட்டிஷ்கள், ஒரு ட்ரை, ஒரு க்ரேவி, ஒரு டால், அது மட்டுமில்லாமல் ஒரு சைனீஷ் சைட்டிஷ், ஒரு பிரியாணி ரைஸ்,அல்லது புலாவ், நூடூல்ஸ், வெறும் சாதம், தயிர்சாதம், ஊறுகாய், Salad என்று வரிசை கட்டி நிற்கும் உணவுகள். ஒவ்வொன்றும் ஒரு சுவை. சாப்பிட்டு விட்டு ஒரு லஸ்ஸியும் ஸ்வீட் பீடாவும் போட்டால்.. ம்ம்ம்ம்ம். டிவைன். இவை ரெண்டும் பப்பேயில் வராது. என்பது ரூபாய்க்கு அருமையான லஞ்ச்.. என்ன குடிப்பதற்கு வெறும் பில்டர் வாட்டர் வைக்கிறார்கள். அதற்கு பதிலாய் நல்ல கேன் வாட்டரை கொடுக்கலாம்.
 Photo0055

இரவு வேளைகளில் பஞ்சாபில் உள்ள தாபாக்கள் போல கயிற்றுக் கட்டில் ஒரு சிறிய டேபிளில் வெட்ட வெளியில், பக்கத்தில் உள்ள செயற்கை நீரூற்றுக்கு பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் ஒரு சந்தோஷத்தை அனுபவித்து பார்த்தால் தெரியும். இதை தவிர ஏஸி ஹாலும் இருக்கிறது. இவர்கள் மதியத்தில் மட்டுமே வெஜ் பப்பே அளிக்கிறார்கள். இவர்கள் நான்வெஜ் பஞ்சாபி அயிட்டங்களும் பிரபலமானவை.. முக்கியமாய் முர்க் மசாலாவும் அட்டகாசமாய் இருக்கும். Have A Try.

கேபிள் சங்கர்
Post a Comment

25 comments:

creativemani said...

அந்த தாபாவில் நானும் எனது நண்பர்களுடன் டின்னெர் கயிற்று கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டு இருக்கேன்.. அந்த சூடான ஜிலேபி மற்றும் லஸ்ஸி.. வாவ்.. சூப்பரா இருக்கும்..

Unknown said...

இந்த வாரம் போகலாம் ..

Anonymous said...

உங்க சாப்பாட்டு கடை எவ்வளவு நல்லாயிருக்குது, இதே மாதிரி திரை விமர்சணமும் எழுதுங்களேன். நல்ல உணவங்களை மக்களுக்கு அறிமுக படுத்துவது, சென்னையில் உள்ள பல பேட்சிலர்களுக்கு மிக பெரும் உதவியாக இருக்கும்.

தப்பி தவறி எதாவது மட்டமான ஹோட்லுக்கு போனால் அப்படியே வெளியே வந்து கையை விட்டு வாந்தி எடுத்துட்டு அதை அப்படியே மறந்திடுங்க. சரவண பவன் - மரண பவண் மாதிரி பதிவை போட்டுறாதீங்க.

அது என்ன சாப்பாட்டு கடையில மட்டும் நல்ல விசியம் மட்டும் எழுதுறீங்க, திரை விமர்சணம் எழுதும் போது மட்டு காட்ஷிலாவா மாறிடுறீங்க

Paleo God said...

/கே.ஆர்.பி.செந்தில் said...
இந்த வாரம் போகலாம் ..//

ரைட்டு! :-)

Kumky said...

ஹூம்...

பொன் மாலை பொழுது said...

அதுசரி, இப்படி வெளியில் சுற்றி சுற்றியே கட்டு கட்டி விட்டு பதிவு போடுவது நல்லாத்தான் இருக்கும்.
அனா உங்கள் திருமதி யிடம் வாங்கி கட்டிகொல்வதில்லையா சார்?!
ஒரு வேலை ரெண்டு பேரும் சேர்ந்தே சுற்றுவீர்களோ?!

ஜெட்லி... said...

போயிருவோம் ....!1

VISA said...

தாபா எக்ஸ்பிரஸ் நல்ல இருக்கும். ஆனா அந்த 80 ரூபாய் பப்பே செம மொக்கை.

பித்தன் said...

ரொம்ப நாளைக்கு முன்னாடி போயிருக்கேன் ரொம்ப நல்ல இருக்ம்னு கேள்விப் பட்டு போனோம் மப்புல ஒன்யும் சரியாய் தெரியல... இப்போ மறுபடியும் போய் ஜமாயச்சுற வேண்டியதுதான்.

துளசி கோபால் said...

செனடாப் ரோடு தாபா எக்ஸ்ப்ரெஸை நம்ம பா. ரா.வின் பக்கங்களில் படிச்சுட்டு நம் மலேசிய விருந்தினர்களை அங்கே கூட்டிக்கொண்டு போனோம்.

கயிற்றுக் கட்டில் பகுதியில்தான் சாப்பிட்டோம் என்றாலும் முழங்கால் பிரச்சனை என்று அதே பகுதியில் போட்டிருந்த மேசை நாற்காலி வரிசையில் இடம் பிடித்தோம்.

நான் வெஜ் ஸ்டார்ட்டர் அருமை. மற்ற அயிட்டங்களும் லஸ்ஸியும் சூப்பர். விலையும் அவ்வளவாக இல்லை. அனைவருக்கும் மகிழ்ச்சிதான்.

அதுக்குப்பிறகு ஒரு பதிவுலகத்தோழியுடன் அந்த வெஜ் பஃபே போனோம். என்னமோ சுமாராகத்தான் இருந்தது.

அதன்பிறகு நியூஸியில் இருந்து வந்த மகளுடன் ஒரு பகல் உணவுக்கு உள்ளெ ரெஸ்டாரண்டில் தாழ்ந்த உணவு மேசையில் கயிற்று இருக்கையில் அமர்ந்து வெட்டினோம்:-)))) மகளுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

ஆக மொத்தத்தில் அந்த பஃபே லஞ்சு ரொம்ப சுமார்தான்.

ஜெய் said...

ஜிலேபி unlimited.. :-) அதுக்காகவே காலேஜ் படிக்கறப்போ கும்பலா போயிடுவோம்..

surivasu said...

//தாபா எக்ஸ்பிரஸ் நல்ல இருக்கும். ஆனா அந்த 80 ரூபாய் பப்பே செம மொக்கை.//

100% true statement.

shankar said...

Sir the food in the restaurant is nice but its one of the places with the worst customer service.. During weekends they want to accommodate as many people as possible so they try to push off people as soon as possible .. and the worst part is they talk abt this in front of the customer itself....

க ரா said...

ரொம்ப நல்ல ஹோட்டல்னா அது. எங்க ஆபிஸ்ல யார் ட்ரீட் கொடுத்தாலும் அங்கதான். அவங்கள இன்னும் ரெண்டு பிராஞ்ச் வெச்சுருக்காங்க , நுங்கம்பாக்கம் ஹைரோடுல சிட்டிபாங்க் ஏடிஎம் ஆப்போசிட்லயும், மகாலிங்கபுரம் சிக்னல்லயும்.

கால்கரி சிவா said...

அந்த சூடான ஜிலேபி மேலே ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிட்டு பாருங்க :)

iniyavan said...

கேபிள்,

இப்படி கடை கடையா தேடி பிடிச்சு சாப்புடறீங்களே, உடம்பு என்னாத்துக்கு ஆறது?

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கும் போல...

sriram said...

அது சச்சின் கா தாபா ஆக இருந்த போது சாப்பிட்டிருக்கிறேன், நல்லா இருக்கும், ஆகா ஓகோவெல்லாம் கிடையாது.
கமல் ஆபீஸ் அருகில் ஒரு பஞ்சாபி டாபாவில் உணவு அருமையா இருக்கும்.
நாரத கான சபா எதிரில் இருக்கும் காபூலிலும் அருமையான உணவு கிடைக்கும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

திருநெல்வேலி ஜங்ஷன் said...

என். உலகநாதன் said...
கேபிள்,
இப்படி கடை கடையா தேடி பிடிச்சு சாப்புடறீங்களே, உடம்பு என்னாத்துக்கு ஆறது?





யாருங்க? enda உலகநாதன துக்கி கடசுங்கள் . என்ன வார்த்தை solivetai . எங்கள் தொந்தி வளர்ப்பவர் சங்க தலிவர் அண்ணன் cabile சங்கர பார்த்து ??????
பெளைத்து போ !!!!!!! அண்ணா நீங்க உங்க பணிய தொடுருங்கள் .
அன்புடன் ,
ஞானம்

எம் அப்துல் காதர் said...

நாங்கள் ஊரில் இல்லாவிட்டால் கூட, ஊரில் இருப்பதாக நினைவு கூறுகிறது உங்கள் சாப்பாட்டுக் கடை.

வாழ்த்துகள்!!

shabi said...

Triplicane ல உள்ள காசி விநாயகா mess ல சாப்ட்டு இருக்கீங்களா... ராயப்பேட்டைல new college பின்னாடி safari hotel ஒண்ணு இருக்கு athappaathiyum eluthungalen

geethappriyan said...

தல,
பல்லாவரத்தில் என் நண்பன் ராஜகோபாலின் புத்தாஹட் என்னும் சாண்ட்விச் கடை இருக்கு,ரோமியோ கூட்டி போவார்,போய் சாப்டு சொல்லுங்க தல,செம கவனிப்பு உண்டு.
=======

vinthaimanithan said...

நான் அடிக்கடி விரும்பி சாப்பிடும் உணவகம் அது தல

Sunantha said...

dhaba express serves authentic north indian..I can bet you wont get the soft garam thandoori roties like they serve anywhere in chennai.

Buffet is ok for 80 rs but nowhere near to their restaurant food.

chinnathambi said...

http://chinnathambiarun.blogspot.in/2012/02/blog-post.html

அருமை. நான் நேற்று போய் வந்தேன்