Thottal Thodarum

May 28, 2010

ரீவைண்ட்

இந்தியாவில் குறிப்பிட தகுந்த சிறந்த இயக்குனர்களில் பாசிலும் ஒருவர். பாசிலின் வருஷம்16, பொம்முகுட்டி அம்மாவுக்கு,பூவிழி வாசலிலே, போன்ற  படங்களினால் அவர் மேல் அபரிமிதமான காதல் இருந்த கால கட்டம். ஏனென்றால் அவரது படங்களில் இருக்கும் ஒவ்வொரு சின்ன கேரக்டரும் மக்களின் மனதில் நிற்கும் கேரக்டர்களாக வலம் வரும் கேரக்டர்களாக இருக்கும் என்பதால் நான் நடித்து கொண்டிருந்த காலத்தில் பாசில் “ஒரு நாள் ஒரு கனவு” படத்தை ஆரம்பித்தார். அப்போது அவரது அலுவலகம் அசோக்நகரில் போஸ்டல் காலனியில் இருந்தததாய் ஞாபகம். தொடர் முயற்சிக்கு பின்பு அவரை பார்க்க முடியாவிட்டாலும் ஒரு வழியாய் என் போட்டோவை அவர்கள் அலுவலகத்தில் சேர்த்துவிட்டேன்.

எனக்கு தெரிந்து பாசில் என்றில்லை எந்த மலையாள திரைப்பட இயக்குனர் தமிழில் படம் செய்தால் அதில் பிரதான கேரக்டர்களை தவிர மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஏன் சில சமயம் வசனம் எழுதக் கூட மலையாள ஆட்கள் எழுதி பார்த்திருக்கிறேன்.

பாசிலின் படங்களில் பார்த்தால் அவரது கேமராமேன் அனந்த குட்டன்,  வசனகர்த்தா கோகுல கிருஷ்ணா மற்றும் படத்தில் வரும் பல கேரக்டர்கள் ஆர்டிஸ்ட் கேரளத்துகாரர்களாகவே இருந்ததை மறுக்க முடியாது. இது அவரை மட்டுமே குறை சொல்வதற்காக சொல்லவில்லை. இது தான் அவர்களது வழக்கம். தமிழ் நடிகர்களில் சார்லி மட்டும் இவர்களது லிஸ்டில் இருப்பது ஒரு அதிசயம்.

அப்படியிருக்க ஒரு நாள் எனக்கு அந்த கம்பெனியிலிருந்து கால் வந்தது. ”நான் பாசில் சார் கம்பெனியிலிருந்து மேமேஜர் பேசறேன். உடனே டைரக்டர் உங்களை பார்க்கணும்னு சொல்றாரு.. வர முடியுமா..? ஒரு நல்ல கேரக்டர் ஓகேண்ணா ஐந்து நாள் கேரளாவில ஷூட்டிங். உடனே வாங்க” என்று அவசரபடுத்தினார்.

எனக்கு அன்றைக்கு வேறு ஒரு படத்துக்கு தேதி கொடுத்திருந்தேன் அதனால் நாளை வரலாமா என்று கேட்டபோது.. “அதெல்லாம் முடியாது சார். சார் நாளைக்கு கிளம்பிவிடுவார். உடனே வாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். நான் இதுவரை கேள்விபட்ட வரையில் மலையாள நடிகர்கள் தவிர சற்றே பெரிய கேரக்டர்களுக்கு வேறு ஆட்களை தேர்வு செய்ததில்லை. இருந்தாலும் மனதில் ஒரு சின்ன நப்பாசையினால் அன்றைக்கு நான் நடிக்கவிருந்த “தமிழகம்” படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் வாங்கிக் கொண்டு பிரசாத் லேபுக்கு போனேன்.

மேனேஜர் என்னை பார்த்ததும், “போட்டோவுல கொஞ்சம் செகப்பா இருந்தீங்க.?” என்றபடி சார் உள்ளே இருக்காரு இருங்க சொல்றேன். என்று உள்ளே சென்றவர் மீண்டும் திரும்ப வந்து உள்ளே ராஜா சார் கம்போஸிங் நடக்குது, ஓரமா வெயிட் பண்ணுங்க.. சார் கூப்பிடுவாரு. என்று சொல்லிவிட்டு  எனக்கோ ஒரே சந்தோசம் ராஜா சார் கம்போஸிங்கை நேரில் பார்க்க போகிறேன் என்று உள்ளே நுழைந்தேன். உள்ளே ராஜா சார், வாலி, பாசில் ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள். மயிர்கால்கள் எலலாம் புல்லரிப்பில் குத்திட்டு நின்றது. தொடர்ந்து டூயூன்களை வாசித்து கொண்டிருந்த இசைஞானி சிறிது ப்ரேக் எடுத்துக் கொள்ள, அங்கே நின்றிருந்த என்னை பாசில் பார்த்து பேர் என்ன என்று கேட்டார் சொன்னேன். சரி சொல்லி அனுப்புகிறேன் என்றார்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம். அப்புறம் வா.. சொல்லி அனுப்புகிறேன். மைண்ட்ல வச்சிருக்கேன் என்பது போன்ற வார்த்தைகள் எல்லாம் சகஜமே..

அதற்கப்புறம் எந்தவிதமான தொடர்பும் இல்லை. எனக்கு சொல்லப்பட்ட கேரக்டரில் ஒரு மலையாள நடிகர் நடித்ததாக கேள்விபட்டு,  என் மனதின் ஆதங்கம் தாங்காமல் அந்த மேனேஜருக்கு போன் செய்தேன் “சார்.. என்ன சார். ஏன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்?” என்று கேட்டேன்.

“நீங்க தமிழா..? படத்தில கொழுக்கு மொழுக்குன்னு இருக்கிறத பார்த்துட்டு மலையாளின்னு நினைச்சி கூப்பிட்டாரு..” .

நான் மிகவும் வருத்தப்பட்டேன். இவர் மட்டுமல்ல மலையாளத்திலிருந்து வரும் எல்லா இயக்குனரும் இதே விஷயத்தைதான் தொடர்கிறார்கள். நிச்சயம் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதற்காகவோ, நான் ஒரு சிறந்த நடிகன் என்று பீற்றிக் கொள்ளவோ இதை நான் சொலல்வில்லை. அன்றைய நிலையில் நான் ஒரு சாதாரண ஆரம்ப நிலை, வாய்ப்பு தேடியலையும் கேரக்டர் நடிகன் தான்.  மலையாள நடிகர்களும் சிறந்த நடிகர்களே. அவர்கள் வாய்ப்பு ஏன் கொடுக்கவில்லை என்ற காரணம் சொன்னார்களே அதற்காகத்தான் நான் வருத்தப்படுகிறேன்.

பின்னொரு நாளில் நான் உதவி இயக்குனராய் வேலை செய்து கொண்டிருந்த போது, ஒரு கேமரா மேன் என்னை தொடர்பு கொண்டார். தான் ஒரு சேனலில் கேமராமேனாக வேலை செய்வதாகவும், உங்களுக்கு ஏதாவது தொடர்பிருந்தால் எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு ஒரு சிடியை கொடுத்தார். அதில் அவர் ஒளிப்பதிவு செய்திருந்த ஒரு குறும்படமும், விளம்பர படமும் இருந்தது. அவரது ஒளிப்பதிவு நன்றாக இருந்தது. பின்னொரு நாளில் என்னுடய முதல் குறும்பட வாய்ப்பு கிடைத்த போது ஞாபகமாய் நான் அவரை பயன் படுத்திக் கொண்டேன். அவர் ஒரு மலையாளி. இதை குறிப்பிடுவது கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவரிடம் அனுமதி பெற்றுவிட்டுதான் இதை எழுதுகிறேன். அவருக்கும் மனதளவில் மலையாள இயக்குனர்களின் போக்கு வருத்தத்துக்குரியதே என்று சொல்வார். வருத்தப்படுவார். 

நிச்சயம் இது மலையாளிகளுக்கு எதிரான துவேசம் எழுப்பக்கூடிய பதிவு அல்ல. என் மன வருத்தத்தை பதிவு செய்வதற்கான பதிவு. சினிமா ஒன்றில் தான் பல வருடங்களாய் ஜாதி, இன, துவேஷமில்லா ஒரு அணியாக இருந்து வந்தது. ஆனால் இவர்களின் வருகைக்கு பிறகு. கொஞ்சம் கொஞ்சமாய் ஜாதி, இன, அணிகள் உருவாக ஆரம்பித்து, வருத்தத்துக்குரிய விஷயமாக வளர்ந்து வருகிறது.சில வருடங்களுக்கு முன்  சுமார் இருபது நாடார்கள் எலலாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்கள், அதில் இயக்குனர் முதற் கொண்டு முடிந்த வரை எல்லா முக்கிய டெக்னீஷியன்கள் நாடார்களாய் பார்த்து தேர்ந்தெடுத்தார்கள். நல்ல வேலை படம் ஓடாததால் அடுத்த படம் தயாரிக்கவில்லை. இப்படி பட்ட நிலை உருவாகாமல் தடுக்க ஜாதி, இன, மத துவேஷத்தை அட்லீஸ்ட் திரை துறையிலாவது தவிர்ப்போமே..

திறமை எங்கிருந்தாலும அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நம் ஆட்களை போல மற்ற மாநிலத்தவரும் நம் ஆட்களின் திறமைகளை மதித்து வாய்பளித்தால் இன்னும் நன்றாக இருக்குமே..? இது என் தாழ்மையான வேண்டுகோள்.

Post a Comment

41 comments:

Lenin P said...

கமலின் படங்களை பார்த்தால் பார்ப்புகள்தானே ஐயா அதிகம் தெரிகிறது? மிஞ்சி மிஞ்சிபோனால் நாசர் இருப்பார். இதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

Unknown said...

START MUSIC.....

Anonymous said...

நீங்கள் எழுதினது கம்மி அன்னாத்தே..”மலையாளிகளின் துரோகம்” அப்படீன்னு திரு.சாமுவேல்ராஜ் அவர்கள் Kaattchi.blogspot.com ல் நிறைய புள்ளி விபரங்களுடன் அழுத்த திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.நேரமிருந்தால் வாசித்துப்பாருங்களேன்.

Riyas said...

உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான்.. இன மொழி வேற்றுமைகளால்தான் இலங்கையில் இன்னும் தமிழ் பேசுபவர்கள் கஷ்டப்படுகிறார்கள்..

இராஜ ப்ரியன் said...

நெத்தியடி தல.......
இத படிச்சா இன்னும் நெறையா தெரியும். - http://kaattchi.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

இராஜ ப்ரியன் said...

இத படிச்சா இன்னும் நெறையா தெரியும் - http://kaattchi.blogspot.com/2010/05/blog-post_22.html

Paleo God said...

ஷகீலா மலையாளியா தல? :-)

இராஜ ப்ரியன் said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║இந்த ஷகிலாவ பத்தியா நீங்க கேட்டிங்க?
Shakeela:

Birthdate November 19, 1963
Birth location Chennai, India
Height 5'6"
Weight 85kg
Eye colour Black
Hair colour Brown
Skin colour Brown
Blood type A+
Ethnicity South India
Alias(es) Shakku

Thamira said...

என்னதான் காரணம் சொன்னாலும் இது போன்ற பகிர்வுகள் இன்னும் துவேஸ்ஹத்தை அதிகரிக்கவே செய்யும், தவிர்த்திருக்கலாம்.

(பை தி வே, காதல் கதை தொடர் தவிர எல்லாப் பதிவுகளையும் படித்தாயிற்று. இதை மொத்தப்பின்னூட்டமாகக் கொள்ளவும். கதையைப் படித்துவிட்டு பின்னர் அழைக்கிறேன், போனில். :-))

creativemani said...

ஆதி சொன்னதை அப்படியே ரிப்பீட்டிக்கிறேன்..
பிராக்கெட்டில் போட்டிருக்கிறதையும் சேர்த்து.. :)

பிரபல பதிவர் said...

தனிப்பட்ட அனுபவங்களால் வரும் சீற்றங்களை பதிவிடுவதை தவிர்த்தால்
வாசிக்க இனிமையாக இருக்கும். தாங்களும் மற்றவர்களை போல்
தனக்கு தனக்குன்னா தனக்கு தனக்குதான் !
என்ற வளையத்தில் மாட்டி விடாதீர்கள் !

நீங்கள் கடந்திருக்கும் எல்லை மிக பெரியது. சுருங்கி விடாதீர்கள்

Prathap Kumar S. said...

தேவையான பதிவு கேபிள்ஜி... தமிழன் என்னைக்கும் இளிச்சவாயன்தான்... இனவெறி மலையாளிகளிடம் அதிகம் உண்டு... சினிமாதுறை மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் இந்தநிலைதான்.

krishnakrishna said...

எல்லா மலையாளிகளும் அப்படி இல்லை நண்பா

Unknown said...

நீங்கள் சொல்வது கரெக்ட்....கோகுலம் சிட்ஸ் போயிரொக்கீங்களா? ஒரு தமிழ் ஆள் கூட பார்க்க முடியாது....தப்பிதவறி ஒரு விளம்பர படத்துக்கு வேலை செய்யற வாய்ப்பு கெடச்சு அதுவும் கெட்டு போச்சு நா தமிழன்ங்கறதாலே...

Lebbai said...
This comment has been removed by the author.
ராம்ஜி_யாஹூ said...

sorry to say this, this is a logicless criticism against FAZIL or any cinema directors.

Our tamil directors have encouraged so many malayalam and mumbai heroines why dont our directors encourage Tamil native heroines.

caste, religion, language is nothing to do with success.

இராஜ ப்ரியன் said...

@sivakasi maappilla :அவர் சுருங்கவில்லை சுருக்கவும் முடியாது. அவர் உண்மையை சொல்லுகிறார். நடந்ததை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. மற்ற பதிவுகளில் அவருடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்தது போலேவேதான் இந்த பதிவும்.

வந்தியத்தேவன் said...

ஏற்கனவே இதுபற்றி இன்னொரு பதிவு வாசித்தேன். மலையாளிகளால் தான் இந்திய அரசே தவறாக வழிநடத்தப்படுகின்றது.
லெனின் கமலின் சொந்த தயாரிப்புகளில் பெரும்பாலும் இசை இளையராஜா, அவர் பார்ப்பனா?

Unknown said...

//லெனின் கமலின் சொந்த தயாரிப்புகளில் பெரும்பாலும் இசை இளையராஜா, அவர் பார்ப்பனா?//

இதே வாதத்தை ஃபாசிலுக்கும் சொல்லலாமே? ஃபாசிலின் படங்கள் எல்லாவற்றிற்கும் இசை இளையராஜாதான். அவர் என்ன மலையாளியா?

எம்.எம்.அப்துல்லா said...

பொதுவா கலைஞனுக்கு ஜாதி,மதம் கிடையாது. ஆனால் அது தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். மலையாள,கன்னட ஆட்கள் சினிமாவில் அடிக்கும்கூத்து ரொம்ப நாளா நடக்குறதுதானே!! புதுசா?!?!?

Lenin P said...

//லெனின் கமலின் சொந்த தயாரிப்புகளில் பெரும்பாலும் இசை இளையராஜா, அவர் பார்ப்பனா?//
இளையராஜா ரேஞ்சுக்கு பார்ப்பனரில் எவராவது இருந்தால் எடுத்து விடுங்கள் ஐயா.. பேசுவோம்.

Lenin P said...

//பொதுவா கலைஞனுக்கு ஜாதி,மதம் கிடையாது. ஆனால் அது தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். மலையாள,கன்னட ஆட்கள் சினிமாவில் அடிக்கும்கூத்து ரொம்ப நாளா நடக்குறதுதானே!! புதுசா?!?!?//
இதெல்லாம் நாமாக பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான் அப்துல்லா அண்ணாச்சி. உண்மையில் எங்கும் ஜாதி மதம் நிரம்பி வழிகிறது. கிருஸ்டியன் நடத்தும் நிறுவனத்தில் பாருங்கள் டேனியல், டெய்ஸி, அப்ரஹாம் தான். இந்து, முஸ்லிம்களும் அப்படியே தான். அது தவறென கூட என்னால் கூற முடியாது. உண்மையில் அது அவர்களுக்கு சற்று பாதுக்காப்பதான உணரகூடும். இங்கு பாசிலையும் அப்படி பாருங்கள். சாதரண கமல் மேல் எனக்கு எந்த காண்டும் கிடையாது. வியாக்கினங்கள் பேசிவிட்டு இப்படி ஒன்சைட் ஆடுவது அயோக்கிதனம் இல்லையா?

Anonymous said...

லெனின் கமலின் சொந்த தயாரிப்புகளில் பெரும்பாலும் இசை இளையராஜா, அவர் பார்ப்பனா?//

கேள்வி அதுவல்ல, முதல்ல கேள்வியை முழுவதுமாக படித்துவிட்டு பதில் தரவும். திறமைக்கும் பார்ப்பனுக்கு என்ன சம்பந்தம், ஒரு வெளை இளையராஜா பார்ப்பனா இருந்தா அவருடைய திறமையை ஒத்துக்கொள்ள மாட்டீர்களா?

Anonymous said...

//எனக்கு தெரிந்து பாசில் என்றில்லை எந்த மலையாள திரைப்பட இயக்குனர் தமிழில் படம் செய்தால் அதில் பிரதான கேரக்டர்களை தவிர மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள், ஏன் சில சமயம் வசனம் எழுதக் கூட மலையாள ஆட்கள் எழுதி பார்த்திருக்கிறேன்//

நம்மாளுங்க இந்திக்கு போனாலும் இதை தானே செய்கிறார்கள். முருகதாசும், மணிரத்தினமும் அவர்கள் எடுக்கும் இந்தி படத்தில் கிட்டதட்ட்ட எல்லா டெக்னீசியன்களும் தெனிந்தியாவை சேர்தவர்களாக தான் இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களுடைய comfort levelஐ பொறுத்த விசியம், இதில் என்ன தவறு இருக்கிறது.

Anonymous said...

///திறமை எங்கிருந்தாலும அவர்களை தூக்கி வைத்து கொண்டாடும் நம் ஆட்களை போல மற்ற மாநிலத்தவரும் நம் ஆட்களின் திறமைகளை மதித்து வாய்பளித்தால் இன்னும் நன்றாக இருக்குமே..?//

இளையாராஜா, ஏ.ஆர்.ரகுமான், மணிரத்தினம், pc sriram, மணிகண்டன், ரவி கே சந்திரன், கே.வி.ஆனந்த் போல் இன்னும் பல டெக்னிசியன்களை மற்ற மாநிலம் தலையில் தூக்கி வைத்து கொண்டு தான் இருக்கிறது

Anonymous said...

//மலையாள,கன்னட ஆட்கள் சினிமாவில் அடிக்கும்கூத்து ரொம்ப நாளா நடக்குறதுதானே!! புதுசா?!?!?//

நல்ல எண்ணையை ஊத்துங்க, பத்தி எறியட்டும்

வால்பையன் said...

//சில வருடங்களுக்கு முன் சுமார் இருபது நாடார்கள் எலலாம் சேர்ந்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்கள், அதில் இயக்குனர் முதற் கொண்டு முடிந்த வரை எல்லா முக்கிய டெக்னீஷியன்கள் நாடார்களாய் பார்த்து தேர்ந்தெடுத்தார்கள்.//


தக்காலி, நாடாருங்க மட்டும் படம் பார்த்திருப்பானுங்க, அதான் படம் ஓடல, எல்லாரும் படம் பார்க்கனும், ஆனா நாடாருங்க மட்டும் டெக்னீஷியனா இருக்கனுமா!? எந்த ஊர் நியாயம் இது!, சாதி வெறியோட இருக்குறவனுங்களை கூட்டிட்டு போய் காயடிக்கனும், அப்புறம் அவனுக்கு கொழந்தை பிறக்காது, சாதிவெறியும் வளராது!

Anonymous said...

வெளிநாட்டு தமிழ் பதிவர்கள், இந்திய நாட்டு பதிவர்களை மதிப்பதில்லை. சென்னை பதிவர்கள் மதுரை பதிவர்களை கண்டு கொள்வதில்லை. கோவை பதிவர்கள் சுயநலமிக்கவர்கள்ன்னு ஆளுக்கு ஒரு தலைப்பை எடுத்துட்டு தூள் கிளப்புங்க

Romeoboy said...

என்னுடைய ஆதங்கள் எல்லாம் இங்கே சொன்னால் அது வேறு மாதிரியான எதிர்வினையை சந்திக்க வேண்டி வரும். அதனால் நானும் உள்ளேன் ஐயா என்று சொல்லி விடைபெறுகிறேன்..

எம் அப்துல் காதர் said...

பொதுவாக இங்கேயும் (சவுதியில்) மலையாளிகளின் உள்நாட்டு ஒற்றுமை ரொம்ப பிரசித்தம். அவர்கள் மொழிகள் பேசும் எல்லா சாதியினரையும் அரவணைத்து கொள்கிறார்கள் என்பதே!

Kousalya Raj said...

ஒரு நல்ல கருத்து மோதலாக பின்னூட்டங்கள் இருந்தது. அனைவருக்கும் வந்தனம்

ILA (a) இளா said...

//தவிர்த்திருக்கலாம்/
ரிப்பீட்டு

மதன்செந்தில் said...

என்ன கொடுமை சார்.. நீங்க போய் மலையாள படம் எடுத்தா மலையாள டெக்னீஷியன் வச்சுக்குவிங்களா?? நீங்க மட்டும் தமிழன் தமிழன்னு பேசனும் மலையாளத்தான் பேச கூடாதா?/ அவனுக்கு இருக்க உணர்வு உங்களூக்கு இல்லன்னு வேனா சொல்லுங்க.. தமிழன் தான் தமிழனுக்கு உதவுறது இல்லை மத்த எல்லா மொழிக்காரனும் அவன் மொழிக்காரனுக்கு உதவுறான்.. பக்கத்துல 1 லட்சம் பேர் செத்தப்போவே கிரிக்கெட் பார்த்தவன் நம்மாளு/..நமக்கென்ன தகுதி இருக்கு அடுத்தவனை குறை சொல்ல...

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

ஐயா சங்கர்,

கணினி துறையிலும் அவர்கள் அப்படித்தான் நடந்து கொள்கின்றனர். மலையாளிக்கு வேலை தெரியலனா கூட விட்டு கொடுக்கமாட்டங்க.

sriram said...

யூத்து
தயவு செய்து இந்த இடுகையைத் தூக்கிடுங்களேன்..
“வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு” ”கறந்த பால்” என்றெல்லாம் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்.

ஜாதி, மத, இன, மொழி, நாடு - எந்த துவேஷமும் தமிழ் வலையுலகில் வேண்டாமே...

நீங்க உங்க மன வருத்தத்தை மட்டுமே பதிவு செய்ததாகச் சொன்னாலும் இதை படிக்கும் எந்த ஒரு மலையாளிக்கும் வலிக்கும். மேலும் கமல் - இளையராஜா - பாப்பான்னு விவாதம் வேறெங்கோ போகுது..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

joe vimal said...

//என்ன கொடுமை சார்.. நீங்க போய் மலையாள படம் எடுத்தா மலையாள டெக்னீஷியன் வச்சுக்குவிங்களா?? நீங்க மட்டும் தமிழன் தமிழன்னு பேசனும் மலையாளத்தான் பேச கூடாதா?/ அவனுக்கு இருக்க உணர்வு உங்களூக்கு இல்லன்னு வேனா சொல்லுங்க.. தமிழன் தான் தமிழனுக்கு உதவுறது இல்லை மத்த எல்லா மொழிக்காரனும் அவன் மொழிக்காரனுக்கு உதவுறான்.. பக்கத்துல 1 லட்சம் பேர் செத்தப்போவே கிரிக்கெட் பார்த்தவன் நம்மாளு/..நமக்கென்ன தகுதி இருக்கு அடுத்தவனை குறை சொல்ல...
//
முழுவதுமாக ஒத்துபோகிறேன் .மலையாளிகள் ஒருபோதும் அவன் பங்காளிகளை விட்டுகொடுபதில்லை அனால் தமிழன் இன்னும் நண்டு போலவே காலை வாரிவிட்டுகொண்டிருகிறான் .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நல்ல வேலை படம் ஓடாததால் அடுத்த படம் தயாரிக்கவில்லை. இப்படி பட்ட நிலை உருவாகாமல் தடுக்க ஜாதி, இன, மத துவேஷத்தை அட்லீஸ்ட் திரை துறையிலாவது தவிர்ப்போமே..//

நல்ல வேலை இப்போ ஜாதி பெயரில் படம் வருவது கூட நின்னு போச்சு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நல்ல வேலை படம் ஓடாததால் அடுத்த படம் தயாரிக்கவில்லை. இப்படி பட்ட நிலை உருவாகாமல் தடுக்க ஜாதி, இன, மத துவேஷத்தை அட்லீஸ்ட் திரை துறையிலாவது தவிர்ப்போமே..//

நல்ல வேலை இப்போ ஜாதி பெயரில் படம் வருவது கூட நின்னு போச்சு

ரவி said...

//ஜாதி, மத, இன, மொழி, நாடு - எந்த துவேஷமும் தமிழ் வலையுலகில் வேண்டாமே..//

குறைந்தபட்சம் புறக்கணிப்பை வெளியில் சொல்லலாமே ?

ஷர்புதீன் said...

என்னவோ போங்க கேபிள்ஜி., நல்லதே நடக்கட்டும்...

Jack said...

துவேஷம் வளருதுன்னு சொல்லிக்கிட்டு எத்தனை நாள் உண்மையை மறைத்து கொண்டு இருப்பீர்கள்? சிலரின் 'எல்லாரும் சமம்' போன்ற மனப்பான்மைதான் அவர்களுக்கு சாதகம். பின்னூட்டங்களில் கொஞ்சம் அதிகமா பொங்கி இருக்கிற சிலரோட மூலத்தை தேடினால் கேரளாவில் கொண்டு போய் விடும். ஆனா நம்ம ஆளுங்க என்று கூறி நம்மோடு சேர்ந்து கொள்வார்கள். இது போன்ற ஆட்களை முதலில் இனம் கண்டு கொள்ள வேண்டும்.