Posts

Showing posts with the label best web series of 2018

2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் மற்றும் வெப் படங்கள் – ஒரு பார்வை-1

ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒர் புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இண்டர்நெட்டின் வளர்ச்சியால் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் சாட்டிலைட் சேனல் உரிமை வியாபாரம் மிகப் பெரிய கேள்விக் குறியாய் இருக்கும் நேரத்தில், ஸ்ட்ரீமிங் உரிமை எனும் இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை கொஞ்சம் ஆசுவாசத்தை கொடுத்திருக்கிறது. படங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது போலவே,  வெப் சீரீஸ்கள் எனும் புதிய கதவு திறந்திருக்கிறது. வழக்கம் போல இந்தி பெரிய மார்கெட் என்பதால் அனுராக் காஷ்யப், விக்ரம் மோத்வானி, போன்ற பெரும் தலைகள் எல்லாம் சடுதியில் அதன் சூட்சுமத்தைப் பிடித்து பெரும் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறார்கள்.  மற்ற மொழிகளில் வழக்கம் போல பட்ஜெட் மற்றும் வெப் சீரீஸ்களைப் பற்றிய கண்டெண்ட் அறியாமைகளோடு, களம் இறங்கியிருக்கிறார்கள். இதில் பெரும் கை நெட்ப்ளிக்ஸ் என்றாலும், இந்திய அளவில் பெரும் முதலாளி அமேசான் ப்ரைம் தான். இவர்களுடன் பாலாஜி டெலி பிலிம்ஸின் ஆல்ட் பாலாஜி, ஸ்டாரின் ஹாட் ஸ்டார், கலர்ஸின் வூட், சன் நெட்வொர்க...