Posts

Showing posts with the label நடு நிசிக் கதைகள்

நடுநிசிக் கதைகள் -7

நடுநிசிக் கதைகள் -7 வடபழனி சிக்னல் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வழக்கம் போல போலீஸ் டிடி செக்கிங். பத்து மணி வாக்கில் முதல் கஸ்டமரை பிடிக்க படையோடு காத்திருந்தார்கள். முதல் களபலியாய் ஒர் டிவிஎஸ் 50க்காரர் வந்து மாட்ட, அவரும் அவரது வண்டியும் பார்க்கவே பாவமாய் இருப்பதாகவும், அவரிடம் ஏதும் தேறாது என்று ப்ரீத் அனலைசர் வைத்திருந்த சார்ஜெண்ட் சொன்னதால் உடனடியாய் விடப்பட்டார். இதற்குள் இரண்டு மூன்று பேர் மாட்ட, சார்ஜெண்டை தாண்டிக் கொண்டு போய் நிறுத்தி, தனியாய் கட்டிங் வாங்கிக் கொண்டு, அனுப்பிக் கொண்டிருந்தனர் சக போலீஸார்கள். கொஞ்ச நேரம் கவனித்துப் பார்த்தால் அவர்களின் டார்கெட் கார் தான் என தெரிந்தது.  அப்போது ஒர் குவாலிஸ் வர, வண்டியை மறித்த போலீஸ்காரர் கதவை திறக்கச் சொன்னார். 

கொத்து பரோட்டா - 20/01/14 -நடு நிசிக் கதைகள், Lucia, Dedh Ishqiya, புத்தக கண்காட்சி.

நடு நிசிக் கதைகள் -5 கட்டங்கடைசியாய் நானும் என் ஹீரோ தமனும் படம் பற்றி பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். வழக்கம் போல உதயம் தியேட்டர் அருகில் போலீஸ் செக்கிங். இளைஞரான போலீஸ் ஒருவர் அமைதியாய் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பேப்பர்களையும், லைசென்சையும் கேட்டார். கொடுத்தேன். தண்ணியடித்திருக்கிறோமா இல்லையா? என்பதை கண்டுபிடிக்க மரியாதையாய் குனிந்து பேசுவதைப் போல  வாடை பிடித்தபடி பேசினார். லைசென்சையும் வண்டி ஆர்.சியையும்  விளக்குக்கு அருகில் கொண்டு போய் ஒர் நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். திரும்ப பேப்பரை கொடுக்க வந்த போது “என்ன நோட் பண்றீங்க?” என்று கேட்டேன். உங்க வண்டி நம்பர், அட்ரஸ், எல்லாம் என்றபடி உங்க செல் நம்பர் சொல்லுங்க என்றார். நான் எதுக்கு? என்றேன். :”இல்ல வாங்க சொல்லியிருக்காங்க” “அதாங்க எதுக்கு கொடுக்கணும்?. நீங்க பேப்பர் கேட்டீங்க கொடுத்திட்டேன். அட்ரஸ் நோட் பண்ணிட்டீங்க அது கூட ஓகே..  லைசென்ஸ் ஓகே.. ஆனா போன் நம்பர்ங்கிறது அதுவும் செல் நம்பர்ங்கிறது ப்ரைவசியான ஒரு விஷயம். அதை எப்படி நீங்க எல்லா பேப்பரும் சரியா இருக்கிற ஆளுகிட்ட கேட்பீங்க. நான் என...

நடு நிசிக் கதைகள் - 3

நண்பர் ஒருவரின் பார்ட்டி. போலீஸ் கெடுபிடியினால் எல்லோரும் விரைவாக கிளம்ப, நடந்து செல்லும் தூரத்திலிருந்தவர்களும், வேறொருவரின் வண்டியில் பிரயாணப்பட இருக்கும் ஆட்களைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரு விதத்தில் இந்த கெடுபிடி கூட நல்லதே என்று தோன்றியது. நேரம் ஆக ஆக வாதம் விவாதமாகி குடுமிப்பிடி சண்டையாகிப் போகும் நிலைக்கு பல சமயம் இந்த கெடுபிடி புல்ஸ்டாப் போடுகிறது.

நடு நிசிக் கதைகள் -2

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர் நடு இரவில் மேற்கு மாம்பலத்தில் உள்ள உதவி இயக்குன நண்பரை அவரின் அறையில் விட்டு விட்டுப் போக எண்ணி வழக்கமான ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கமான ரோடு என்றால் போலீஸ் செக்கிங் இல்லாத ரூட். வழக்கமாய் இரவு நேரங்களில் லேக் வியூ ரோடு சந்திப்புக்களில் செக்கிங் இருக்கும் அதனால் அதற்கு முன்பே போஸ்டல் காலனியில் புகுந்து ஜூவன் ஸ்டோரின் வழியாய் அவர்களுக்கு முன்னால் உள்ள தெருவில் போய் சேர்ந்துவிடுவோம். இது நாள் வரை எல்லாம் சுகமாகவே போய்க் கொண்டிருந்த வேளையில் விதி விளையாடியது.

நடு நிசி கதைகள்-1

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர் நண்பர் ஒருவர் சினிமாக்காரர். செட் வேலை போய்க் கொண்டிருந்தபடியால் ஜாலியாய் பேசிக் கொண்டிருந்தோம். டாஸ்மாக் பற்றியும் சமீபகாலமாய் நடந்து வரும் இரவு நேர டி.டி செக்கிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தெந்த ஏரியாவில் எங்கெங்கு செக்கிங் நிற்பார்கள்? போலீஸ்காரர்கள் பேசும் முறை பற்றியும் காமெடியாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை போத்தீஸ் அருகே காரில் செல்ல, வழக்கமாய் அங்கே செக்கிங்கிற்கு நிற்கும் போலீஸ் எல்லா வண்டியையும் மறித்து, பைக்குகளை ஒரு பக்கமாகவும், கார்களின் கதவுகளை இறக்கச் சொல்லி கிட்டே வந்து “எங்க போறீங்க?:” என்பது போன்ற அபசகுன கேள்விகளை கேட்டு குடித்திருக்கிறார்களா? இல்லையா? என்று செக் செய்வது வழக்கம். அன்றும் அதே ரொட்டீன் தான். நான் வேண்டுமென்றே காரில் சத்தமாய் பாட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்க, கிட்டே வந்த போலீஸ் காரர் கதவை இறக்கச் சொன்னார்.