Posts

Showing posts with the label foodie

சாப்பாட்டுக்கடை- Madras Paya House- Annanagar East - Lunch Spl Post

Image
 இந்தக் கடையைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறேன். மிக சகாயமான விலையில் தரமான சுவையோடு மைலாப்பூர் மற்றும் கிண்டியில் சின்ன கடையாய் ஆரம்பித்திருந்தார்கள்.  இப்போது இவர்கள் அண்ணாநகரில் ரெஸ்டாரெண்டாக தங்களுடய முதல் கிளையை திறந்திருக்கிறார்கள். ஏற்கனவே இவர்களது பேமஸ் அயிட்டமான பெப்பர் பாயா, இட்லி, தோசை, மட்டன், சிக்கன் வகைகள் மட்டுமில்லாமல் வெஜிட்டேரியனில் இவர்களது வெஜ் ஸ்டூ வேற லெவலில் இருக்கும் மதிய சாப்பாடு மட்டும் இவர்களிடம் பெரும் பாலும் நான் பார்சல் வாங்கித்தான் சாப்பிட்டிருந்தேன். எனக்கு எப்போது சாப்பாடு பரிமாறப்பட்டு சாப்பிட்டாலே ஒழிய அத்தனை திருப்தி இருக்காது. அதனால் இவர்களின் சாப்பாடு பற்றி எழுதாமலேயே இருந்தேன். இப்போது நல்ல ஏசி ரெஸ்டாரண்ட் ஆகிவிட்டபடியால் தலைவாழை இலை போட்டு சாப்பாடு போட்டார்கள். சரி சாப்பிட்ட அயிட்டங்களுக்கு வருவோம். ரெண்டு மூன்று நண்பர்களாய் போனதால் எல்லா அயிட்டங்களையும் ஒரு கை பார்க்க தயாராக இருந்தோம். கலந்த சாதத்தில் எலுமிச்சை சாதமும், உடன் தொட்டுக் கொள்ள உருளை காரக் கறி கொடுத்திருந்தார்கள். எலுமிச்சை சாதத்தில் நன்கு தாளிக்கப்பட்டு, வேர்கடலையெல்லாம் போ...