தமிழர்கள் எமோஷனல் க்ரூக்ஸா?
தமிழர்கள் எமோஷனல் க்ரூக்ஸா ஒரு ரெண்டு நாள் ஷோசியல் மீடியாவில் இல்லாமல் இருந்தா தான் தெரியும் தேவையில்லாம எதுக்கெல்லாம் நாம பொங்கிட்டிருக்கோம். அதைப் பத்தி மக்கள் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்காங்கன்னு என்றதுக்கு நண்பர் என்னை சங்கிக்களில் ஒருவராய் அடையாளம் கண்டு கொண்டதாய் சொல்லிப் போனார். இப்படித்தான் அறம் படத்தை பார்த்துவிட்டு வந்த போது. நண்பர்கள் படம் எப்படி என கேட்க” ஓகே” என்றதுக்கு ஒரு நல்ல படம் வந்தா அதைக் கொண்டாடுங்க.. அதை விட்டுட்டு நொட்டை சொல்லாதீங்க என்றார். நல்ல படமாய் இருந்தா நிச்சயம் சொல்லுவேன் நண்பா என்றதுக்கு பேஸ்புக்கைப் பாருங்க எப்படி கொண்டாடுறாங்க என்று உதாரணம் காட்டினார். ஆகாயத்தில ராக்கெட்டை பறக்க விடற நாம பூமியில குழியில விழுந்த குழந்தையை காப்பாற்ற முடியலை இந்த அரசாங்கத்தினால.. ஏழைகள் உயிர்னா அவங்களுக்கு அவ்வளவு ஏளனம்? என ஆரம்பித்து சாதி, அடையாளங்களோடு இணைத்து வீர ஆவேசமாய் பேசினார். நான் அமைதியாய் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “நயந்தாரா மட்டும் அந்த படத்துல இல்லைன்னா இவ்வளவு பெரிய அங்கீகாரம் இல்லை. நான் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுறீங்களா?” என...