Lust Stories
Lust Stories செக்ஸுவல் உணர்வு சார்ந்த கதைகளை தமிழில் எடுத்தால் பெரும்பாலும் ஹிப்போக்கிரேட் ஷோஷியல் மீடியா சூழ் உலகில் அவைகளை பிட்டுப்படங்களாய் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் உலக சினிமாவென்றால் அதே பிட்டுக் காட்சிகள் பிரஸ்தாபிக்கப்படும். இந்தியாவின் பெரும் மக்கள் தொகையை டார்கெட் செய்து இரண்டு வெளிநாட்டு ஓ.டி.டி ப்ளாட்பார்ம்களான நெட்ப்ளிக்ஸும், அமேசானும் தங்களது கண்டெண்டுகளால் இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. பெரிய நடிகர்கள் ஃபீல் குட் படங்களில் நடிப்பதில்லை. சிறிய நடிகர்கள் நடித்த ஃபீல் குட் படங்கள் ஓடுவதில்லை. ரெண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இந்திய சினிமாவுக்கு இந்த ப்ளாட்பார்மகள் பெரும் வரப்பிரசாதம். லவ் பர் ஸ்கொயர் ஃபீட், போன்ற படங்கள் மூலம் நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல் படங்கள் சீரீஸை ஆரம்பித்திருக்க, இன்னொரு பக்கம் அமேசான், தமிழ், தெலுங்கு நடிகர்களை வைத்து கிட்டட்தட்ட மசாலா படம் லெவலுக்கு படங்களையும் சீரீஸ்களையும் இறக்குகிறது. நெட்ப்ளிக்ஸ் தேர்ந்த கலைஞர்களுடன் கைகோர்த்து சமீபத்தில் அளித்திருக்கும் ஒரிஜினல் படம் தான் இந்த “லஸ்ட் ஸ்டோரீஸ்”. காமம் சார்ந்த க...