Posts

Showing posts with the label kamal

விஸ்வரூபம் தமிழ் சினிமாவை அழித்துவிடுமா?

விஸ்வரூபம் படத்தை வெள்ளித்திரை வெளியீட்டிற்கு முன் டிடிஎச்சில் வெளியிடப்போவதாய் சொன்ன நேரத்திலிருந்து தமிழ் சினிமா உலகமே அல்லோல கல்லோலப் படுகிறது. இனி சினிமா அவ்வளவுதான். தியேட்டர்கள் முடங்கி விடும். தொழில் படுத்துவிடும் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிறைய தயாரிப்பாளர்கள் சின்ன படங்களுக்கு இனி வாழ்க்கையே இல்லை என்கிறார்கள். தியேட்டர் அதிபர்களோ இனி நாங்கள் தியேட்டர்களை மூடிவிட்டு போய்விட வேண்டியதுதான் என்று புலம்புகிறார்கள். இன்னொரு பக்கம் வெளிப்படையான அறிக்கை விடாவிட்டாலும் இதனால் வரும் லாபக் கணக்கை பல தயாரிப்பாளர்கள் போட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.

கமலின் அடுத்த படம் A WEDNESDAY...?

Image
கமல தன் அடுத்த படமாக எடுக்க சமீபத்திய சூப்பர் ஹிட்டான ஹிந்தி படமான “A Wednesday" யின் ரைட்ஸை வாங்கியிருப்பதாக தெரிகிறது. ஒரு புதன்கிழமை அன்று ஒட்டு மொத்த மும்பையையும் ஒருவனது பிடியில் வைத்திருந்து, பார்க்கும் நம் மனதை ஒட்டுமொத்தமாக அள்ளிய படம். ஒரு சூப்பர் திரில்லர். இந்த படததில் நஸ்ருதீன் ஷா நடித்த கேரக்டரில் கமலும், அனுபம் கேரக்டரில் மம்முட்டியும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வரவில்லை.. அந்த அறிவிப்பு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கும் உலகளாவிய “உலகநாயகனின்” ரசிகர்களில் ஒருவன். டிஸ்கி இது எனக்கு கிடைத்து வந்த் செய்தியல்ல இங்கிருந்து வந்தது..