Posts

Showing posts with the label Thaliban

கொத்து பரோட்டா 15/10/12

Image
நான் தான் மலாலா என்று  மொத்த பாகிஸ்தானில் உள்ள பெண்கள் தலிபானுக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். யார் இந்த மலாலா? பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் என்ற மாநிலத்தில் உள்ள மிங்கோரா எனும் இடத்த்தில் ஒன்பதாவது படிக்கும் மாணவி. 2009ல் தலிபானால் பெண்கள் படிக்கக் கூடாது என்று தடை விதித்த காலத்தில் தடை விதித்த தலிபான்களை ஆட்சியை எதிர்த்து பிபிசிக்காக உருது மொழியில் ப்ளாகில் பெண்களின் கல்விக்காக எழுதியிருக்கிறாள்.அந்த கட்டுரைக்காக பாகிஸ்தான் அரசு, முதல் National Youth Peace Prize கொடுத்து கவுரவித்து இருக்கிறது.  அவளை எழுதக்கூடாது என்று அவளுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் தலிபான்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்த்தில் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த மாநிலத்தில் தலிபான்கள் மீது அட்டாக் செய்து அவர்களை ஒழித்துவிட்டதாக பிரகடனப்படுத்த, மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த மலாலாவின் பள்ளி வேனை ஒருவன் வழிமறித்து, ‘யார் இங்கே மலாலா? சொல்லாவிட்டால் எல்லாரையும் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டி, மலாலாவை கண்டுபிடித்து அவளது தலையிலும், கழுத்திலும் சுடப்பட்டாள். அவளுடன் மேலும் இரண்டு பெண்கள்...