Posts

Showing posts with the label மக்களை ஏமாற்றும் மால்கள்/தியேடட்ர்கள்

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள் /மால்கள் -4

சரி மால்களில் மட்டும்தான் இம்மாதிரி கொள்ளைகள் என்று நினைத்தால் அது  தவறு. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் உள்ள் ப்ரச்சனைகள் அதை விட அதிகம். அதில் முக்கியமானது டிக்கெட்டின் விலை. மல்ட்டிப்ளெக்ஸிலாவது பரவாயில்லை. அதிகபட்ச கட்டணமாய் 120 என்று அரசு நிர்ணையித்த விலையில் டிக்கெட் தருகிறார்கள். ஆனால் இந்த சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லி மாளாது. சென்னையில் சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களின் அதிகபட்ச அரசு நிர்ணைய விலை 50. குறைந்த பட்ச டிக்கெட் 10. ஆனால் சென்னையை சுற்றியுள்ள, ஜோதி, எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம், காசி, தாம்பரம் வித்யா என்று லிஸ்ட் எடுத்தால் எல்லா தியேட்டர்களிலும் குறைந்த பட்ச டிக்கெட் விலையே 90-120 என்று விற்கிறார்கள். இன்னும் சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படமாய் அமைந்துவிட்டால் 200,300 என்று தான் முதல் மூன்று நாட்களுக்கு. இவர்களிடம் ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து அதிக விலை எம்.ஜி கொடுத்திருக்கிறோம் அதை வசூல் செய்ய வேறு வழி கிடையாது என்பார்கள்.

மக்களை ஏமாற்றும் தியேட்டர்கள்/மால்கள்-3

ஐநாக்ஸ் +கள் சென்னையின் முக்கியமான மால்களில் ஒன்று ஐநாக்ஸ். மொத்தம் நான்கு ஸ்கிரீன்கள். டிஜிட்டல் ஒலி மற்றும் ஒளிபரப்பு என டெக்னிக்கலாய் எல்லா தரமும் உள்ள மல்ட்டிப்ளெக்ஸ்தான். சமீபத்திய 48HFR டெக்னாலஜி உட்பட எல்லா தரத்தையும் அப்கிரேட் செய்திருக்கிறார்கள். 3டி கண்ணாடிகளுக்கு அட்வான்ஸாய் 50 ரூபாய் வாங்கிக் கொண்டு, படம் பார்த்துவிட்டு கண்ணாடியை திரும்பக் கொடுத்தால் பணத்தை திரும்பக் கொடுக்கிறார்கள்.