கள்ளக்காதல்.
ஒவ்வொரு நாளும் தமிழ் தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்த்தால் வயிறு கலங்கித்தான் போகிறது. முக்கியமாய் கொலைகள் பற்றிய செய்திகளை படித்தால் இன்னும் கலங்கித்தான் போகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல். ஏதோ நாடு முழுக்கவும் கள்ளக் காதல் ப்ரச்சனைதான் முதலில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதிலும் தமிழ் தினசரிகளில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றால் உடனே கள்ளக்காதல் ப்ரச்சனையாக இருக்குமோ என்று ஒரு கேள்வி எழுப்பிவிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு மேற்கு மாம்பலத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். போலீஸார் பல விதங்களில் துருவித் துருவி விசாரணை செய்தும் கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினத்தந்தியோ.. கொலை நடந்த நாள் முதல் கள்ளக்காதல் ப்ரச்சனை, போனில் பேசினார்கள். தொடர்ந்து தொடர்பிலிருந்தார்கள். என்று மக்களுக்கு பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.