Posts

Showing posts with the label A.V.K வீட்டு சாப்பாடு

சாப்பாட்டுக்கடை - A.V.K. வீட்டு சாப்பாடு.

சாலிகிராமத்தில் பிரசாத் லேப்புக்கு பக்கத்து ரோட்டின் வழியாய் வடபழனி நூறடி ரோடுக்கு போகிறவர்கள் எல்லோரும் அந்த ரோட்டின் முனைக்கு வரும் போது மோப்பம் பிடிக்க ஆர்மபித்துவிடுவார்கள். முக்கியமாய் அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு பூனை மீனின் வாசத்தை சரியாய் கண்டுபிடித்துவிடும் என்பதைப் போல சட்டென ஒரு கணம் நின்று பார்த்துவிட்டுத்தான் போவார்கள் இந்த ஏ.வி.கே வீட்டு சாப்பாட்டுக்கடையை.