Posts

Showing posts with the label story

"யானை கொம்பனும் ஏதோ ஓரு ......யபாரதியும்..

Image
எனக்கென்னவோ அவ்வளவு ஆர்வம் இல்லாதது மாதிரி காட்டிக்கொண்டேன்.. யாராவது பார்த்துவிட்டால்.. “யாரும் பாக்கமாட்டாங்கடா..” என்றான் சேகர்.. எங்கள் குருப்புக்கு வஸ்தாது..பார்த்தால் சோனியாய் இருப்பான், ஆனால் செய்கிற வேலையெல்லாம் சோனி டிவிமாதிரி பெரிசாத்தான் இருக்கும். நான், சேகர், சண்முகம் ஆகிய மூவரும் ரொம்ப நெருக்கம்.. நானும்,சண்முகமும் ஓரே ஏரியா...ஆனால் சேகர் தண்டையார்பேட்டை..அவனிடம் ஓரு வசீகரம் இருந்த்து.. கதை அவனை பற்றியல்ல.. நாங்கள் மூவரும் முதல் முதலாய் பிட்டு படம் பார்க்க போக ப்ளான் செய்த்தை பற்றி தான் . எனக்குன்னு என்னுடய் செட்டில் சுமாராய் படிப்பவன் என்ற இமேஜ் இருந்ததால், நான் இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தெரிந்தால், “வதனி” என்ன நினைப்பாள் என்றெல்லாம் தோண்றியது. அதையெல்லாம் சேகரிடம் சொல்லவில்லை..தீவரமாய் ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் கணக்காய் சுற்று வட்டாரத்தில் எங்கெல்லாம் அந்த மாதிரி தியேட்டர் இருக்கிறது என்ற லிஸ்டை தயார் செய்தோம்.. என் காலேஜிலிருந்து பக்கத்தில் இருந்த்து அனகாபுத்தூர் அங்கே ஓரூ தியேட்டர், அலந்தூர், என்று பக்கத்தில் உள்ள தியேட்டரை எல்லாம் லிஸ்ட் எடுத்து.. ராமகிருஷ்ணா போகலாம் என்று ...