கேபிளின் கதை பற்றி ஒர் சிறு உரையாடல்
பல வருடங்களுக்கு முன்பு.. அது ஒரு முன்பனிக் காலம். சேலத்தின் என் பெற்றோர் வீட்டில் இருந்தேன், சேலம் ஏற்காடு அடிவாரம் அருகில் அமைந்த ஊர் அது. உடல்நிலை சரியில்லாத என் அப்பாவிற்கு பால் வாங்க பூத்திற்கு போன என் அண்ணன் அவசரமாக வீட்டுக்கு ஓடி வந்து காபி போட பால் தந்துவிட்டு, பதறியபடி சொன்ன நியூஸ் “பிரபல ரவுடி” ஆட்டோ சங்கர் தூக்கிலடப்பட்டு விட்டான் அவன் உடல் சென்றா வேனை நான் மிக அருகில் செர்ரி ரோடு அருகில் பார்த்தேன் என்றான். அவன் சுஜாதா வாசகர் அன்று “ஆட்டோ சங்கர்” என்ற அந்த “சரித்திர புகழ்’ பெற்ற பெயர் தந்த திடீர் அதிர்ச்சி, பயம், சஸ்பென்ஸ், திரில் இதையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகு ‘கேபிள் சங்கர்” என்கிற மாஜிக் பெயர் எனக்கு தந்து கொண்டே இருந்தது, இருக்கிறது.