Posts

Showing posts with the label tamilfilm review

சொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்

Image
காதலுக்கு புது டெபனிஷன் கொடுத்திருக்கும் படம். காதல் ஒரு முறைதான் வரும், காதலுக்காக உயிரையே கொடுக்கணும், போன்ற விஷயங்களையே சொல்லி வந்த சினிமாக்களின் மத்தியில், காதல் என்பது ஒரு நல்ல உணர்வு, இன்று ஒரு பெண்ணை பார்க்கிறோம், அது தோல்வியாகிவிட்டால் நாளை வேறு ஒரு பெண்ணை பார்த்தால் காதலிக்க மாட்டோமா..? அது தானே நிதர்சனமான வாழ்க்கை என்பதை இந்த கால இளைஞர்களின் பார்வையில் ஒரு யூத் பெஸ்டிவலே நடத்தியிருக்கிறார் இயக்குனர். நவ்தீப், அபினவ், சத்யன், மற்றும் சில நண்பர்கள் ஒன்றாய் கூடும் டீக்கடையின் எதிர்வீட்டில் பம்பாயிலிருந்து ஒரு பெண் வருகிறாள்., பார்த்தவுடன் சட்டென நவ்தீப்புடன் ஒட்டிக் கொள்கிறாள்.. சென்னையை சுற்றி காட்ட சொல்கிறாள், கனவில் கூட வந்தாய் என்கிறாள், அவளின் காதலை சொல்லும் நவ்தீபபை, நிராகரிக்கிறாள். தான அவ்விதமாய் பழகவில்லை.. ஒரு நண்பியாகத்தான் பழகினேன் என்று சொல்லி விலகுகிறாள். நவ்தீப்பும் காதலை மென்று முழுங்கி நிற்க, அடுத்து அடுத்து அவன் சந்திக்கும், பெண்கள் ஆளுக்கொரு காரணம் சொல்லி அவனை நிராகரிக்க, இப்படி போகும் வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு காதல் அவனுக்கு மல்லிகா கபூர் மூலம் அமைய வாழ்க்கை ...

இந்திரவிழா – திரைவிமர்ச்னம்

Image
  கமல், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை நம்பி படமெடுக்கலாம் ஒப்பனிங் நிச்சயம் அதே போல ஒரு ஹீரோயினையும் நம்பி படமெடுக்க முடியுமா  என்று கேட்டால் அதுக்கு பதில் நமிதா என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கமலா தியேட்டரில் இருந்த 300 பேர் நமிதா ஒருவருக்காகத்தான் வந்திருந்தார்கள். ஒரே விசில் தான். டெமிமூர், மைக்கேல் டக்ளஸ் நடித்து மிகப்பெரிய ஹிட்டான “Disclosure” என்கிற படத்தை ஹிந்தியில் 2004ல் “Aitraaz” என்று எடுத்தார்கள். அதைதான் இப்போது தமிழ் படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய மான லைனே.. ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ. என்பதுதான். டெமிமூருக்கு ஈக்குவலாய் நமிதாவை தவிர வேறு யாரையும் நினைக்கு வ்ரமாட்டேன் என்கிறது.  சரியான செலக்‌ஷன்.  படம் முழுக்க நினைந்தபடியே வந்து நம்மை சூடாக்குகிறார். படத்தில் அவரது ஒவ்வொரு பாகமும் நடித்து கொட்டுகிறது. ம்ஹும்… இவரை தவிர இன்னொரு சரியான செலக்‌ஷன் ஸ்ரீகாந்த. . அவர் என்ன செய்வார் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாசர் கோடீஸ்வர நமிதா புருஷனாய் வருகிறார். சில இடங்களில் ஓவராய் இருந்தால...

வாமனன் - திரைவிமர்சனம்

Image
சுப்ரமணியபுரம் ஜெய் சோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் படம் வாமனன். படம் வெளிவருவதற்கு முன்னாலேயே தான் நடிக்கும் படங்களில் இந்த படம் ஒன்றுதான் நல்ல படம் என்று அறிக்கை விட்டு மாட்டிக் கொண்ட படம். ஒரு திரில்லர் வகை படம். பிகினி உடையில் லட்சுமிராயை ரிமோட் கண்ட்ரோல் ஹெலி கேமரா மூலம் படமெடுத்து கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். திடீரென்று ஹெலிகாப்டர் ரிப்பேர் ஆகி பக்கத்தில் உள்ள ஒரு கார்டனில் மரத்தில் மாட்டி கொண்டுவிட, அங்கே வருங்கால முதல்மைச்சராய் வர இருக்கும் டெல்லி டகணேஷை, சம்பத்ராஜ் ஒரே ஒரு ஆளுடன் கொலை செய்கிறார் அது அந்த டேப்பில் ரிக்கார்ட் ஆக, அந்த டேப்பை தேடி போலீஸும், அமைச்சரும் அலைய, அந்த டேப் லட்சுமிராயிடம் இருப்பதாய் போலீஸும், அமைச்சரின் ரவுடிகளும் அலைய, ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்கிறார்கள். சினிமாவில் நடித்து பெரிய ஆளாகவேண்டும் என்று சென்னைக்கு வரும் ஜெய் இந்த களேபரத்தில் மாட்டிக் கொள்ள, டேப் இவனிடம் மாட்டிக் கொள்ள,  லஷ்மிராயின் கொலையில் பழி இவன் மீது வந்து ஓட, போலீஸ் துரத்த, ஒரு முறை திரும்பி பார்த்து எதிர்த்து, எவ்வாறு சூழ்ச்சியிலிருந்து வெல்கிறான் என்பதை, பரபரப்ப...

ராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்

Image
டைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம். ராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..???. இப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார்.  வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள். குத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி..  முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்..  சூப்பர். இப்படியே காம்னா, கத்...

சர்வம் - திரைவிமர்சனம்

Image
இயக்குனர் விஷ்ணுவர்தனின் பில்லாவுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம். பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்த படம். சர்வம். மனிதனின் வாழ்க்கையில் ஒரு நொடியில் நடக்கும் சம்பவங்கள் அவர்களின் வாழ்கை பாதையையே மாற்றிவிடும். அப்படி மாறும் நேரத்தில் அவர்கள் வாழ்க்கையை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதே கதை. ஒரு விபத்தில் தன் மனைவியையும், குழந்தையும் பறிகொடுத்த ஈஸ்வர், அந்த விபத்துக்கு காரணமானவரின் பத்து வயது இதய நோய்  பிரச்சனையுள்ள பையன். தன் மகனை இழந்ததால் உன்னையும் உன் மகனையும் பிரிப்பேன் என்று அந்த பத்து வயது சிறுவனை கொல்ல அலையும் ஈஸ்வர்.  ஒரு சக்ஸஸ்புல் ஆர்கிடெக் கார்த்திக், அவன் துறத்தி, துறத்தி காதலிக்கும் டாக்டர் சந்தியா.. இவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவம் எப்படி ஒரு இணைப்பு உருவாகி அந்த பத்து வயது சிறுவனை ஈஸ்வரிடமிருந்து காப்பாற்ற கார்த்திக் போராடுகிறான் என்பதை வெள்ளிதிரையில் பாருங்கள்.   முதல் பாதி முழுவதும் இரண்டு கதைகளாய் பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு ஒரு கோட்டில் பயணிக்கிறது. முதல் பாதி முழுவதும் கார்த்திக்குக்கும், சந்தியாவுக்கும் இடையே நட...

கார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்

Image
பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \படத்தின் பூஜையின் போது வெளியிட்ட டிசைன் கண்டிப்பாய் வித்யாசமாய் ஒரு படமாய் இருக்கும் என்று கட்டியம் கூறியது. அதன் பிறகு படத்தின் போஸ்டர் டிசைன் மேலும் வா,, வா… என்று அழைக்க, தியேட்டரில் நான். கார்த்திக்கும் அனிதாவும் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள், சிறு வயதிலிருந்தே சேர்ந்தே எலியும் பூனையுமாய் இருப்பவர்கள். கார்த்திகின் அப்பா கோட்டா சீனிவாசராவ் எதிர்வீட்டு அனிதாவின் அம்மாவை தங்கையாய் பாவிக்க, இருவர் குடும்பமும் உறவு முறை சொல்லி அழைக்கும் அளவுக்கு ஒற்றுமையான குடும்பம். கார்த்திக் அனிதா இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி சண்டைகளில், ஒருவரை ஒருவர் வாரி விட்டு கொண்டிருக்க, ஒரு நிலையில் அனிதாவால் கார்த்திக் காலேஜில் ச்ஸ்பெண்ட் செய்யப்படுகிறான். இந்த இடைப்பட்ட நிலையில் அனிதாவுக்கு கார்த்திக்கின் மேல் காதல் வர, கார்த்திக் அவளை காதலித்தானா.. அனிதாவுக்கு நிச்சயத்த திருமணம் நடந்ததா.? கார்த்திக்கின் அப்பா ஏன் திடீரென்று இற்ந்து போனார் என்பதை வெள்ளிதிரையில் காண்க. கார்த்திக்காக வரும் ரத்தன் நல்ல எதிர்காலம் இருக்கிற...

1977 - திரைவிமர்சனம்

Image
ஒரு கிராமமே கொண்டாடும் பெரியவர் ஒருவர், அந்த கிராம மக்களுக்கு தெரிந்து ஊரை விட்டு வெளியே போகாதவர், ஒரு நாள் திடீரென ஒரு தினசரியில் வந்த படங்களை பார்த்துவிட்டு ஊரை விட்டு போக நினைக்கிறார். ஆனால் இறந்து போகிறார். அவர் எங்கே போக நினைத்தார்?, எதனால..? என்பதை தேடி அலைய ஆரம்பிக்கிறான் மகன். போக, போக தெரிகிறது தன் தந்தை 108 பேரை கொன்ற ஒரு கொலை குற்றாவாளியென்றும், தூக்கு தண்டைனையிலிருந்து தப்பித்துவிட்டவர் என்றும். தன் தந்தையின் கடந்த காலத்தை கண்டுபிடித்து, அவர் மீது உள்ள பழியை தீர்பதே கதை. இதை படிக்கும் போது அட பரவாயில்லையே ஒரு மசாலா படத்துக்கு தேவையான எல்லா விஷயங்களும் உள்ள  கதைதானே என்று நினைப்பவர்களுக்கு.. கதையாய்  சொல்லும் போது நல்லாத்தானிருக்கு.. படம்.. ம்ம்ம்..ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பாவம் சரத்குமார் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், ரொம்ப நாளாக, சொந்த படமே எடுக்க கூடாது என்று நினைத்து கொண்டிருந்த போது, இயக்குனர் தினேஷ் குமார் சொன்ன கதை என்னை படமெடுக்க வைத்துவிட்டது என்று. என்ன பண்றது..? விதி அப்படிதான் சொந்த செலவில சூனியம் வச்சிக்க சொல்லும்.. இந்த கதைக்கு எதுக்க...

யாவரும் நலம் – திரைவிமர்சனம்

Image
ரொம்ப நாளாச்சு தமிழ்ல ஹாரர் படம் பார்த்து..   அதிலும் நம்ம பி.சி, மாதவன், பிக் பிக்சர்ஸ் என்று பெரிய தலைகள் எல்லாம் ஒன்ணு சேர்ந்திருக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுது.. அந்த எதிர்பார்பை ஓரளவுக்கு பூர்த்தி பண்ணியிருக்காங்னுதான் சொல்லணும். புதுசா தன் மனைவி, அண்ணன், அண்ணி, அவர்களின் இரண்டு குழந்தைகள், தங்கை, அம்மா என்று எட்டு பேர் கொண்ட கூட்டு குடும்பம் பதிமூன்றாம் மாடியில் உள்ள 13பி என்கிற ப்ளாட்டை விலைக்கு வாங்கி குடியேறுகிறார்கள். ஆனால் மாதவன் மனதில் மட்டும் ஒரு சின்ன கிலேசம் ஏற்படுகிறது.. அதிலும் அந்த லிப்ட் மேட்டரிலிருந்து, அதன் பிறகு செல்போனில் அவரை எடுக்கும் போட்டோ.. என்று ஆரம்பித்து,, அவர்கள் வீட்டில் மட்டுமே வரும் ‘யாவரும் நலம்’ என்கிற சீரியலில் நடக்கும் விஷயங்கள் எல்லாமே அவருடைய வாழ்கையிலும் நடக்கிறது. முதலில் நம்ப மறுக்கும் அவர், பின்னால் நடக்கும் சம்பவங்கள் மூலம் விஷயம் உறுதியாக. தன் போலீஸ் நண்பன் மூலம் சால்வ் செய்ய முயல்கிறார். நிஜமாகவே பேய் இருக்கிறதா..? எதனால் இவருடய வீட்டை மட்டும் தாக்குகிறது,? பேய்களிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறாரா..? எ...

தீ – திரைவிமர்சனம்

Image
ஒரே மாதத்தில் 30,000 ஹிட்ஸுகளை கொடுத்த, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நமீதாவை எதிர்பார்த்து போனால் ஆம்பளை நமீதா போல் நிர்வாணமாய் வருகிறார் சுந்தர்.சி. முதல் காட்சியிலேயே அரண்டு போக வைத்து விட்டார்கள். அதற்கு அப்புறம் எப்படி படம் பார்க்கிறது? எதை பார்த்தாலும் மிரட்சியாவே தெரியுது. வழக்கமான விஜயகாந்த பாணி போலீஸ் ரவுடி அரசியல்வாதி பிரச்சனைதான். ஒன்றும் புதுசாய் இல்லையென்றாலும், பிரசண்டேசனிலாவது ப்ரெஷாக கொடுக்க முயற்ச்சித்திருக்கலாம், தெலுங்கு படம் போல சரக், சரக் கென்று எபெக்ட் போட்டு நம்மை பயமுறுத்துகிறார்கள். கட்சி தலைவர் சாயாஜி ஷிண்டே என்கிறார்கள், ஆனால் முதலமைச்சர் வேறு எவரோ.. அவர் கட்சி கெட்ட எம்.எல்.ஏ ஜி.எம்.குமார். இவரகள் இருவரும் சேர்ந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்களாம்.  இந்த லட்சணத்தில் இவர்களின் கட்சி முக்கிய முடிவுகள் எல்லாவற்றையும் எடுப்பது, பிரபல நடிகை ருச்சிதேவி. அதாங்க நம்ம நமீதாதான். இவங்க எல்லாம் கெட்டவங்களாம், ஆனா முதல்மைச்சர் மட்டும் ரொம்ப நல்லவராம். ஸ்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணை கட்டுதே.. சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராம், அவர...

நான் கடவுள் - திரைவிமர்சனம்.

Image
தற்போதைய வியாபார தமிழ் சினிமாவில், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்கையை இவ்வளவு தத்ரூபமாய் படமெடுக்கும் தைரியம் பாலாவுக்கு தவிர வேறு யாருக்காவது வருமா என்பது சந்தேகமே.. உடல் ஊனமுற்ற, மனநிலை பிழன்ற, வயதான, பிச்சைகாரர்களின் வாழ்கையில் உள்ள ஆழ் சோகத்தையும், வேறு வழியில்லாமல் தங்களுடய கதி இது தான் என்று ஏற்றுக் கொண்டு, அதற்குள் சந்தோஷமா இருக்க முயற்சிப்பதும், என்று அவர்க்ளின் வாழ்கையை நம் கண்முன்னே அவர்களை அறிமுகப்படுத்தும் முதல் காட்சியிலேயே நம்மை கதிகலங்க வைத்துவிட்டார் பாலா. சிறு வயதில் ஜோசியர்களின் பேச்சை கேட்டு காசியில் விட்டுவிட்டு வரப்பட்ட ருத்ரனை தேடி அவனின் அப்பாவும், தங்கையும், காசியில் அலைவதில் ஆரம்பிக்கிறது கதை. ருத்ரன் பிணங்களுடன் வாழும் ஒரு அகோரனாய் மாறியிருக்க, தன்னையே கடவுள் என்று சொல்லி கொள்ளும், எதிரில் வருபவர்கள் நல்லவனா, கெட்டவனா என்று அறியும் ஆற்றல் பெற்றவனாய் ஆங்காரமாய், ஓங்காரத்தோடு நிற்கிறான் ருத்ரன். அவனை தன்னுடன் அழைக்க, ருத்ரனின் குரு போய் எல்லா பந்தங்களையும் அறுத்து வா.. நீ வர வேண்டிய நேரத்தில் உன்னை அழைக்கிறேன் என்று கூறி அனுப்பி வைக்கிறார். கண் தெரியாத நன்றாக பா...

அ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்

Image
தெலுங்கில் சந்தமாமா என்று சுமாரய் ஓடியபடம். நவ்தீப்பும், சிவபாலாஜியும் நடித்து இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய படம். அதை ரீமேக் செய்திருக்கிறார்கள்.. இந்த படத்தில் என்னத்தை கண்டுவிட்டார்கள் என்று அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த படத்தில் ஒரு பாடல் முழுவதும் முத்தத்தை வைத்து ஒரு சூடான டூயட் எடுத்திருப்பார்கள்.. தமிழில் அதை காணோம். தன் தாயில்லாத ஒரே மகள் மீது மிகுந்த அன்பை வைத்திருக்கும் அப்பா பிரபு, தன் மகளுக்கு கல்யாண வயது வந்துவிட்டதால் அவளை பிரியவும் கூடாது, அதே சமயத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையையும் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில், பக்கத்திலேயே ஒரு அராத்து பணக்காரனின் மகனான இளங்கோவை தேர்ந்தெடுக்கிறார்.நிச்சயமும் செய்துவிடுகிறார்கள். அப்போது மோனிகா, அரவிந்திடம் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்ததாகவும், அவன் தன்னை பயன்படுத்திவிட்டு போய்விட்டான் என்கிற குண்டை போட, அதிர்ந்து போன அரவிந்த, அவனை தேடி கண்டுபிடிக்க, இதற்கிடையில் மோனிகாவின் தங்கை, அரவிந்தை காதலிக்க.. என்று குழப்படியாய் போகிறது. படம் முழுவதும், ஒவ்வொரு ப்ரேமிலும் முப்பது பேராவது இருக்கிறார்கள். அதிலும் பிர...