Thottal Thodarum

May 19, 2009

ராஜாதிராஜா – ஒரு பின்நவீனத்துவ திரைவிமர்சனம்

rajathi-raja-stills-1

டைட்டிலிலேயே லோகிளாஸ் கிங் என்று சொல்லிவிட்டதால் அதையும் மீறி படத்தில் அது நொட்டை இது நொட்டை என்று சொல்வது சாமி குத்தமாகையால் நொட்டை சொல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம்.

ராஜா தன் தந்தையின் ஆசைபடி.. தன்னுடய அண்ணன்களை டாக்டர், வக்கீல், போலீஸ் என்று படிக்க வைத்து பெரிய ஆளாக்குகிறார். ஆனால் அவர்கள் பெரிய ஆள் ஆகி சைதை சைலஜாவின் அல்லக்கைகலாய் இருந்து வ்ருவது தெரிந்து கொதித்தெழுந்து அவர்களை அழித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே கதை..???.

rajathi-raja-stills-11

இப்படி தமிழ் சினிமாவின் பின் நவீனத்துவ படமாய்தான் எனக்கு படுக்கிறது.. ஏனென்றால் நிறைய இடங்களில் சமகால தமிழ் சினிமாவை கட்டுடைத்திருக்கிறார்.  வழக்கமாய் அண்ணன் தான் தன் தம்பிகளுக்காக, தான் படிக்காமல் தன் தம்பிகளை படிக்க வைத்து ஏமாறுவார். ஆனால் இந்த படத்தில் தம்பி அண்ணன்களை படிக்க வைக்கிறார். இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.
mumtaj-043009-43

குத்தாலத்தில் கும்மாங்குத்து பெண்ணாய் நம்ம அடக்க ஒடுக்க மீனாட்சி..  முழுசாய் காட்டவில்லை அவ்வளவு தான். ம்ஹூம்.. ம்ஹூம்..  சூப்பர். இப்படியே காம்னா, கத்தாழ கண்ணாலே ஸ்னிகிதா என்று எல்லோருமே படம் பூராவும் கட்டுடைத்திருக்கிறார்கள்.
mumtaj-043009-48

லாரன்ஸ் தன்னை ஒரு ரஜினி ஜெராக்ஸ் என்றே நினைத்து கொண்டு இம்சை படுத்தி கட்டுடைக்கிறார். கருணாஸ் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லியா ஒல்லி மும்தாஜ்.. அவரது தமில் நல்ல கிக்.  ஆவூன்னா பொடவைய உருவிட்டு, உருவிட்ட உடம்பை காட்டிட்டி நிக்கிறது  ஷோக்காக்கீதுபா.. படம் முழுக்க எபக்ட் காரர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள் உஷ். புஷ். என்று ஒரே சத்தம் கொடுத்து.
 mumtaj-043009-27

இயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும்,  படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.

டிஸ்கி:

பின்நவீனத்துவம், கட்டுடைத்தல் போன்ற எழவுகள் என்றால் என்ன..? என்று கேட்பவர்களுக்கும்  ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் ஒரு வழமையை தவிர்த்து அதற்கு எதிராய் செய்வது. சமீப காலமாய் நல்ல படங்களாய் வந்து கொண்டு இருக்கும் காலத்தில் மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய் அதையே புதிதாய் கட்டுடைத்து கொடுப்பது தான் .. என்ன எழவுடா.. எனக்கே ஒண்ணும் புரியல.. 

பசங்க படத்துக்கு இருந்த கூட்டத்தை விட இந்த நவீன பின்நவீனத்துவ படத்துக்கு நல்ல கும்பல். நம்ம மக்களும் பின் நவீனத்துவக்காரர்கள் ஆயிட்டாங்க..


Post a Comment

38 comments:

அன்பேசிவம் said...

ஹா ஹா ஹா

Sukumar said...

தலைவா..இந்த படத்தோட டிரைலரையே டிவியில் பாக்க முடியல... நீங்க எப்படிதான் தியேட்டர்ல பொறுமையா உக்காந்து பாக்குறீங்களோ தெரியல... இதுக்கே உங்களுக்கு ஒரு ஆஸ்கார் அவார்ட் தரலாம்.....

Jackiesekar said...

நல்லா காட்டி இருக்காங்கன்னு சொல்லறிங்க அப்புறம் ஏன் கூட்டம் வராது?????

ravichandran said...

//online 24 user//

:):):)

anbuaran said...

மிஸ்டர் cableshankar (மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய்) ரஜனி படங்களை குடும்பத்தோடு பார்க்கலாம் என்பது உலகுக்கே தெரியும் கிடைக்கும் இடத்தில எல்லாம் ரஜனியை குறை கூற வேண்டாம் . அப்படி என்றால் நீங்கள் எம்ஜிஆரையும் சொல்ல வேண்டும் .

சுந்தர் said...

சும்மா சொல்ல கூடாது, படம் உண்மையிலே சூப்பர்., ஹி, ஹி,,நான் நீங்க போட்டுருக்க படத்தை சொன்னேன்.

முரளிகண்ணன் said...

அடுத்தும் இதே போல் ஒரு கட்டுடைப்பு படம் தயாரிப்பில இருக்காமே (நா. அ. இ)

kalil said...

தல விமர்சனத்த விட டிஸ்கி கிண்டல் அருமை .......

Anbu said...

\\Sukumar Swaminathan said...

தலைவா..இந்த படத்தோட டிரைலரையே டிவியில் பாக்க முடியல... நீங்க எப்படிதான் தியேட்டர்ல பொறுமையா உக்காந்து பாக்குறீங்களோ தெரியல... இதுக்கே உங்களுக்கு ஒரு ஆஸ்கார் அவார்ட் தரலாம்.....\\

repeat

Cable சங்கர் said...

///ஹா ஹா ஹா

நல்லா சிரிக்கிறாங்கடா..??

Vilvaraja Prashanthan said...

அட நம்ம சக்திசிதம்பரத்துட படமா??? அப்ப கண்டிப்பா பின்நவீனத்துவ படமாகதன் இருக்கும் .
அவர்தான் இந்தியாவிலையே முதல் முதல் விஞ்ஞான புனைக்கதை (science fiction) படம் எடுத்தவர் தெரியுமா??? அதான்பா நம்ம s.j சூரியா நடிச்ச வியாபாரி படம் இவர்தன்னுங்கோ இயக்கினது.. குளோனிங் குழந்தை ஆடு குட்டி போடுறமாதிரி தோப் என்றுதான் விழும் என்று கண்டுபிடித்தவர் அண்ணாததான்..... அது மட்டும் இல்ல அந்த படம்தான் இந்தியாவிலையே முதல் முதல் விஞ்ஞான புனைக்கதை (science fiction) படமாம் என்று வேற இவன்ட வாயலையே வெட்கம் இல்லமா சொன்னவன்.....
படத்தின் பாடல் வரிகள் போரரசுவாமே?? நல்ல பொருத்தம்.. வாழ்க தமிழ் சினிமா.. வளர்க நம் இயக்குனைகளின் சிந்தனை

Sukumar said...

நம்ம இயக்குனர் பாலச்சந்தர் தெரியாத்தனமா லாரன்சை பார்த்து....."இவன்தான் அடுத்தா ரஜினின்னு" பத்து வருஷத்துக்கு முன்ன சொல்லிட்டார்... ஏதோ அறியாத வயசுல தெரியாம சொல்லிட்டார்னு விடாம, இந்த லாரன்ஸ் ரஜினி மாதிரி பண்ற அட்டகாசம் இருக்கே .....

butterfly Surya said...

இந்த மாதிரி கண்ராவியையெல்லாம் எப்படி தான் பொறுமையா பார்க்கறீங்களோ..???

டூ மச் கேபிளாரே..

விரைவில் பத்து லட்சம் ஹிட் பெற வாழ்த்துகள்.

ஷண்முகப்ரியன் said...

ஆழ்ந்த அனுதாபங்கள் ஷங்கர்.

Ashok D said...

//இப்படி ஆரம்பித்த கட்டுடைத்தல்கள், பல இடங்களில் உடைஅவிழ்த்தல் என்று பின்னி பெடலெடுக்கிறார்கள்.// //ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் ஒரு வழமையை தவிர்த்து அதற்கு எதிராய் செய்வது//
நச்... அப்படியே கலகம்,பிறழ்வுன்னு சேத்துருக்கலாம்.
கேபிளாரின் லொள்ளு விமர்சனம்.

அக்னி பார்வை said...

இந்த படத்த விமரிசனம் செய்ய கூட பார்த்தே தப்பு

raja said...

Anda kala MGR padangalil illadha masalava palaya rajini padangalil ulladhu. Solla ponal MGR padangalil than nadigaigal avuthu pottu varuvargal. Rajini padangal kudumbathudan shenru parthutu varalam. Thaangal vendum enrey rajiniyai thakka vendum endru ninaithu eludhugireergal

இராகவன் நைஜிரியா said...

:)

மணிகண்டன் said...

இந்த பட அறிமுகத்துக்கு நன்றி. நிச்சயமா பாக்கறேன். இது போன்ற பின் நவீனத்துவ படங்களை நாம் ஆதரித்தால் தான் பிற்காலத்தில் தமிழ் சினிமா வழமை அடையும். மறுபடியும் நன்றி கேபிளார் உங்கள் சேவைக்கு !

அத்திரி said...

present anna

Cable சங்கர் said...

//தலைவா..இந்த படத்தோட டிரைலரையே டிவியில் பாக்க முடியல... நீங்க எப்படிதான் தியேட்டர்ல பொறுமையா உக்காந்து பாக்குறீங்களோ தெரியல... இதுக்கே உங்களுக்கு ஒரு ஆஸ்கார் அவார்ட் தரலாம்.....//
தரலாம்தான் சுகுமார்.. யாரும் தரமாட்டேங்கிறாங்களே..

Cable சங்கர் said...

//நல்லா காட்டி இருக்காங்கன்னு சொல்லறிங்க அப்புறம் ஏன் கூட்டம் வராது?????

//

ஒரு பின்நவீனத்துவ படத்தை இப்படி கேவலமா காட்டினாங்கனுசொல்லகூடாது ஜாக்கி..

Cable சங்கர் said...

//மிஸ்டர் cableshankar (மீண்டும் பழைய ரஜினி பட மசாலாவுக்கு போய்) ரஜனி படங்களை குடும்பத்தோடு பார்க்கலாம் என்பது உலகுக்கே தெரியும் கிடைக்கும் இடத்தில எல்லாம் ரஜனியை குறை கூற வேண்டாம் . அப்படி என்றால் நீங்கள் எம்ஜிஆரையும் சொல்ல வேண்டும் .

//

சரி சேத்துக்கங்க..

Cable சங்கர் said...

//சும்மா சொல்ல கூடாது, படம் உண்மையிலே சூப்பர்., ஹி, ஹி,,நான் நீங்க போட்டுருக்க படத்தை சொன்னேன்.

//

ஹி..ஹி.. உங்க சந்தோஷமே என் சந்தோஷம்..

Cable சங்கர் said...

//அடுத்தும் இதே போல் ஒரு கட்டுடைப்பு படம் தயாரிப்பில இருக்காமே (நா. அ. இ)

//

ஆமாம் தலைவரே மூச்சு விடாதீங்க..

Cable சங்கர் said...

////online 24 user//

:):):)

//

எல்லாம் உங்க மாதிரியான வாசகர்களின் தயவுதான் ரவிசந்திரன்.. மிக்க நன்றி

Cable சங்கர் said...

//தல விமர்சனத்த விட டிஸ்கி கிண்டல் அருமை .......

//

நன்றி கலீல்.. அன்பு ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

// குளோனிங் குழந்தை ஆடு குட்டி போடுறமாதிரி தோப் என்றுதான் விழும் என்று கண்டுபிடித்தவர் அண்ணாததான்//

அந்த படம் முன்நவீனத்துவ படம். அப்படித்தான் இருக்கும்..அண்ணே..

Cable சங்கர் said...

//நம்ம இயக்குனர் பாலச்சந்தர் தெரியாத்தனமா லாரன்சை பார்த்து....."இவன்தான் அடுத்தா ரஜினின்னு" பத்து வருஷத்துக்கு முன்ன சொல்லிட்டார்... ஏதோ அறியாத வயசுல தெரியாம சொல்லிட்டார்னு விடாம, இந்த லாரன்ஸ் ரஜினி மாதிரி பண்ற அட்டகாசம் இருக்கே .....

//

அவரு எப்பவுமே இப்படிதான் மைக் கிடைச்சுதுன்னா பாராட்டிட்டே இருப்பாரு.. இவர்ங்களுக்கு தெரியவேணாம்.

Cable சங்கர் said...

//டூ மச் கேபிளாரே..

விரைவில் பத்து லட்சம் ஹிட் பெற வாழ்த்துகள்//

ஏதோ என்னாலான சேவையை செய்கிறேன். வண்ணத்துபூச்சியாரே..

இந்த மட்டுக்கும் என்னை பார்த்து அனுதாபபடுறீங்களே அதுவே பெரிய விஷயம்.. ஷண்முகப்பிரியன் சார்.

Cable சங்கர் said...

//நச்... அப்படியே கலகம்,பிறழ்வுன்னு சேத்துருக்கலாம்.
கேபிளாரின் லொள்ளு விமர்சனம்.
//

அடடா விட்டுட்டேனே.. அடுத்த முறை சேர்த்துவிடுகிறேன்.

Cable சங்கர் said...

//இந்த படத்த விமரிசனம் செய்ய கூட பார்த்தே தப்பு//

இல்லாட்டி நீங்க் பாட்டுக்கு சத்யம்ல டிக்கெட் புக் பண்ணி கிளம்பிடுவீங்களே அதுனாலதான்.

Cable சங்கர் said...

//Anda kala MGR padangalil illadha masalava palaya rajini padangalil ulladhu. Solla ponal MGR padangalil than nadigaigal avuthu pottu varuvargal. Rajini padangal kudumbathudan shenru parthutu varalam. Thaangal vendum enrey rajiniyai thakka vendum endru ninaithu eludhugireergal//

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. அரம்பிச்சிட்டாங்க..

Cable சங்கர் said...

//இந்த பட அறிமுகத்துக்கு நன்றி. நிச்சயமா பாக்கறேன். இது போன்ற பின் நவீனத்துவ படங்களை நாம் ஆதரித்தால் தான் பிற்காலத்தில் தமிழ் சினிமா வழமை அடையும். மறுபடியும் நன்றி கேபிளார் உங்கள் சேவைக்கு //

நன்றி மணிகண்டன், அத்திரி.. ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்

Cable சங்கர் said...

வருகைக்கும், ஸ்மைலிக்கும் மிக்க நன்றி இராகவன்.

அது சரி(18185106603874041862) said...

//
இயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும், படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.
//

ஷங்கர்,

நீங்கள் பின்நவீனத்துவத்தை முற்றிலும் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...மாராப்புகளை காட்டினால் அது முன் நவீனத்துவமே தவிர, பின்நவீனத்துவம் ஆகிவிடாது...சீலேவின் முன்நவீனத்துவ பிதாமகர் உஸ்சாகியே பிஸ்காபி கோமாங்கோவின் "பின் நவீனத்துவ சரித்திரமும், பிரதாப முதலியார் முத்தமும்" புத்தகத்தை படித்து விட்டு பேசுங்கள்...

பின்புறத்தை காட்டினால் மட்டுமே அது பின்நவீனத்துவம் என்று அவர் உறுதிபட நிறுவியிருப்பார்... :0))

உதாரணத்திற்கு குசேலன் குறித்து எனது விமர்சனத்தை படிக்கலாம்...(சுய விளம்பரமும் பின் நவீனத்துவமே!)

http://muranthodai.blogspot.com/2008/08/blog-post.html

டிஸ்கி: இது சும்மா கும்மி...சீரியஸா எடுத்துக்கிட்டு ஆட்டோ அனுப்பிராதீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல படம் தல....,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எல்லாமே நல்ல படங்கள்தான் தல.. நான் ராஜாதிராஜா, பசங்க ரெண்டையும் சொன்னேன்