Thottal Thodarum

May 11, 2009

நிதர்சன கதைகள்-7- காளிதாஸ்

Drunken_Nights_by_Dan14Lev

காளிதாஸுக்கு போதை ஏறிவிட்டால பாட்டு பின்னியெடுப்பார். டாஸ்மாக் மூடும்வரை அவரை சுற்றி ரசிகர் பட்டாளம் ஏறிக் கொண்டேயிருக்கும். இன்றைக்கும் அப்படித்தான் மனுஷன் ஆரம்பித்துவிட்டார். ‘காயாத கானகத்தே” என்று, சுருதி சுத்தமா ஹைபிட்சில் எடுக்க ஆரம்பித்தார்.

காளிதாஸ் ஒரு ஆர்கெஸ்ட்ரா அமைப்பாளர்.  நானும்  ஒரு ஆர்கெஸ்ட்ரா ‘சங்கமம்’ என்கிற  பெயரில் நடத்துகிறேன்.  இந்த ஆர்கெஸ்ட்ராவின் மொத்த உறுப்பினர்கள்  நானும் என் ஆர்கெஸ்ட்ரா பேனர்  மட்டும்தான்  மற்றவர்கள் எல்லாம் ஒவ்வொரு கச்சேரிக்கும் காளிதாஸிடம் சொல்லிவிட்டால் கிடாரிஸ்ட், டிரம்ஸ், கீ போர்டு மேல் சிங்கர், ஃபீமேல் சிங்கர், எல்லாரையும் நம் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் அசெம்பிள் செய்துவிடுவார். கச்சேரியை ஏற்பாடு செய்ததற்கு ஒரு அமெளண்டும், மற்ற ஆட்களிடமிருந்து ஒரு அமெளண்டும்  கட்டிங் போட்டு விடுவார். குறைந்தது ஒரு சின்ன கல்யாண கச்சேரிக்கு அயிரமாவது தேறும்.  வரும் மாதம் திடீரென ஒரு வெளியூர் கச்சேரி அதற்கு ஆள் பிக்ஸ் செய்யணும் அதனால் காளிதாஸை அழைத்து சொல்ல, அவரை  வடபழனி டாஸ்மாக்கிற்கு வர சொல்லியிருந்தேன். அங்கே அவரை கவனித்தால் ரொம்பவும் ஃபீல் பண்ணி, நல்ல சிங்கர்களையும், கீ போர்ட் ஆளையும் தேடிப்பிடித்து சீப்பாய் பேசி முடிப்பார். கொஞம் அமெளண்டை அட்ஜஸ்ட் செய்யலாம். காயத கானகத்தே வை முடித்திருந்தார்.

”அண்ணே.. என்னா வாய்ஸ்ண்ணே.. உங்க முன்னாடி நானெல்லாம் பாடறேன்னு சொல்றதே அதிகபிரசிங்த்தனம். தண்ணியடிச்சு கூட சுருதி சுத்தமா பாடறீங்களே.? என்று அவரை புகழ்ந்தேன். நிஜமாகவே பல சமயம்  அவரது இசை ஞானத்தை கண்டு பிரம்மித்திருக்கிறேன்.

”அடிசாத்தாண்டா சுருதி சுத்தமா வரும். நான் பாக்காத பாடகனாடா..?  ராஸ்கல். அடியை பின்னிவிட்டுருவேன்” மப்பு ஏறிவிட்டால் அன்பு ஜாஸ்தியாகிவிடும்.

“இப்ப பாடறவனெல்லாம் என்னா பாடறான். சேர்ந்தாப்புல இரண்டு நிமிசம். தம் கட்டி ஹம்மிங் மட்டும் பண்ண சொல்லேன், முக்கிற முக்கில வேற ஏதாவது வருமே தவிர ஹம்மிங் வராது.  தோ.. இன்னைக்கு பாடறானே.. பப்பு சர்மா...  ரஹ்மான் கிட்ட அவன எல்லோரும் ஆஹா.. ஓஹோன்னு சொல்றீங்க.. ட்ராக் பாடிகிட்டிருந்தான். தம் அடிச்சி அடிச்சி.. ஹைபிட்சுல பாட முடியாம, இருந்தவனை கூப்ட்டு, புத்தி சொல்லி பாட வச்சேன். இன்னைக்கு அவன் எங்கயோ. நான் எங்கயோ.. டேய்ய்.. நீ என் தம்பிடா. . நீயும் நல்லா வருவே..  இன்னொரு குவாட்டர் சொல்லு..: என்று ஆப்பாயிலை லாவகமாய்  லவுட்டி லபக்கினார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. அவருக்கு தெரியாத இசையமைப்பாளர் கிடையாது. நான் நிறைய பல முறை அவருடன் பாடுவதற்காக வாய்ப்பு கேட்டு அலையும் போது பாத்திருக்கிறேன். எவ்வளவு பெரிய இசையமைப்பாளரும் அவருக்கு ஒரு முக்யத்துவம் கொடுத்து பேசுவதை கவனித்திருக்கிறேன்.

“ஏன்ணே.. இவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டரையெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.. உங்க குரலுக்கு நீங்களே ஒரு பெரிய பாடகராயிருக்கலாமில்லண்ணே.?”

அண்ணன் விரக்தியாய் சிரித்து “ ஆயிருக்கலாம். ஆனா விதி விடலையே.. இளையராஜாகிட்ட ரொம்ப நாள் அலைஞ்சு ஒரு முறை சான்ஸ் வந்து கூப்டப்ப..  அப்பெல்லாம் செல்லு ஏது. பக்கத்து வீட்டுக்க்காரன் வீட்டு நம்பரைதான் பி.பி நம்பரா கொடுத்திருந்தேன். அவரு பொண்டாட்டிக்கும்  எனக்கும் கொஞ்ச நாளா லைன் ஓடிட்டிருந்த்து, வயசு பாரு..  நான் அப்ப ஏசுதாஸ் கணக்கா தாடியெல்லாம் வச்சு ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்பேன். விஷயம் அரச புரசலா எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தது. போனை எடுத்தவன் அவ புருஷன். கோவத்துல அவரு வீட்ட காலி பண்ணிட்டாருன்னு சொல்லிட்டான்.  அவன் மட்டும் சொல்லியிருந்தான்னா. இன்னைக்கு நான் எங்கயோ.. என்ன பாட்டு தெரியுமா.?  “சின்ன பொண்ணு சேலை.. செம்பருத்தி போல”  என்று பாட ஆரம்பித்து திடீரென நிறுத்தி, சிரித்து அதுல ஒரு காமெடியென்ன தெரியுமா.  நான் ஓட்டிட்ட்ருந்த பொண்ணு பெரு சின்னப்பொண்ணு. நல்ல கருகருன்னு பாம்பு மாதிரி உடம்பு..  இன்னொரு குவாட்டர் சொல்லேன்.” என்று சொல்லிவிட்டு தனக்குள்ளே சிரித்தார். ஒரு வேளை சின்ன பொண்ணுவை நினைத்திருப்பார் போலும்.

“அண்ணே.. ஏற்கனவே முக்கா அயிருச்சுண்ணே. ஜாஸ்தியாயிருச்சு.”

“அப்ப. வாங்கி தர மாட்டேயில்லை.. நீ என்னடா வாங்கிதர்றது வெண்டர்.. நான் வாங்கறேன்.. டேய்ய்.. தம்பி இங்க வா.. வா.. என்று அவரை கிராஸ் செய்து போன யாரையோ அழைத்து, “ஒரு குவாட்டர் எம்.சி”  என்று பையிலிருந்து நான்கைந்து நூறு ருபாய் நேட்டுக்களை அவரிடம் திணிக்க,

நான் அவரை அனுப்பிவிட்டு காளிதாஸை உட்காரவைத்துவிட்டு போய் வாங்கி வந்தேன். தண்ணி  கலக்காமல் முக்கா கிளாஸுக்கு சரக்கை ஊற்றி ஒரே கல்பாய் குடித்துவிட்டு கிளாஸை வைத்தார். இவரின் திறமைக்கு இவரின் குடிபழக்கம் மட்டுமில்லாவிட்டால் அவருக்கான மரியாதையே தனிதான். என்ன செய்வது சில பேரின் வாழ்க்கையையே பல சமயம் அவர்களின் வீக்னெஸ் புரட்டி போட்டு விடுகிறது. அடுத்த குவாட்டரையும் அடித்து முடித்துவிட்டு, எழுந்து நடக்கக்கூட முடியாத அளவுக்கு குடித்திருந்தார். குழறலாய் ‘ராஜ ராஜ சோழன் நான்” என்று பாடியபடி இருந்தவரை கைத்தாங்கலாய்  வெளியே அழைத்து வந்து  வண்டியில் ஏற்றி விட்டுவிடலாம் என அவரை என் வண்டியில் ஏறச் சொல்லி அவரை அழைத்தேன். நான் சொல்வது காதிலேயே விழவில்லை. பார்கவே பரிதாபமாய் இருந்தது.

“அண்ணே.. கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. நாம வாழ்கையில தோத்துட்டோம்னு குடிச்சு குடிச்சு உங்களையே அழிச்சிக்கிறீங்க.. எவ்வளவோ பேருக்கு உங்களால பெரிய வாழ்க்கை கிடைச்சிருக்கு. உங்களுக்கு இல்லாட்டாலும்.. நாளைக்கு உங்க பசங்களுக்கு உங்களுக்கு  கிடைக்காத வாழ்க்கையை கடவுள் கொடுப்பார்ண்ணே..” என்றவுடன் அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து, “அந்த தேவடியாபையன் அதிலேயும் என்னை ஏமாத்திட்டானே” என்று சொல்லியபடி தரையில் புரண்டு அழ ஆரம்பித்தார். அவரை சமாதானபடுத்தி ஆட்டோ பிடித்து வீட்டில் விட்டுவிட்டு
திரும்பும் போது நானும் கடவுளை அவர் திட்டியது போல் திட்ட வேண்டும் என்று தோன்றியது. காளிதாஸின் ஒரே பையன் செவிட்டு ஊமை.

Kick Telugu Film Reviewவை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

41 comments:

பிரேம்ஜி said...

கதை மிக அருமை.

டக்ளஸ்....... said...

அருமைண்ணே....!

Cable Sankar said...

நன்றி பிரேம்ஜி.. டக்ளஸ் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..

நையாண்டி நைனா said...

அண்ணே... நீங்க இங்கே சொல்லி இருக்கிறது, உண்மை அண்ணே, உண்மை... இங்கே ஊரிலே மும்பையிலே ஒரு மாமனிதர் இருக்கிறார்னே, அவரு பயங்கர புத்திசாலி அண்ணே. அவரு பல பேரை பெரிய மனிதராக ஆக்கி இருக்கிறார் அண்ணே. அவரு கிட்டே இருந்து அறிவை பெற்றவர்கள் எல்லாரும் இன்று மிக, மிக உயர்ந்த நிலையில் அவர் இன்றும் ஒரு சாதாரண வீட்டில் ஆனா அவருக்கு ஒரு மகன் அண்ணே... புத்தி மந்தமாக.

தண்டோரா said...

thats cable akmark kathai

நட்டு said...

நல்ல கதை

முரளிகண்ணன் said...

யோசிக்க வைக்கிறது

D.R.Ashok said...

நிதர்ஸனம் தல... உண்மையின் மிக அருகில்

ரமேஷ் வைத்யா said...

sabaash ejamaan sabaash

" உழவன் " " Uzhavan " said...

சூப்பர்ணா.. இந்த சோகக் கதையிலும் சின்னப் பொண்ணு காமடியை வச்சீங்க பாருங்க.. கலக்கல்

அன்புடன்
உழவன்

அபுஅஃப்ஸர் said...

\தலைப்பே சொல்லுது உங்க வரிகளை படித்தவுடன்

நல்ல எழுத்தோட்டம்

Joe said...

நகைச்சுவையாக சென்ற கதையின் முடிவில் கனமான சோகம்.

பிரமாதம்.

Cable Sankar said...

//கதை மிக அருமை.//
நன்றி பிரேம்ஜி..

Cable Sankar said...

//அண்ணே... நீங்க இங்கே சொல்லி இருக்கிறது, உண்மை அண்ணே, உண்மை... இங்கே ஊரிலே மும்பையிலே ஒரு மாமனிதர் இருக்கிறார்னே, அவரு பயங்கர புத்திசாலி அண்ணே. அவரு பல பேரை பெரிய மனிதராக ஆக்கி இருக்கிறார் அண்ணே. அவரு கிட்டே இருந்து அறிவை பெற்றவர்கள் எல்லாரும் இன்று மிக, மிக உயர்ந்த நிலையில் அவர் இன்றும் ஒரு சாதாரண வீட்டில் ஆனா அவருக்கு ஒரு மகன் அண்ணே... புத்தி மந்தமாக.

//

அவர் யார் என்றுசொல்லலாமா.. நைனா..?அட்லீஸ்ட் என் மெயிலிலாவது>>/

Cable Sankar said...

//thats cable akmark kathai

//

தலைவரே நமக்குன்னு அக்மார்க் முத்திரையெல்லாம் இருக்கிறதா என்ன..?

Cable Sankar said...

நன்றி நட்டு உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

நன்றி முரளிகண்ணன்.

Cable Sankar said...

//நிதர்ஸனம் தல... உண்மையின் மிக அருகில்//

நன்றி அசோக்..

Cable Sankar said...

//sabaash ejamaan sabaash

//

மிக்க நன்றி அண்ணே.. வசிஷ்டர் பாராட்டு..

Cable Sankar said...

//சூப்பர்ணா.. இந்த சோகக் கதையிலும் சின்னப் பொண்ணு காமடியை வச்சீங்க பாருங்க.. கலக்கல்

அன்புடன்
உழவன்

//

மனித வாழ்க்கையே பல காமெடிகள் அடங்கியதுதானே உழவன்.. மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

நன்றி அபு அப்சர்
நன்றி ஜோ.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

ஷண்முகப்ரியன் said...

அருமை.அருமை,ஷங்கர்.ஒரு அழகிய சிறுகதைக்கான அனைத்து லட்சணங்களும் பொருந்திய கதை.KEEP IT UP.

Cable Sankar said...

//அருமை.அருமை,ஷங்கர்.ஒரு அழகிய சிறுகதைக்கான அனைத்து லட்சணங்களும் பொருந்திய கதை.KEEP //

மிக்க நன்றி சார்..

pappu said...

தல உங்க டச்ச கடைசி பாராவில வச்சிருகீங்க. நான் நாளைக்கு ஒரு கதை ரிலீஸிங். படிச்சு பாருங்கோ!

அத்திரி said...

நல்லாயிருக்கு அண்ணே........ எதிர்பார்க்காத முடிவு......

வண்ணத்துபூச்சியார் said...

Xlent.... அருமை..

சூப்பர் தல..

பிரதீப் பாண்டியன் said...

கதை நல்லாயிருந்தது Cable Sankar அண்ணே...எனக்கு உங்க உலக சினிமா விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.www.babyanandan.blogspot.com இது என் Blog.இப்பத் தான் ஆரமிச்சு இருக்கேன். டைம் இருந்தா வாசிச்சு Guide பண்ணுங்களேன்...

Anonymous said...

super

Anonymous said...

ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

சரவணகுமரன் said...

சூப்பரு...

இராகவன் நைஜிரியா said...

கடைசி வரி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.

மாதவராஜ் said...

உங்களுடைய இரண்டு மூன்று கதைகளைப் படித்தேன். சரளமான நடை. பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரிகிறது. பாராட்டுக்கள்

Cable Sankar said...

//தல உங்க டச்ச கடைசி பாராவில வச்சிருகீங்க. நான் நாளைக்கு ஒரு கதை ரிலீஸிங். படிச்சு பாருங்கோ!

//

கண்டிப்பாய் படிக்கிறேன் பப்பு..

Cable Sankar said...

//நல்லாயிருக்கு அண்ணே........ எதிர்பார்க்காத முடிவு......//
நல்லதுண்ணே. மிக்க நன்றி

Cable Sankar said...

//Xlent.... அருமை..

சூப்பர் தல..//

மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..

Cable Sankar said...

//கதை நல்லாயிருந்தது Cable Sankar அண்ணே...எனக்கு உங்க உலக சினிமா விமர்சனம் ரொம்பப் பிடிக்கும்.அந்தப் படங்களைத் தேடிப் பிடித்து பார்த்துக்கிட்டு இருக்கேன்.www.babyanandan.blogspot.com இது என் Blog.இப்பத் தான் ஆரமிச்சு இருக்கேன். டைம் //

மிக்க நன்றி பிரதீப்.. கண்டிப்பா உங்க பதிவை நான் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

Cable Sankar said...

நன்றி அனானி, சரவணகுமரன்.

Cable Sankar said...

//கடைசி வரி கண்ணில் நீர் வரவழைத்து விட்டது.//

நன்றி இராகவன். எங்க கொஞ்ச நாளா ஆளையே காணோம்.?

Cable Sankar said...

//உங்களுடைய இரண்டு மூன்று கதைகளைப் படித்தேன். சரளமான நடை. பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரிகிறது. பாராட்டுக்கள்

//

மிக்க நன்றி தலைவா.. மேலும் உங்கள் கருத்துக்களை கூறி என்னை வழிநடத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

கோபிநாத் said...

தல..கலக்கல் கதை...கடைசி பத்தி யோசிக்க வைக்குது.

SUREஷ் said...

தல பத்திரிக்கையிலெல்லாம் எழுதறீங்களா...,

Anonymous said...

please vote for tamil people http://internationaldesk.blogs.cnn.com/2009/05/11/monday-poll/