Thottal Thodarum

May 5, 2009

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்

தமிழ் சினிமாவின் 90 நாட்கள் என்கிற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவிற்கு பலத்த வரவேற்ப்பை கொடுத்து ஏன் முப்பது நாட்களுக்கு ஒரு முறை எழுதகூடாது என்று கேள்வி எழுப்பிய லட்சகணக்கான வாசகர்களின்( அடங்கு.. அடங்கு,,) ஏகோபித்த ஆதரவிற்கு இணங்க.. இதோ.. தமிழ் சினிமாவின் 30 நாட்கள்.

ayan-stills-7 அயன்

இம்மாதம் பூராவுமே தமிழ் சினிமா காரர்கள் கொஞ்சம் குழம்பித்தான் போய்விட்டார்கள், தேர்தல், IPL, போன்ற ’திருநா’  கோலாகலங்களால் படங்களை வெளியிட தயங்கி கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் மீறி சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஏவிஎம்மின் ‘அயன்” இந்த  வருட சம்மர் ஸ்பெஷலாய் வெளிவந்தது.  வெளிவந்த முதல் நாள் முதல் படம் ஹிட் என்ற செய்தியை வழக்கம் போல் படம் ரீலீஸாகும் முதல் காட்சிக்கு முன்னமே தங்கள் தொலைக்காட்சியில் போட்டு விளம்பரபடுத்தி கொள்ளூம்  சன் டிவிக்கு அந்த வேலையே செய்ய அவசியமில்லாமல் செய்த முதல் நிஜ  வெற்றி படம்.  இந்த ஒரு மாதத்தில் அவர்களின் மார்கெட்டிங்கின் மூலம் அடைந்த வீச்சு அருமை.
anandha-thandavam-wallpaper07 ஆனந்த தாண்டவம்

அடுத்து வந்த ஆஸ்கர் ரவிசந்திரனின் தயாரிப்பில்,  சுஜாதாவின் கதை வசனத்தில், ஏ.ஆர்.காந்திகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த “ஆனந்த தாண்டவம்” படம் ஒரு சின்ன ஸ்டெப் கூட வைக்காது தாண்டவம் நின்றுபோனது.
karthik-anitha-stills54
கார்த்திக் அனிதா

அதே வாரத்தில் வந்த கார்த்திக் அனிதா  புது முகங்கள், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாள்ர் என்று முக்கால்வாசி பேர் புதுமுகங்களை கொண்டு வெளிவந்த திரைப்படம். படத்தின் விளம்பரத்துக்கும், ஸ்டில் செஸனுக்கும் க்வனம் செலுத்திய அளவுக்கு, இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் கண்டிப்பாய் கவனிக்கபட்டிருப்பார். இயக்குனர்.
kk090209_2 குங்குமபூவும் கொஞ்சும்புறாவும்

குங்குமபூவும் கொஞ்சும் புறாவும்.. வெளிவந்து ஒரு வாரமே ஆகியிருக்கிறது. மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம், பெரிய லெட் டவுன். ஒண்ணூம் சொல்லிக்கும்படியா இல்லை.

மரியாதை

மரியாதை. விஜயகாந்த் நடிச்சு ராஜ்டிவியின் வெளியீட்டில், டி.சிவாவின் தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில், சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ப்டம்.  வழக்கமான விக்ரமன் படம்.பெரிசா மரியாதையா சொல்லிக்கிறா மாதிரி ஒண்ணுமில்லைன்னு கேள்வி..

நாளை நமதே 
மலையாள இயக்குனர் வினயனின் இயக்கத்தில் “நாளை நமதே” என்றும் ஒரு படம் ஜனசேவா என்கிற நிறுவனம் தயாரித்து வெளிவநதிருக்கிற படம். செலவு செய்த பணம் ஜனசேவைக்காக போயிற்று.

இதை தவிர எங்க ராசி நல்ல ராசி என்று தமிழ் சினிமாவின் நிரந்தர யூத் முரளி நடித்து ரவிராஜா என்று இரட்டை இயக்குனர்கள் இயக்கிய ஒரு படமும் வெளிவந்திருக்கிறது.

போன மாதத்திய ஹிட்டுகளான அருந்த்தியும், யாவரும் நலமும், இம்மாதமும் தொடர்கிறது.  ஏப்ரல் மாதத்திய நிலவரப்படி ஆறு படங்கள் வெளிவந்திருக்கிறதுல் அதில் ஒரே ஒரு சூப்பர் ஹிட். அயன்.

Technorati Tags:
Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

32 comments:

வித்யா said...

அயன் மட்டும் தான் பார்த்திருக்கேன் உங்கள் லிஸ்டில். Technically நல்ல படம்.

அக்னி பார்வை said...

அய்யகோ என் தமிழ் சினிமா உலகை யார் காப்பாற்றுவது... 30 நாட்களில் ஒரே நல்ல படமா அத்வு அண்ட்ஹ படம் பல ஆங்கில சினிமாக்களின் காப்பியாயிற்றே...

டக்ளஸ்....... said...

:)

வால்பையன் said...

ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வந்த catch me if you can! படத்தின் கதை தழுவல் தான் “அயன்” என்று சொல்கிறார்களே!

அது என்னமோ தெரியலை தியெட்டருக்கு போய் தமிழ் படம் பார்த்து 4 வருசமாச்சு!

வண்ணத்துபூச்சியார் said...

Quarterly review தான் நல்லாயிருக்கும்.

Monthly OK...

Chill-Peer said...

நாளை நமதே புரட்சி தலைவர் படம் இல்லையா?

ஆதிமூலகிருஷ்ணன் said...

குவார்ட்டர்லி ரிப்போர்ட் மாதிரி சுவாரசியமா இல்லை..

Cable Sankar said...

//அயன் மட்டும் தான் பார்த்திருக்கேன் உங்கள் லிஸ்டில். Technically நல்ல படம்//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. வித்யா..

Cable Sankar said...

//அய்யகோ என் தமிழ் சினிமா உலகை யார் காப்பாற்றுவது... 30 நாட்களில் ஒரே நல்ல படமா அத்வு அண்ட்ஹ படம் பல ஆங்கில சினிமாக்களின் காப்பியாயிற்றே...//

அது ஒண்ணாவது ஹிட் ஆனதே.. அதை நினைச்சு சந்தோசபடுங்க.. அக்னி..

Cable Sankar said...

நன்றி.. டக்ளஸ்.. வால் பையன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

Cable Sankar said...

//Quarterly review தான் நல்லாயிருக்கும்.

Monthly OK...//

ஒகே வண்ணத்துபூச்சியாரே.. ஆதிமூல கிருஷ்ணன்.. அவர்களே.. அடுத்த பதிவு குவாட்டர்லி மட்டுமே.. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி..

Cable Sankar said...

//நாளை நமதே புரட்சி தலைவர் படம் இல்லையா?//

ஆமாம் அதே பெயரில் வந்த புது படம்.. பீர்.. வெய்யிலுக்கு உங்க பேர் இதமாய் இருக்கிறது..:):)

Cable Sankar said...

தமிழில் பீர் என்று எழுதும் போது..:):)

நையாண்டி நைனா said...

தலே.. கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.

I am back.

லக்கிலுக் said...

அயன் தான் சன் பிக்சர்ஸின் முதல் வெற்றிப்படம் என்பது போல இரண்டு மூன்று முறை குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்காதவனை மறந்துவிட்டீர்களோ? இவ்வருடத்தில் பி மற்றும் சி செண்டர்களில் பட்டையைக் கிளப்பிய படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம்! அயன் - ஆல் செண்டர் ஹவுஸ்ஃபுல்!!

மரியாதை கலெக்சன் அடிப்படையில் மரியாதையாக இருப்பதாகவே தெரிகிறது.

பிராட்வே பையன் said...

நல்ல அலசல். உங்களின் விமர்சனம் பார்த்து படம் பார்ப்பதால் எனக்கு
சுகா(திருப்பி படிக்கவும்)மிச்சம்.

நன்றி,

ஹஸன் ராஜா.

ЯR [comicology] said...

உங்கள் லிஸ்டில் அயன் மட்டும் தான் பார்த்த படம்... மற்றவைகளை இனி தான் மேயனும். ஏன் இப்படி வயித்தெரிச்சலை கிளப்புகிறீர்கள் சங்கரே... :)

ஹிட்டு ஹிட்டு என்று கூவி வித்த படிக்காதவன் படத்தை விட டெக்னிக்கலாக அயன் நன்றாக இருந்தாலும், இந்த படமும் மிக சுமார் ரகமே.... சன் டிவியின் ஒரே ஹிட் என்று அவர்கள் மட்டும் தான் மார் தட்டி கொள்ள வேண்டும்.... ஆங்கில படத்தில் அப்பட்ட காப்பி என்று வேறு தகவல் பரவுகிறது.

மொத்தத்தில் இது வரை சன் டிவி படங்கள் ஒன்றும் ரசிக்கும் படி இல்லை. இன்னும் கொஞ்ச நாளில் சன் டிவி படம் என்றாலே சற்று ஒதுங்க வேண்டி இருக்கும் போல.

ரஃபிக் ராஜா காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Anbu said...

super anna

Cinema Virumbi said...

Dear Cable Sankar,

என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நண்பர்கள் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

நன்றி!

சினிமா விரும்பி

pappu said...

அயன் காப்பின்னு சொல்றாங்களே? என்ன நினைக்கிறீங்க. எனக்கென்னவோ சரியில்லைன்னு படுது.

அத்திரி said...

//ஏன் முப்பது நாட்களுக்கு ஒரு முறை எழுதகூடாது என்று கேள்வி எழுப்பிய லட்சகணக்கான வாசகர்களின்//

ஆங்...................... ஹிஹிஹி

Cable Sankar said...

//ஆங்...................... ஹிஹிஹி//

அட நிசமாத்தாங்க அத்திரி.. நம்ப மாட்டேங்கிறாங்கப்பா..

Cable Sankar said...

//அயன் காப்பின்னு சொல்றாங்களே? என்ன நினைக்கிறீங்க. எனக்கென்னவோ சரியில்லைன்னு படுது.

//

நீங்க காப்பின்னு சொல்ற படங்களை பாருங்க பப்பு.. அப்புறம் முடிவு பண்ணுங்க..

Cable Sankar said...

கண்டிப்பாக வருகிறேன் சினிமாவிரும்பி..

Cable Sankar said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ரபிக் ராஜா, அன்பு..

Cable Sankar said...

//அயன் தான் சன் பிக்சர்ஸின் முதல் வெற்றிப்படம் என்பது போல இரண்டு மூன்று முறை குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்காதவனை மறந்துவிட்டீர்களோ? இவ்வருடத்தில் பி மற்றும் சி செண்டர்களில் பட்டையைக் கிளப்பிய படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம்! அயன் - ஆல் செண்டர் ஹவுஸ்ஃபுல்!!

மரியாதை கலெக்சன் அடிப்படையில் மரியாதையாக இருப்பதாகவே தெரிகிறது//

படிக்காதவனுக்கு சன் டிவியின் பில்டப் தேவையாய் இருந்தது.. நீங்கள் சொன்னதை போல அது பி அண்ட் சி செண்டர்களில் நல்ல வசூல்தான். ஆனால் இதெயெல்லாம் எதிர்பார்க்காத.. சூப்பர்ஹிட் அயன் தான் என்பதற்காகத்தான் சொன்னேன்.லக்கி

Cable Sankar said...

//அயன் தான் சன் பிக்சர்ஸின் முதல் வெற்றிப்படம் என்பது போல இரண்டு மூன்று முறை குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்காதவனை மறந்துவிட்டீர்களோ? இவ்வருடத்தில் பி மற்றும் சி செண்டர்களில் பட்டையைக் கிளப்பிய படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம்! அயன் - ஆல் செண்டர் ஹவுஸ்ஃபுல்!!

மரியாதை கலெக்சன் அடிப்படையில் மரியாதையாக இருப்பதாகவே தெரிகிறது//

படிக்காதவனுக்கு சன் டிவியின் பில்டப் தேவையாய் இருந்தது.. நீங்கள் சொன்னதை போல அது பி அண்ட் சி செண்டர்களில் நல்ல வசூல்தான். ஆனால் இதெயெல்லாம் எதிர்பார்க்காத.. சூப்பர்ஹிட் அயன் தான் என்பதற்காகத்தான் சொன்னேன்.லக்கி

Cable Sankar said...

//தலே.. கொஞ்ச நாளா நம்மை படுத்தி எடுத்துட்டாங்க. அதனாலே கொஞ்சம் உங்களை எல்லாம் கவனிக்க முடியாமே போயிட்டு, அதாவது பின்னூட்டம் மூலமா. மற்றபடி பதிவை படிச்சிருவேன்.

I am back.

//

நைனா உன்னை யார் ஆணிபுடுங்க சொன்னாங்கன்னு சொல்லு நைனா ஒரு கை பாத்துடுவோம்.

Cable Sankar said...

//நல்ல அலசல். உங்களின் விமர்சனம் பார்த்து படம் பார்ப்பதால் எனக்கு
சுகா(திருப்பி படிக்கவும்)மிச்சம்.

நன்றி,

ஹஸன் ராஜா.

//

நன்றி பிராட்வே பையா..

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்கப்பு....

வசந்த் ஆதிமூலம் said...

அண்ணா தமிழ் சினிமா பத்தி எழுதி மொக்கை போடாதண்ணா. யதார்த்தத்தை தொலைச்சி ரொம்ப நாளாச்சு தமிழ் சினிமா. வெறுப்பா இருக்கு.
அப்புறம் நல்லா இருக்கியா? 10 ம் தேதி வாரியா? சந்திக்கலாமா?

thevanmayam said...

நல்லா இருக்கு!!
தொடர்ந்து எழுதுங்க!!