Thottal Thodarum

May 21, 2009

பிரம்ம தேவா - திரைவிமர்சனம்

taovlodpgegto0t36k

டாக்டர் ராமிடம் யாரோ தவறாய் சொல்லியிருக்கிறார்கள். பல்லை கடித்து கொண்டு, உடலை முறுக்கி கொண்டு, கண்களை கண்ணுக்கு வெளியே கொண்டு வந்து மிரட்டியபடி பார்த்து நடித்தால் நீங்கள் இன்னொரு விக்ரம், அந்த படம் இன்னொரு அந்நியன் என்றும்.  ஏத்திவிட்டே சொந்த படமெடுக்க வைத்டிருக்கிறார்கள்.

இரண்டு நண்பர்கள், ஒருவரை ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறார்கள், நண்பனின் வீட்டில் ஹீரோவும் ஒரு பிள்ளை போன்றே வளர்ந்து வருகிறான். ஹீரோவுக்கு ஒரு சில பேரை பார்க்கும் போது திடீர் திடீர் என்று வெறி பிடித்து அவர்களை தேடி பிடித்து கொல்கிறான். நடக்கும் கொலைகளை யார் செய்வது என்றே தெரியாமல் போலீஸ் அலைகிறது. இப்படி பட்ட நேரத்தில் ஹீரோ தனது ஆருயிர் நண்பனையே கொலை செய்ய முயற்சிக்கிறான். ஏன்? எதற்கு? என்பதை தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொள்ளவும்.

Brama-Deva-tamil-mp3-songs

படம் ஆரம்பத்திலிருந்து ஒரு குழப்படியான திரைக்கதை, முன் ஜென்மம்,  படு அமெச்சூர்தனமான மேக்கிங்.. என்று ஆரம்ப காட்சி முதலே பின்னி பெடலெடுக்கிறார்கள். dental doctor ராம் தயாரித்து நடித்திருக்கிறார். நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மை இம்சை படுத்துகிறார். அதிலும், முன் ஜென்மத்தில் வரும் கிராமத்தான் சப்பாணி கேரக்டர். தாங்கலடா சாமி. படத்தில் வ்ரும் தேஜாஸ்ரீ மட்டும் தான் ஒகே.

போங்க சார். போங்க.. போய்..  நாலு பேருக்கு பல்லு புடுங்குங்க.. புண்ணியமா போகும்.

டிஸ்கி
இந்த பதிவை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும் இணைப்பவர்களுக்கு ஆயிரம் கட்டி வராகனும், ஷ்ரேயாவுடன் (?) ஒரு நாளூம் அளிக்கப்படும்

Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

39 comments:

Anonymous said...

///ஷ்ரேயாவுடன் (?) ஒரு நாளூம் அளிக்கப்படும்///

athukku intha padathukku oru tikket ethuthu kotukkalaam

செந்தில்குமார் said...

ட்ரைலர் எல்லாம் ரொம்ப அலப்பறை குடுத்தாங்க...??

//ஏன்? எதற்கு? என்பதை தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொள்ளவும். //

ஹல்லோ... இப்படி எல்லாம் சொனன்னா.. நாங்க படம் பாத்துடுவோமா ?? நாங்கெல்லாம் ரொம்பவே வெவரமானவங்க.. அதான் கேபிள் சங்கர் படம் பாத்து சொல்லுவார்ல... அதுல நாங்க ரெம்பவே உஷாராகிடுவோம்..

வண்ணத்துபூச்சியார் said...

இந்த மாதிரி படம் பார்த்து பதிவிட்டால் என்ன பின்னூட்டம் இடுவது சங்கர நாராயணன்..

உங்களுக்கு யாராவது நித்தம் சினிமா டிக்கெட் இலவசமா கொரியர் அனுப்பறாங்களா..??

எங்க எல்லோர் விலாசமும் கொடுத்திடுங்க.. எவனையாவது பழி வாங்கணும்னா அவனுக்கு கொடுத்து விடுகிறோம். இல்லை இது போல்தான் தங்களுக்கும் வருகிறதா..??

அடுத்த சினிமா பதிவு எப்போ..??

முன்னரே சொல்லிடுங்க...

vinoth gowtham said...

தல மெய்யாலும் சொல்றேன் இந்த படத்த தியேட்டர்ல போய் பாக்குரிங்கன உங்களக்கு எம்புட்டு தைரியம் இந்தாங்க புடிங்க ஒரு பூச்செண்டு..

//dental doctor ராம் தயாரித்து நடித்திருக்கிறார். நடிக்கிறேன் பேர்வழி என்று நம்மை இம்சை படுத்துகிறார்.//

Mental doctorனு சொல்லுங்க ரொம்ப கரிகேட்ட இருக்கும்..

MayVee said...

எந்த படமும் வாங்காத ஸ்கோர் இந்த படம் வாங்கி உள்ளது டைம்ஸ் ஒப் இந்திய ல ....... 1/2 ஸ்டார் தான் இந்த படம்திற்கு .......

அது எல்லாம் சரி தேஜாஸ்ரீ க்கு பாட்டு இருக்கா????உங்களுக்கு தன்நம்பிக்கையும் தைரியமும் ஜாஸ்தி ன்னு நினைக்கிறேன்

KISHORE said...

லிங்க் குடுதுடோம்ல... யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்

ஷண்முகப்ரியன் said...

உங்களுக்கு எத்தனை முறைதான் எனது அனுதாபங்களைச் சொல்லுவது,ஷங்கர்.

எம்.எம்.அப்துல்லா said...

//dental doctor ராம் தயாரித்து நடித்திருக்கிறார் //

அண்ணே அவரு பல் டாக்டர் இல்லை, ஈ.என்.டி. டாக்டர். திருச்சி தில்லை நகரில் அவரது கிளினிக் உள்ளது. டெல்டா மாவட்டங்களான திருச்சி,புதுகை,கரூர்,பெரம்பலூர் மற்றும் ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டங்களில் ஈ.என்.டியில் நம்பர் ஒன் டாக்டர் அவர்தான். மிக இளம் வயதிலேயே அந்த நிலையை அவர் அடைந்தது பெரும் சாதனை. மூன்று ஆண்டுகளுக்கு முன் என் தந்தைக்கு மருத்துவம் செய்ய அவர் மருத்துவமனை சென்றிருந்தேன். கிளினிக் முழுக்க அவரோட பெரிய பெரிய ஃபுலோஅப் படங்கள். ஏதோ வில்லங்கமா இருக்கேன்னு நினைச்சேன். சினிமா ஆசை யாரைவிட்டுச்சு.

:)

எம்.எம்.அப்துல்லா said...

//Mental doctorனு சொல்லுங்க ரொம்ப கரிகேட்ட இருக்கும்..

//


தமிழ்நாட்டில் அத்தனை பேருக்கும் சினிமா ஆசை அடிமனதில் இருந்தே தீரும். நம்ப எல்லாருமே மெண்டல்தான்

:)

KaveriGanesh said...

தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொள்ளவும்.

சாமி அந்த தைரியிமெல்லாம் உங்களூக்கு தான் வரும்.அண்ணே எப்படின்னே இந்த மாதிரி படம் பார்க்கீரிங்க, அதையும் எங்களூக்காக பாத்து அதுக்கு விமர்சனம் போட்டு உங்க கடமைய விடாம செய்யுரிங்க.


எனக்கு தெரியுதுன்னே உங்க வலியும், வேதனையும் 3 மணி நேர மொக்க படம் பாத்து , விமர்சனம் போட்டு..... அப்பப்பா .

தலைவர் கலைஞர்ட்ட பேசி இந்த வருடம் கலைமாமணி அவார்டுக்கு ஏற்பாடு பண்றேன்

நையாண்டி நைனா said...

/*தைரியமிருந்தால் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து கொள்ளவும். */

ஹலோ... எஸ்சூஸ்... மீ...
உங்களுக்கு எவ்வளவு கொலவெறி இருந்த எங்களை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லுவீங்க..... ஆவ்வ்வ்......

Anbu said...

உங்களுக்கு தன்நம்பிக்கையும் தைரியமும் ஜாஸ்தி ன்னு நினைக்கிறேன்...

biskothupayal said...

நீங்க நெம்ப நல்லவரு

ஆனந்த் சதீஷ் said...

சாமி உங்களுக்கு கோடம்பாக்கத்துக்காரங்க கோவில் கட்டலாம். எவ்ளோ கடி படம்னாலும் அசராம பாக்குரீங்களே. Many thanks for saving us from these kind of movies.அடுத்த ஆஸ்கர் உங்களுக்குதான்.

வசந்த் ஆதிமூலம் said...

அண்ணே... நீயும் ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்து, நாங்களும் அதை படிச்சு கடைசியில மிச்சம் கேவலமான நாலு கமண்ட்ஸ் மட்டும்தான் அந்த படத்துக்கு. தயவுசெஞ்சு இந்த மாதிரி படங்களை பார்க்காத அண்ணே.

D.R.Ashok said...

ஹஹாஹஹாஹஹா

குப்பன்_யாஹூ said...

ஸ்ரேயாவுடன் ஒரு நாளும்.

ஆபாசமா தெரியது நண்பரே, பதிவு உலகில் ஆவது ஆபாசத்தை குறைபோமே.

குப்பன்_யாஹூ

ஜுர்கேன் க்ருகேர்..... said...

நன்றி

Joe said...

தில்லை நகர் நாலாவது கிராஸ்-ல பேசாமே மருத்துவத் தொழில் பண்ணிட்டு இருந்திருக்கலாம்.

ஏன் டாக்டர், காலம் போன காலத்தில, உங்களுக்கு இந்த வேலை?

தண்டோரா said...

ஏன்யா?ஊருக்கு போயிருக்கீர்னு நினைக்கேன்? போஸ்ட் ஸேட் பண்ணிட்டுத்தான் போனீரா?

தமிழ்ப்பிரியா said...

One small correction and Information. Dr.Ram is not Dental Specialist. He is very famous ENT specialist in Trichy

sankarfilms said...

intha padathukku vimarsanam thevaiya...sankar..?

sankarfilms said...

intha padathukku vimarsanam thevaiya...sankar..?

sankarfilms said...

intha padathukku vimarsanam thevaiya...sankar..?

pappu said...

எப்படி கண்ட படத்துக்கும் காச கரியாக்க்கிட்டு நிக்க முடியுது உங்களால. சீரியசாதான் கேக்குறேன்.

அத்திரி said...

மீண்டும் எங்களை காப்பாற்றிய தெய்வ்த்தின் தெய்வம்மே

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

Cable Sankar said...

//athukku intha padathukku oru tikket ethuthu kotukkalaam//

:(??

Cable Sankar said...

//ஹல்லோ... இப்படி எல்லாம் சொனன்னா.. நாங்க படம் பாத்துடுவோமா ?? நாங்கெல்லாம் ரொம்பவே வெவரமானவங்க.. அதான் கேபிள் சங்கர் படம் பாத்து சொல்லுவார்ல... அதுல நாங்க ரெம்பவே உஷாராகிடுவோம்..
//

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா நான கஷ்டபடறது பத்தி பிரச்சனையே இல்லை செந்தில்.. :(

Cable Sankar said...

//தல மெய்யாலும் சொல்றேன் இந்த படத்த தியேட்டர்ல போய் பாக்குரிங்கன உங்களக்கு எம்புட்டு தைரியம் இந்தாங்க புடிங்க ஒரு பூச்செண்டு..
//

:( நன்றி வினோத் கவுதம்

Cable Sankar said...

//லிங்க் குடுதுடோம்ல... யாரையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன்//

அதானே.. நன்றி கிஷோர்.

Cable Sankar said...

//உங்களுக்கு எத்தனை முறைதான் எனது அனுதாபங்களைச் சொல்லுவது,ஷங்கர்.

//

சில சமயம் நானே வருத்த பட்டுக்கிறது உண்டு சில படங்கள் பார்த்து. அதுல இது ஒண்ணு ஷண்முகப்பிரியன் சார்..

Cable Sankar said...

//தமிழ்நாட்டில் அத்தனை பேருக்கும் சினிமா ஆசை அடிமனதில் இருந்தே தீரும். நம்ப எல்லாருமே மெண்டல்தான்

:)
//

சரியா சொன்னீங்க அப்துல்லா.. அவருடய ஆசை தப்பில்லை.. எடுத்துகிட்ட கதையும், எடுத்த முறையும் தான் சரியில்லை..

Cable Sankar said...

//தலைவர் கலைஞர்ட்ட பேசி இந்த வருடம் கலைமாமணி அவார்டுக்கு ஏற்பாடு பண்றேன்//

அதுக்கு நீங்க இந்த படத்துக்கு இன்னும் மூணு டிக்கெட் வாங்கி கொடுங்க.. ரெண்டுத்துக்கு பிரயோஜனம் ஒண்னுதான்...காவேரி கணேஷ் அண்ணே..

Cable Sankar said...

//ஹலோ... எஸ்சூஸ்... மீ...
உங்களுக்கு எவ்வளவு கொலவெறி இருந்த எங்களை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லுவீங்க..... ஆவ்வ்வ்......//

நைனா.. அழுவாதிங்க.. அழுவாதிங்க.. நீங்க போக வேணாம். நான் டிவிடி அனுப்பறேன்.

Cable Sankar said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பிஸ்கோத்துபயல், அன்பு.

Cable Sankar said...

வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி வசந்த் ஆதிமூலம், ஆனந்த் சதீஷ்., சங்கர் பிலிம்ஸ்,

Cable Sankar said...

தமிழ் பிரியா,
ஜோ,
தண்டோரா,
ஜுர்கேன்,
ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

Cable Sankar said...

//ஸ்ரேயாவுடன் ஒரு நாளும்.

ஆபாசமா தெரியது நண்பரே, பதிவு உலகில் ஆவது ஆபாசத்தை குறைபோமே.

குப்பன்_யாஹூ

//

ஏன் தலைவா எல்லாத்தையும் ஆபாசமாகவே பாக்குறீங்க.. டாடா ஸ்கை கூடத்தான் டாடா ஸ்கை வாங்கினா அசினுடன் ஒருநாள்னு போடறாஙக.. அதுக்காக.. அதை அசிங்கமாவா எடுத்துக்கிறது..