Thottal Thodarum

Oct 1, 2008

செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

நான் முன்பே சொன்னபடி இந்தியாவில் நடக்கும் சைல்ட் செக்ஸ் டிராபிகிங் பற்றிய படம்குழந்தைகளை வாழவிடுங்கள்.. அட்லீஸ்ட் அவர்களது குழந்தைத்தனம் அவர்களிடமிருந்து இயல்பாக விலகும் வரையாவது.. ஏதாவது செய்யணும் சார்..Post a Comment

8 comments:

ஜோசப் பால்ராஜ் said...

மைனர் பொண்ணுங்க வேணும்னு கேட்குறவனையும், அந்த பொண்ணுங்கள வைச்சு வியாபாரம் செய்யிறவனையும் அங்க சுடனும் சார். பொது இடத்துல வைச்சு கல்லால அடிச்சு கொல்லனும். நம்ம ஊர்ல தான் சட்டம் பெருசா இல்லையே, என்ன செய்ய முடியும்? சட்டத்த காப்பாத்துறவங்களுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க?

ஊடக விமர்சனக் குழு said...

//
செக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்
//

முதலில் இம்மாதிரியான அருவருக்கத்தக்க தலைப்புகளை வைத்து சூடான இடுகைகளில் இடம் பிடிக்க முனைவதை நிறுத்துங்கள். அப்புறம் ஊருக்கு அட்வைஸ் செய்யலாம்.

குழந்தைகளின் பாலியல் வன்முறையை கூட எப்படி உங்களால் பரபரப்பாக்க முடிகிறது என்ற ஆச்சரியமும், எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது

மங்கை said...

Hmmm ithula awarness kondu vara vendiyahtu palaperukku... pen kuladaikal mattum illa.. aan kulandaikalum ithu maathiri sex traffic la maatikkaraanga... athuvum inga delhi la ithu romba jaasthi... indha vedio la peasinathu..Mrs. Anjali Gopalan... Naz Foundation ngura amaippa nadathi varaanga... ithula veliya varaatha thagavalkal neraiya irukku.. hmm

Nandri

cable sankar said...

//நம்ம ஊர்ல தான் சட்டம் பெருசா இல்லையே, என்ன செய்ய முடியும்? சட்டத்த காப்பாத்துறவங்களுக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க?//

சட்டமெல்லாம் இல்லாம இல்ல.. இருக்கு ஆனா நடக்க மாட்டேங்குது. இது நம்ம நாட்டுல மட்டுமில்ல.. உலகம் பூராவும், போதைமருந்து தொழிலை விட நிறைய பணம் புரளும் தொழில் இது தான்..ஜோசப் பால்ராஜ்

cable sankar said...

//முதலில் இம்மாதிரியான அருவருக்கத்தக்க தலைப்புகளை வைத்து சூடான இடுகைகளில் இடம் பிடிக்க முனைவதை நிறுத்துங்கள். அப்புறம் ஊருக்கு அட்வைஸ் செய்யலாம்.

குழந்தைகளின் பாலியல் வன்முறையை கூட எப்படி உங்களால் பரபரப்பாக்க முடிகிறது என்ற ஆச்சரியமும், எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது//

முதலில் நான் ஓண்றும் அருவருக்கத்தக்க தலைப்பு ஓண்றும் இடவில்லை. என்பது என் எண்ணம்.. அது மட்டுமில்லாமல் குழந்தைகளின் பாலியல் வன்முறையை நான் பரபரபாக்க முயலவில்லை. என்னால் முடிந்தவரை எல்லார் பார்வைக்கும் கொண்டுவர விழைகிறேன். ஏன் உங்களையே எடுத்து கொள்ளுங்கள்.. இதற்கு முன்னால் நான் இதே விஷயத்தை பற்றி மூண்று பதிவுகள் தொடர்ந்து எழுதி வருகிறேன், “என்ன கொடுமை சார் இது” என்ற தலைப்பில் போட்ட போது எல்லாம் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்.. நீங்களும் ஏதோ இருக்கும் என்றும் நினைத்து வந்து அருவருக்கதக்க வகையில் இருப்பதாய் உஙக்ளுக்கு பட்டிருக்கிறது. அது உங்கள் கருத்து.. முதலிலேயே என்னுடய பழைய பதிவுக்கு உங்களின் பின்னூட்டம் வந்திருந்தால்..பரவாயில்லை.. ஏதாயினும் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...ஊடக விம்ர்சன குழு...

cable sankar said...

//Hmmm ithula awarness kondu vara vendiyahtu palaperukku... pen kuladaikal mattum illa.. aan kulandaikalum ithu maathiri sex traffic la maatikkaraanga... athuvum inga delhi la ithu romba jaasthi... indha vedio la peasinathu..Mrs. Anjali Gopalan... Naz Foundation ngura amaippa nadathi varaanga... ithula veliya varaatha thagavalkal neraiya irukku.. hmm//

உண்மை தான் மங்கை.. நீங்கள் சொல்வது மாதிரி பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளூம் இம்மாதிரியான் செக்ஸ்டிராபிக்ங்கில் மாட்டி கொள்கிறார்கள்..நீங்கள் சொன்ன அஞ்சலி கோபாலன் போன்றவர்கள் மட்டும் போதாது.. நாம் ஓவ்வொருவரும் நம்மால் முடிந்தவரை உதவ முயல வேண்டும் என்பதே எனது எண்ணம்..மிக்க நன்றி மங்கை உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.மீண்டும் வருக..

cable sankar said...

//எப்படி உங்களால் பரபரப்பாக்க முடிகிறது என்ற ஆச்சரியமும், எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது//

என் மீது ஏற்படும் எரிச்சல், கோபத்தை நீங்களும் உங்கள் குழுவும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராய் காட்டி ஏதாவது செய்தால் மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன்.

ஜீவன் said...

. ஏதாவது செய்யணும் சார்..

ஆமாம்! ஏதாவது செய்துதான் ஆகவேண்டும்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா
இருப்பதே ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படுத்துகிறது !!