Thottal Thodarum

Oct 1, 2008

துரை -விமர்சனம்


ஓரு ராஜாவிடம் விசுவாசமான ஓரு தளபதி..தளபதிக்கு அழகான மனைவி, மகள், தளபதியை ஓரு தலையாய் காதலிக்கும் ராஜகுமாரி, தன் மகனிடம் அரசாட்சியை ஓப்படைக்க இஷ்டமில்லாமல் தளபதியை அடுத்த வாரிசாக அறிவிக்க, அரசரின் மகன் தனது ராஜா ஆசையின் காரணமாக தன் தந்தையை கொன்றுவிட்டு பழியை தளபதி மீது போட்டுவிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட பணிக்கிறான். தளப்தி மட்டும் தப்பிவிட்டு ஓரு க்ளேடியேட்டர் ஆகி அவனது நாட்டுக்கே திரும்ப வந்து அரசனை கொன்று நல்லாட்சி த்ருகிறான்.. இது தான் க்ளேடியேட்டரின் கதை.


ராஜாவுக்கு பதிலாக ஓரு நல்ல அரசியல்வாதி, நேர்மையான அல்லக்கை ஹீரோ, ஹீரோவுக்கு நல்ல அழகான மனைவி, மகன், அரசியல்வாதியின் மகள் ஓரு தலையாய் ஹீரோவை காதலிக்கிறாள். அரசியல்வாதியின் மகன் அடுத்த முதல்வர் ஆக அசைப்பட்டு தன் தந்தையை கொன்று பழியை ஹீரோவின் மீது போட்டு போலீசை விட்டு என்கவுண்டர் செய்ய போக அதிலிருந்து தப்பித்த ஹீரோவுக்கு தான் யார் என்று மற்ந்து போய்விட, அதனால் தான் யார் என்றே தெரியாமல் அலைய, பின்னால் ஓரு மணிநேரத்திற்கு பின் ஞாபகம் வந்து தன் நிலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து எல்லோரையும் கொன்று வென்று வெற்றி வாகை சூடுகிறார்.ஆவ்..ஆவ்..

பிக்சர் சூசினப்புடு நான் ஏன் அனுமானம் ஓஸ்துந்தி அண்டே..? சே.. என்ன தெலுங்குல எழுத ஆரம்பிச்சிட்டேன்..சாரி பக்கா மசாலா தெலுங்கு படம் பார்த்த பீல்ல எழுதிட்டேன்.

வர வர விவேக்குக்கு செல்ப் எடுக்க மாட்டேங்கிறது.. செம போர்.. அர்ஜூன் வழக்கம் போல ரோபோ போல் முகம் வைத்து தன்னுடய் சிக்ஸ்பேக்கை யெல்லாம் காட்டுகிறார். இவருக்கு இருக்கும் சிக்ஸ் பேக்கில் ஹீரோயின் கீரத்துக்கு கொடுத்திருந்தால் பார்க்க நன்றாக இருந்திருக்கும்.. மரபாச்சி பொம்மை போல் இருக்கிறார்.

சில நல்ல கதைகளை உல்டா செய்யும் போது இப்படி கொத்து புரோட்டா போல் ஆகிவிடுவது உண்டு, இவ்ர்களும் ஓழுங்காய் பண்ணாமல், அதனால் நல்லா பண்றவங்களையும் பண்ண்விட மாட்டாஙக.. அது போலத்தான் துரையும்..

Post a Comment

12 comments:

சரவணகுமரன் said...

செம பாஸ்ட் நீங்க...

சுபாஷ் said...

ஃஃஇவருக்கு இருக்கும் சிக்ஸ் பேக்கில் ஹீரோயின் கீரத்துக்கு கொடுத்திருந்தால் பார்க்க நன்றாக இருந்திருக்கும்.. மரபாச்சி பொம்மை போல் இருக்கிறார்.ஃஃ

ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ

cable sankar said...

//செம பாஸ்ட் நீங்க...//
நன்றி சரவணகுமரன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

cable sankar said...

//ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹ//

உங்களுக்கு சிரிப்பா இருக்கு.. பார்த்த எனக்கு ???
நன்றி சுபாஷ்

அதிஷா said...

ம்ம் இந்த படமும் அம்பேலா..

ஆண்டவா தமிழ்மக்கள காப்பாத்த நீயாவுது படம் எடேன்

cable sankar said...

//ஆண்டவா தமிழ்மக்கள காப்பாத்த நீயாவுது படம் எடேன்//

அதிஷா கடவுள் மனுச ரூபத்திலதான் வந்து காப்பாத்துவான்னு சொல்வாங்க.. அது என் மூலமா உங்களையும், லக்கியையும், காப்பத்ததான் என் மூலமா உங்கள காப்பாதியிருக்கு. அதனால் ரெண்டு பேரும் எஸ்கேப் ஆயிடுங்க..

ஜுர்கேன் க்ருகேர் said...

வெள்ளித்திரையில் சொல்லப்படாத கதைகள் ஆயிரமாயிரம் இருக்க ஏற்கனவே வெளிவந்து ஓடியதை "சுட்டு" படம் பாக்கிற மக்களுக்கு "சூடு" போடற இவங்களை
என்ன பண்ணலாம் சார்?

cable sankar said...

//வெள்ளித்திரையில் சொல்லப்படாத கதைகள் ஆயிரமாயிரம் இருக்க ஏற்கனவே வெளிவந்து ஓடியதை "சுட்டு" படம் பாக்கிற மக்களுக்கு "சூடு" போடற இவங்களை
என்ன பண்ணலாம் சார்?//

சொல்லபடாத கதைகள் எல்லாம் வெகுஜனசினிமால சொல்ல முடியாது தலைவரே... அவங்களும் என்ன செய்வாங்க..எதை கொடுத்த மக்களூக்கு பிடிக்கும்னு தான் தேடிகிட்டு இருக்காஙக..

முரளிகண்ணன் said...

\\செம பாஸ்ட் நீங்க\\

repeateeeeeeeeeeee

கடைசி பக்கம் said...

சங்கர்,

இப்பதான் பார்த்துட்டு வந்தேன். ரத்தம் சொட்ட சொட்ட.

cable sankar said...

நன்றி முரளிகண்ணன்..உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்..

cable sankar said...

//இப்பதான் பார்த்துட்டு வந்தேன். ரத்தம் சொட்ட சொட்ட.//

சேம்..ப்ளட் ஆ???.. இதே கதையை க்ளேடியேடர்ல எப்படி எடுத்திருக்காங்கன்னு ஓரு முறை டிவிடியை பாருங்கள்.