உன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்
என்னுடய விமர்சனங்களில் எ.வ.த.இ.மா. படம் என்று சில படங்களை சொல்லி எழுதியிருக்கிறேன். அதாவது எப்போது வரும் தமிழில் இந்த மாதிரி படம் என்று.. இப்போது வந்திருக்கிறது.. அப்படி எதிர்பார்த்த ஒரு தமிழ் படம்.. உன்னை போல் ஒருவன். வீட்டுக்கு காய்கறி வாங்கிப் போகும் பையிலிருந்து விழுந்த தக்காளியை கூட விடாமல் பொறுக்கிக் கொண்டு போகும் ஒரு குடும்பஸ்தன். ஒரு சாதாரணன். சென்னையின் ஐந்து, ஆறு இடங்களில் பாம் வைத்துவிட்டு, கமிஷனருக்கு போன் செய்கிறான், நான்கு தீவிரவாதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி பூங்காவான தமிழ்நாடு கந்தர்கோளமாகிவிடும் என்று. அப்போது சூடு பிடிக்கும் கதை, படம் முடியும் வரை குறையவேயில்லை. அப்படி ஒரு வேகம். சமீப காலங்களில் படத்தில் வரும் காட்சிகளுக்கு கைதட்டல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதில் பல காட்சிகளுக்கு நாம் நம்மை மறந்து கைதட்டிவிடுவோம் அவ்வளவு ஷார்ப். இரா.முருகனின் வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய பலம். முக்கியமாய் லஷ்மி, மோகன்லால் பேசும் காட்சிகள், அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கும் பகைமைகள், போராட்டங்களை கிண்டலும், நக்கலுமாய் பேசும் வ்சனங்கள், கமலுடன், மோகன்லால் பேசும் வசனங்கள், க...