காவலன்
அன்புள்ள இளைய தளபதி விஜய்க்கு, வழக்கமாக உங்களது படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப்படமும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் ஓப்பனிங் இருக்கும் முக்கிய நடிகர்களில் நீங்களும் ஒருவர். கடந்த சில படங்களாய் உங்களது கேரியர் கிராபில் நிறைய டவுன்ஃபால் என்பதை புரிந்துக் கொண்டு எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று குழம்பிப் போய் எதை எதையோ முயற்சி செய்துவருகிறீர்கள். அப்படி எடுத்த படம் வெளிவருவதற்கு கஷ்டப்படுகிறது என்றால் அது எவ்வளவு பெரிய பிரச்சனை. தியேட்டர் கிடைக்கவில்லை, ஆளுங்கட்சி சதி, அந்த இடத்தில் ப்ரஷர், இந்த இடத்திலிருந்து பிரஷர் என்றெல்லாம் நீங்கள் சொல்லாமல் சொன்னாதாய் நிறைய கதைகள் உலா வருவதும், இப்படம் உங்களுக்கு ஒரு பிரஸ்டீஜ் என ஃபீல் செய்ததால் எப்பாடு பட்டாவது ரிலீஸ் செய்தாக வேண்டிய நிலையில் உங்கள் சொந்த காசை போட்டு ரிலீஸ் செய்ததாக சொல்லப்படுவதும் இண்ட்ரஸ்டிங்கான கதை. நிஜத்தில் உங்கள் முந்திய படங்களின் பாதிப்பினால் படத்தை முக்கிய ஆட்கள் வாங்காமல் போக, சக்தி சிதம்பரம் 28 கோடிகளுக்கு வாங்க ஆசைப்பட்டதும், தியேட்டர்காரர்களிடம் எம்.ஜி வாங்கி ஒரு லாப...