படித்து கிழித்தவை 2011
சென்ற வருடம் டிசம்பரில் ஆரம்பித்து இந்த டிசம்பர் வரை ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்கியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல், புத்தகமெல்லாம் வெளியிட்டிருப்பதால் நம்மையும் லைட்டாக இலக்கியவாதிகள் எல்லாரும் தங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கெல்லாம் அழைப்பதாலும், சில சமயம் நானாகவே ஆஜராகி நானும் ஆட்டத்தில் இருக்கிறேன் என்று நிருபிக்க வேண்டிய கட்டாயத்தால் இம்மாதிரி கூட்டங்களுக்கு போய் வரும் போது வாங்கிய புத்தகங்கள். நம்மை மதித்து படிக்க சொல்லி கொடுத்த புத்தகங்கள், அப்புறம் கிழக்கு வருஷம் பூரா போட்ட கழிவு விலை புத்தகங்கள் என்று ஏகப்பட்டது சேர்ந்துவிட்டது. அவைகளில் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்பாய் இந்த கட்டுரை அமையும் என்ற எண்ணத்தில்தான் எழுதப்படுகிறதே தவிர என்னை பெரிய படிப்பாளி என்று காட்டிக் கொள்ள விழைய அல்ல என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.