Posts

Showing posts with the label malayalam film reveiw

Premam

Image
இம்மாதிரியான காதல் பட டைட்டில் படங்களை எல்லாம் சட்டென பார்த்துவிட முடியாதபடி பல படங்களை கடந்து வந்திருந்தாலும், அல்போன்ஸ் புத்ரன், நிவீன் பாலி என்பதால் டிக்கெட் புக் செய்தாயிற்று. ரொம்பவே சிம்பிளான கதை. +2 படிக்கும் போது ஆரம்பிக்கும் ஜார்ஜின் காதல் தான் கதை. 

Annayum Rasoolum

Image
காதல். அது என்ன மாதிரியான அவஸ்தைகளை கொடுக்கக் கூடியது என்று காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயம். என்ன தான் காதலிப்பவர்களுடன் பயணித்த அனுபவம் இருந்தாலும், சமயங்களில் இவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் செய்யும் எதிர்ப்பார்க்கும் நிறைய விஷயங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்களே.. என்று தோன்றும். இப்படியான காதல் கதைகளை திரைப்படமாய் எடுக்கும் போது எனக்கு தெரிந்து ரெண்டு விதமாய்த்தான் படம் முடியும். ஒன்று சந்தோஷமான ஹேப்பி எண்டிங். இரண்டாவது சோகம்.  அன்னையும் ரசூலும் ரெண்டாவது வகை.

Shutter (Malayalam)

Image
  கத்தியின்றி, ரத்தமின்றி சீட்டு நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லரை சமீப காலத்தில் பார்த்ததாய் நினைவில்லை. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. தேடிப் பிடித்து டவுன்லோடிட்டு உடனடியாய் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். சமீப கால மலையாள படங்கள் எல்லாம் கதை களங்களில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படியாப்பட்ட ஒரு கதைதான் இந்த ஷட்டர்.

Ustaad Hotel

Image
 சில திரைப்படங்களை பார்க்கும் போது அடடா எப்படி இந்தப் படத்தை மிஸ் செய்தோம் என்று வருத்தப்பட வைக்கும். அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் இந்த உஸ்தாத் ஓட்டல். ஒரு முறை பதிவர் சிவகுமார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சாப்பாட்டுக்கடை ஓனராகிய நான் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி நான் தேடி போவதற்குள் தியேட்டரை விட்டு போய்விட்டது. 

Amen

Image
 மலையாள திரையுலகின் தற்போதைய ஹாட் ஸ்டார் பாஹத் பாசில் தான் போல. தொடர்ந்து ஹிட் படங்களாகவே அளித்து வருகிறார். இவரது அடுத்த ரிலீஸ் மம்முட்டியுடன் சேர்ந்து நடிக்கும் ஒர் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சரி ஆமெனுக்கு வருவோம். குமரன்காரி எனும் ஒரு கேரள கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தையும், அங்கே பேண்ட் வாசிக்கும் குழுவை பின்னணியாய் வைத்து அமைக்கப்பட்ட கதை. 

Run Baby Run

Image
  தட்டத்தின் மறையத்து, 24 ஃபீமேல் கோட்டயம் போன்ற படங்கள் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் தைரியமாய் மோகன்லால் படத்தை பார்க்க போய்விட்டேன். முன் சொன்ன படங்கள் எல்லாம் நவ கேரள இளைஞர்களின் படங்கள். ஆனால் இந்தப் படமோ, பழைய ஜோஷி, ரொம்ப பழைய மோகன்லால், ஆர்.டி.ராஜசேகர் என்று பழகிய டீம். ரிஸ்க் எடுப்பதுதான் நமக்கு ரஸ்க் சாப்பிடுவது போலத்தானே என்ற தைரியத்தில் பார்க்கப் போனவனை அழுந்தப் பிடித்து உட்கார வைத்துவிட்டது இந்த ரன் பேபி ரன்.

22 Female Kottayam

Image
சில படங்களைப் பார்த்த மாத்திரத்தில் முதல் காட்சியிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடும். அப்படியான படங்களை சமீப காலத்தில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ, பார்க்கவில்லை. இத்தனைக்கும் பெரிய நடிகர்களோ, டெக்னீஷியன்களோ இல்லாத ஒரு படம் தான். ஆனால் படம் பார்த்து முடித்தும் தாக்கம் இருந்து கொண்டேயிருந்தது. தமிழில் இம்மாதிரியான கதைக்களன்களோடு எப்போது படம் வருமோ என்று ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம்.

Thattathin Marayathu

Image
  மலையாளப் படங்களை தியேட்டர்களில் பார்த்து நிரம்ப நாளாகிவிட்டது. அதற்கு காரணம் லாலேட்டனும், மம்முவும்தான். ஒரு காலத்தில் மலையாள படங்களை பார்க்க காரணமாயிருந்தவர்களும் அவர்கள் தான். கடந்த சில வருடங்களாய் அவர்களின் படங்களின் ட்ரைலரைப் பார்த்தாலே தெரித்து ஓடக்கூடிய வகையில் இருந்ததால் மலையாளக் கரையோரத்தில்  டிராபிக், பாஸஞ்சர் போன்ற படங்களைப் பார்த்து  அவ்வப்போது மலையாளக் கரையோரம்கால் நினைத்துக் கொண்டிருந்தேன்.  சால்ட் அண்ட் பெப்பர் வேறு நன்றாய் இருப்பதாய் சொன்னார்கள். மலையாள திரையுலகில் புது வெள்ளமாய் வாரிசுகள் பல பேர் நுழைந்து கொஞ்சம் புதுக் காத்து வீசத் தொடங்கியிருப்பது சந்தோஷமாய் இருக்கிறது. அந்த வகையில் எழுத்தாளர், நடிகர், இயக்குனர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் ஸ்ரீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் சமீபத்திய ஹிட் என்று சொன்னதால் ஆஜரானேன்.

Neelathamara(2009)

Image
சமீபகாலமாய் மலையாள படங்கள் பார்ப்பது குறைவாகிவிட்டது. அதையும் மீறி சில நண்பர்கள் ரெகமண்டேஷனில் சில படங்கள் பார்ப்பதுண்டு அப்படி வந்த சிபாரிசில் நான் பார்த்த படம் தான் நீலத்தாமரை. எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில், லால்ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்று சொன்னார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னால் இதே பெயரில் வெளிவந்த படத்தைத்தான் ரீமேக்கியிருக்கிறார்கள் என்பது உபரி செய்தி. வழக்கமாய் மலையாளத்தில் அவ்வளவாக காதல் கதைகள் பார்த்ததில்லை. இது ஒரு காதல் கதை. வயதான முத்தச்சி ஒருத்தி தனியாய் உடல் நலம் குன்றியிருக்க, அவரை பார்க்க, அவரது டாக்குமெண்டரி எடுக்கும் பேத்தியும், மருமகளும் வருகிறார்கள். பேத்தி அவ்வூர் கோயிலில் இருக்கும் ஒரு அதிசயமான காசு வைத்து தொடர்ந்து கடவுளிடம் வேண்டினால் மட்டுமே பூக்கும் நீலநிற தாமரை பூவை பற்றி டாக்குமெண்டரி எடுக்கிறாள். முன்பு அந்த முத்தச்சியின் வீட்டில் வேலை பார்த்த குஞ்சுமோல்  அவரை பார்க்க வருகிறாள். வந்த இடத்தில் மருமகளும், குஞ்சுமோலும் தங்க நேரிட, இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது மருமகள், குஞ்சுமோலிடம் உனக்காக என் கணவர் சாவதற்கு ரெண்ட...