Posts

Showing posts with the label குத்து

ஒரு உதவி இயக்குனர், இயக்குனர் முகத்தில் குத்து விட நினைக்கும் தருணங்கள்.

1. காலையில் அடித்து பிடித்து பக்கத்து ரூம் சாப்ட்வேர் பையனின் பைக்கில் லிப்ட் வாங்கி.. காலை டிபன் சாப்பிட வந்தால். இன்னைக்கு ப்ரொடியூசர் வரலை.. அதனால டிபன் கிடையாதுன்னு சொல்லிட்டு, இவரு மட்டும் ஆறு இட்லி வடகறி சாப்பிட்டு ஏப்பம் விடறப்ப....ஒரு குத்து. 2. தனியா டீ சாப்பிடும் போது இந்த சீனில எனக்கு சரியா செட்டே ஆவுலடா.. என்று புலம்புவதை பார்த்து மனமிறங்கி தன் படத்துக்காக வைத்திருக்கும் ஒரு சீனை வேறு வழியில்லாமல் உருவிவிட்டு, மத்யானம் லஞ்ச் முடிஞ்சதும், “ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு, ஒரு ஸ்பார்க் வந்து, ஒரு சீன் சொல்றேன் பாரு” என்று அவன் முன்னால் வைத்தே தன் சீனாய் சொல்லும் போது ஒரு குத்து 3. கம்ப்யூட்டர் என்றால் ஏதோ ஜீபூம்பா பெட்டி என்று ”அப்படியாடா..ன்னு ” கேட்டு வாய் பிளந்து தமிழில் டைப் அடிப்பதை பார்த்துவிட்டு , ப்ரொடியூசர் வரும் போது. “எல்லாம் ரெடியாயிருச்சு சார்.. இப்பத்தான் என்.ஹெச்.எம் டவுன்லோட் பண்ணி.. கம்ப்யூட்டர்லேயே அடிக்க சொல்லி பழக்கப்படுத்தியிருக்கேன். ரெண்டு நாளில ரெடியாயிரும். இப்பத்தான் பழகறான் அதான் கொஞ்சம் ஸ்லோ பையன்.  ஸ்கிரிப்டு.. டி.டி.பி. செலவு மிச்சம் பாருங்க..” ...