7Khoon Maaf- சூசன்னாவின் ஏழு கணவர்கள்.
ஒவ்வொரு இயக்குனருக்கு ஒவ்வொரு விதமான படங்கள் அவர்கள் வசப்படும். ஆனால் இவருக்கு மட்டும் ஒவ்வொன்றும் ஒருவிதம். மக்கடேவிலிருந்து கமீனே வரை எல்லாமே தனிரகம். இசையமைப்பாளராய் தன் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்து, இன்று ஒரு சிறந்த இயக்குனராய் பரிமளிக்கும் விஷால் பரத்வாஜின் அடுத்த படம் எனும் போது ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை தன் வித்யாசமான கதை சொல்லலினால் மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.