Acid Factory - Film Review
ஒருவன் திடீரென கண்முழித்து பார்க்கிறான். தான் ஒரு பாழடைந்த பேக்டரியில் இருப்பதை உணர்கிறான். தன்னை பற்றி ஏதும் அவனுக்கு தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் ஒருவன் கைவிலங்கிட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, இன்னொருவன் ஒரு சேரில் கட்டப்பட்டு, மயக்கமாக இருக்க, இன்னொருவன் தரையில் மயங்கி இருக்கிறான். ஒவ்வொருவராக மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் யாருக்கும் அவர்களை பற்றிய ஞாபகங்கள் இல்லை. தாங்கள் யார் எதற்காக வந்தோம், தங்களது பெயர் என்ன என்பது கூட தெரியாமல் இருக்க, அப்போது ஒரு போன் வருகிறது அங்கிருக்கும் ஒருவனை கொல்ல வேண்டும் என்று நான்கு ஐந்து பேர்களின் பெயரை ஒருவன் குறிப்பிட, குத்துமதிப்பாக அவனுடன் பேசி, இவர்களுள் யார், யாரை கொல்ல போகிறார்கள் என்று பயத்தினூடே, அலைய, திடீரென இன்னொருவன் வர, அவனை தொடர்ந்து ஒரு பெண்ணும் அங்கே தோன்ற, அவளுக்கும் அதே பிரச்சனை தான் யார் என்பதுதான். அவர்களூடய ஞாபக மறதிக்கு காரணம் அவர்கள் இருக்கும் ஆசிட் பாக்டரியில் உள்ள பெண்டேன் என்கிற ஆசிட்டினால் என்பதை அறிகிறார்கள். இதற்கு நடுவில் கதையின் போக்கில் முன்னும் பின்னும் ஓடுகிறது அதில் படத்தில் காட்டப்படும...