Posts

Showing posts with the label luckylook

Luckylookகின் விழா..

Image
நமது தோழர் லக்கிலுக் அவர்கள் எழுதிய “விளம்பர உலகம்” என்கிற புத்தக வெளியீட்டு விழா, கிழக்கு பதிப்பகம் மொட்டை மாடியில் மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைப்பெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு குட்டி பதிவர் சந்திப்பு போலவே இருந்தது. சரியாக ஆறு மணிக்கு ஆரம்பிக்க பட்டது விழா.. நான் வழக்கம் போல் ஏழு மணிக்கு சரியாய் போய்விட்டேன். மிக சொற்பமான கூட்டமே இருந்தது. லக்கி ரொம்ப நல்ல பிள்ளையாய் உட்கார்ந்திருந்தார். திரு.வள்ளியப்பன் அள்ள அள்ள பணம் நூலாசிரியர் அவர்கள் நூலை வெளியிட்டு பேசினார். பதிவர்களில் நர்சிம், அதிஷா, முரளிகண்ணன், உருப்படாதது, டாக்டர் புருனோ, அக்னிபார்வை, அரவிந்த,மற்றும் சிலரும் வந்திருந்தார்கள்.. விளம்பர உலகம் புத்தகத்துடன் மால்கம் எக்ஸ் என்ற ஓரு புத்தகத்தையும் அறிமுக படுத்தினார்கள். கேள்வி நேரத்தில் லக்கிலுக்கிடம் மீடியா சம்பந்தமான பல கேள்விகள் கேட்கபட்டன. அவரும், வள்ளியப்பன் சாரும் பல சுவாரஸ்யமான விஷயங்களை எடுத்து கூறினார்கள். கேள்விகள் தேவையில்லாமல் திசைமாறி விளம்பர உலகின் அரசியல், நுண்ணரசியல் என்று கேனத்தனமாய் போனது. அதில் முக்கியமான ஒரு கேள்வி.. ஏன் கருப்பான பெண்களை விளம்பர உல...

சூடான இடுகை - லக்கிலுக்கின் தொடர்ச்சி....

Image
அந்த சகோதர கடை ஓனர்கள், நடத்திய விஷயங்கள் ஒன்றும் புதுசில்லை. ஏனென்றால் இதுக்கு முன்னாலே இவர்கள் கடை நடைத்திய போது அவர்களின் பல ஏரியாக்களில் கடை ஆரம்பிக்கும் போது அதை இப்போது எதிர் கடையில் நிர்வாகம் பார்த்து கொண்டிருக்கும், அவரை வைத்துதான் சகோதரர்கள் ஆரம்பிப்பார்கள். அவரும் அங்கு திறமையாய் கடை நடத்தி அந்த கடையை நெ.1 என்று கொண்டு வந்தவுடன் அவரை மீண்டும் வேறு ஊரில் கடை நடத்த அனுப்பி வைப்பார்கள். பின்பு அவர்களுக்கு என்ன பிரச்சனையோ.. அவரிடம் எந்த காரணத்தை கொண்டும் திரும்பவும் அவர்களின் கடை நடத்தும் தொழிலுக்கு வரக் கூடாது என்று மிரட்டி எழுதி வாங்கி கொண்டு அவரை விரட்டி விட்டதாகவும் ஒரு விஷயம் உண்டு. இதற்கு அப்போது அந்த குடும்பத்தின் பெரியவரின் ஆசியுடன் தான் நடத்த பட்டது. அதை வைத்துதான் பெரியவர் தனியாய் கடை ஆரம்பித்ததும், சரியாய் அந்த நிர்வாகியை கூட்டி கொண்டு வந்தது, சகோதர கடைகாரர்களூக்கு பீதீயை கிளப்பிவிட்டது. நிர்வாகிக்கும் சரியான ஆதரவு பெரியவர் தந்ததால் ஒரே வருடத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் புதுக் கடையை கொண்டுவந்துவிட்டார். புதுசாய் எல்லா பெரிய கம்பெனி சரக்கும் பெரியவர் நடத்தும் கடைக்...

அதிஷா, லக்கிலுக், உண்மைதமிழன்,இட்லிவடை,ஜூர்கேன்,பரிசல்,செந்தழல்ரவி........

Image
வலையுலக பெரியவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி, தன்யவாத், நன்னி.. சாலசந்தோசம்.. என்ன இவ்வளவு சந்தோஷமின்னா நான் 2006லிருந்து பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தாலும், அவ்வப்போதுதான் எழுதுவேன்.. அது என்னவோ தெரியல,, என்ன மாயமோ தெரியல..கடந்த ரண்டு மாசமா தொடர்ந்து எழுதிட்டு வரேன். கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் என்னுடய பதிவுக்கு கிட்டத்தட்ட 12ஆயிரத்து சில்லறை பேர் வந்து போயிருக்காங்கன்னு தெரிஞ்சதும் புல்லரிச்சு போச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் சக பதிவாளர்களாகிய நீங்கள் தான். முக்கியமா என்னுடய பதிவுகளை தொடர்ந்து வாசிச்சு கருத்துகளை எழுதும்,தமிழ்நெஞ்சம், அதிஷா, ஹரி, ஜூர்கேன்,அருப்புக்கோட்டை பாஸ்கர்,தமிழ்நெஞ்சம்,தமிழ்பறவை தமிழ்சினிமா, சிம்பா, ராமன், ஆதிரை ஜமால். ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன். அதுமட்டுமில்லாது என்னை எழுத தூண்டிய பதிவுகளை எழுதிய, அதிஷா, ஷேர்ஹண்டர், உண்மைதமிழன், லக்கிலுக்,இட்லிவடை, பரிசல்காரர்,செந்தழல் ரவி போன்ற சிறந்த பதிவர்களுக்கும் என் நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இதுல பல பேர் விட்டு போயிருக்கலாம் அவங்கெல்லாம் என்னை திட்டக்கூடாது.. 10000த்தை தாண்டுன சந்த...